வெற்றி சூத்திரங்கள்-நேர நிர்வாகம்

உங்கள் நேரத்தை நிர்வகிக்க உதவும் அற்புதமான வலைத்தளம். www.rememberthemilk.com நமது பணிகளைப் பட்டியலிட்டு அவற்றில் நமது மேம்பாட்டுக்கு உதவும் பணிகளை முதன்மைப்படுத்தி செயல்படுவது நேரமேலான்மையில் மிக முக்கியமான பாடம்.

அமரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் கூறியதுபோல அவசரமான வேலைகளெல்லாம் முக்கியமானவை அல்ல முக்கியமான வேலைகளெல்லாம் அவசரமனவயும் அல்ல. திட்டமிடாது அவசரகதியில் வேலைப்பார்த்து பழகுவது ஆபத்தானது. இது விரைவில் சோர்வடையச் செய்து அலுப்பையும் சலிப்பையும் தரும்.
நேர்மாறாக நேரத்தைத் திடமிடாதோர் கவனக்குறைவு நோயினால் பாதிக்கப்படுவர். எளிய மொழியில் சோம்பேறிகள் என அழைக்கபடுவர்.

நேரத்தை பொன் செய்ய சில விதிகள்
எந்தப் பணி உங்கள் வாழ்வினில் முன்னேற்றத்தை தருமோ அப்பணியை நோக்கி உங்கள் அன்றாட செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளுங்கள். எபோதும் அப்பணியைக் குறித்த விழிப்புடன் இருங்கள். நேரத்தை சாப்பிடும் விசயங்களைத் தவிர்க்கவும்

நேர நிர்வாகத்தின் பல்வேறு காரணிகளைச் சொல்லி நம்மைக் குழப்பாமல் மிக எளிய முறையில் நேரநிர்வகத்தை செய்ய உதவுகிறது ஒரு வலைத்தளம். ஒரு முறை வ்வ்வ்.ரேமேம்பெர்தேமில் .கம என்கிற ஆஸ்திரேலிய வலைதளத்திற்கு சென்று பாருங்கள். இந்தத் தளம் நமது பணிகளைப் பட்டியலிட்டு, முக்கியப் பணிகளை முதன்மைப்படுத்த உதவி நமது நேரத்தை நாம் செவ்வனே நிர்வகிக்க உதவுகிறது.

நமது பணிகளை நாம் விரும்பும் தலைப்புகளில் பட்டியலிட்டு அவை குறித்த நினைவூட்டல்களை நமது மின்னஞ்சலுக்கு அனுப்புகிறது இத்தளம். நமது பணிகளை அழகா பிரிண்ட் செய்தும் தரும் இத்தளம். மேலும் நாம் கீழ ஆறாம் வீதியில் நண்பரை சந்திக்கவேண்டும் என நகர் வரைபடத்தில் குறித்தால் கீழ ஆறாம் வீதியை நெருங்கும்போதே நமது செல் அலறும். செல் ஜி பி எஸ் வசதி கொண்டதாய் இருந்து தளத்தின் மென்பொருளை நாம் செல்லிலும் நிறுவியிருந்தால் இது சாத்தியப்படும்.


சும்மாதான் கொஞ்சம் ட்ரை பண்ணுங்களேன்.
நேர நிர்வாகம்,நேர மேலாண்மை,நேர நிர்வாக தளம்

Comments