கல்வி, விழா, ஒரு விருது...

ஒரு குழந்தை நான்காம் வகுப்பில் இருக்கும் பொழுதே தனது   ரோல் மாடலை தேர்ந்தெடுத்து விடுகிறது என்கிறது   உளவியல். முதியோர் இல்லங்கள் இல்லாத ஒரு காலத்தில் தங்கள் தாத்தாக்கள், பாட்டிகள் மூலம் குழந்தைகளுக்கு கதைகள் மூலம் நல்ல நல்ல முன்மாதிரிகள் கிடைத்த வண்ணம் இருந்தனர்.



இன்றைய குழந்தைகள் பெரும்பாலானோர்க்கு  அந்த வாய்ப்பு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. எனவே அவர்கள் சிகரட்டை தனது எதாவது ஒரு துவாரத்தில் புகைக்கும் திரை நட்சத்திரங்களையோ, வீணாப் போன குழந்தைகள் சானலில் வரும் பலரை டாவடிக்கும் ஒரு கதா பாத்திரத்தையோ தங்கள் முன்மாதிரியாக  ஆதர்சமாக எடுத்துக்கொள்ளும் ஒரு துர்பாக்கிய நிலை. இது தான் சமூகத்தின் இன்றைய பல அவலங்களுக்கு ஆரம்பப்புள்ளி.

இந்நிலையில் ஆசிரியர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் நல்ல முன்மாதிரிகளை இடையறாது மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் கடமை  இருக்கிறது. மாணவர்களை மதிப்பெண் எடுக்க வைப்பதை விட இது ஒரு முக்கியமான பணி.  சமூக கட்டமைப்பின் அச்சாணி இது.

சில பள்ளிகள் இந்தப் பணியை மிக சிறப்பாக செய்துவருகின்றன என்றே தோன்றுகிறது. இருண்ட வானில் ஓரிரு நட்சத்திரங்களை பார்த்தால் கூட நமக்கு ஒரு நம்பிக்கை கிடைக்குமே அதுபோல இப்பள்ளிகள் நல்ல சில பணிகளை செய்துவருகின்றன.

 திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளி ஆண்டுதோறும் முன்மாதிரி மனிதர்களை  கண்டறிந்து அவர்களை மாணவர்களுக்கு ஒரு கொண்டாட்டத்தின் மூலம் அறிமுகம் செய்து வருகிறதை அய்யா . பி.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் சொன்னபொழுது ரொம்ப மகிழ்வாய் இருந்தது.

விழாவில் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டிருந்தார் அய்யா. திரு.பி.கிருஷ்ண மூர்த்தி. விழா ஏற்பாடும் அழைப்பாளர்கள் மரியாதை செய்யப்பட்டவிதமும் மிகுந்த தரத்துடன் இருந்ததாக அய்யா குறிப்பிட்டார்.அய்யா தனது வருவாய் முழுவதையும் புத்தகங்களுக்காக செலவிட்டு தனது இல்லத்தையே ஒரு பிரமாண்டமான நூலகமாக மாற்றிவைத்திருப்பவர்.
திரு.பி.கே. அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது 

குழுமியிருந்த அத்துணை மாணவர்களும் ஒரு முன்மாதிரியை விழாவில் விருது பெற்ற சாதனையாளர்களில்  இருந்து தேர்தெடுத்துக் கொண்டிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

எஸ்.ஆர்.வி. பள்ளி இந்த விதத்தில் ஒரு நல்ல முன்னோடி. வாழ்த்துக்கள் . 

அன்புடன்
மது

விழாவின் சில  படத்துளிகள்
விருது

விழாவின் அழைப்பு

விருதுபெற்றோர்

அழைப்பின் உறை

 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேடு, அதில் அய்யா திரு.பி.கே குறித்து


Comments

  1. விழாவைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

      Delete
  2. அன்பு சகோவிற்கு வணக்கம்
    அய்யா கே.பி அவர்களை முன்மாதிரியாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய எஸ்.ஆர்.வி பள்ளியின் செயல் மிகவும் போற்றதலுக்குரியது. அவர்கள் அதை மிக தரமாக நடத்திய விதம் அருமை. விழா சம்பந்தமான அனைத்து விவரங்களையும் அழகாக பதிந்து மகிழ்ந்த தங்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. நாளை உங்கள் ஊரில் காலை மட்டும்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  3. அய்யா பா.கி.(அவர்தான் “ஞானாலயா“கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் வழியாக அறிந்ததே இவ்வளவா? எஸ.ஆர்.வி.பள்ளியின் கலைவிழாப் பற்றியும், அதில் அவர்கள் புத்தகம் வெளியிடுவது பற்றியும் கேள்விப்படவில்லையா? பள்ளி முதல்வர் துளசிதாசன், நிர்வாகிகள் குமரவேல், செல்வராஜன், சத்தியமூர்த்தி செயலாளர் சுவாமிநாதன் முதலான நல்லோருடன், ஆர்வமுடன் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களும் போற்றுதற்குரியவர்கள். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறும் தகவலும் எனக்கு ரொம்ப புதுசு
      எழுதுங்கள் ....
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

      Delete

Post a Comment

வருக வருக