ஒரு பெண்ணுக்கு வாழ்வு தனது ஒவ்வொரு திருப்பத்திலும் வஞ்சகத்தை மட்டுமே பரிசளித்தால் வாழப்பிடிக்குமா? இடுக்கனுக்கு நகுதல் சாத்தியமா?
நீங்கள் நூர் (பெயர் மாற்றம்)டீச்சரை பார்த்தல் வியந்து போவீர்கள்.
ஒரு சராசரிப் ஏழைப் பெண்ணிற்கு கிடைத்திருக்கக்கூடிய எந்த வாய்ப்பும் கிடைக்காத ஒரு பெண்மணி. ஏழைத் தாய், எதிர்பாரா திருமணம் என கடும் புயல்வீசிய இளமை.
கடும் முயற்சிக்கும் ரணப்படுத்தும் அவமானத்திற்கும் பின்னர் கிடைத்த ஒரு ஆசிரியப் பயிற்சி வாய்ப்பு. வாழ்வின் அத்துணை அவமானங்களுக்கும் தோல்விகளுக்கும் பின்னர் கிடைத்த ஒரே ஆறுதல், அரசுப் பணி.
சராசரிகள் ஓய்வெடுக்கும் இந்தப் புள்ளியில்தான் நூர் தனது சாதனையை துவங்கினார். வாழ்வில் எந்தப் பிடிப்புமே இல்லாத நூர் தனது மாணவர்களை தனது குழந்தைகளாக வரித்துக்கொண்டுவிட்டார்.
அன்பும் கருணையும் கற்பித்தலின் அடி நாதமும் முதன்மைத் தகுதியும் அல்லவா. வாழ்வின் அத்துணை இழப்புகளுக்குப் பின்னரும் நூர் டீச்சரின் இதயத்தில் இருந்து இவை ஆறாக பெருகி அவரது மாணவர்களை ஆழ்த்தின. ஒரு நல்ல பள்ளிக்கான முன்மாதிரிப் பள்ளியாக இன்று மாவட்டதில் இருக்கும் பள்ளிகளில் நூர் டீச்சரின் பள்ளியும் ஒன்று.
பல பள்ளிகளில் என்னிடம் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நூர் டீச்சரை விட சில பட்டங்கள் பெற்ற நிறையவாசிப்புள்ள என்னால் செய்ய முடியாத பல சாதனைகளை இவர் மிக எளிதாக செய்திருக்கிறார். அவற்றில் ஒன்று ஆங்கில வாசிப்புத் திறன்.
இந்தப் பள்ளியிலிருந்து வரும் எந்தக் குழந்தையும் ஆங்கிலத்தை கண்டு மிராளது. மாறாக அவர்கள் ஆங்கிலத்தை நம்பிக்கையுடன் உரக்க படிக்கும் தொனியில் நான்தான் மிரண்டுபோவேன்.
சத்தமின்றி இவர் செய்து வரும் உதவிகள் ஐந்தாம் வகுப்பிற்கு பின்னரும் தொடரும். தாயில்லாப் பெண் ஒருத்திக்கு நர்சிங் பயிற்சி இவர் செலவில், இது போல இன்னும் எனக்கு தெரியாத உதவிகள் எத்தனையோ? தொடக்க கல்வித் துறையின் எந்த ஒரு மேல் அதிகாரி பள்ளிப் பார்வையிடலுக்கு வந்தாலும் இந்தப் பள்ளி அவரது பட்டியலில் இருப்பதே நூர் டீச்சரின் சேவைக்கு ஒரு சாட்சி.
வாழ்த்துக்கள், சகோதரி நூர், உங்கள் வாழ்வின் அர்த்தம் உங்கள் சேவையின் செம்மை.
அன்பன்
மது
இரண்டு தளங்கள்
படியுங்க பயன் பெறுங்கள்டாக்டர். ருத்ரன்
டாக்டர். ஷாலினி
சகோதரி நூர் ஒரு அர்த்தமுள்ள வாழ்வினை வாழ்ந்து வருகிறார்.
ReplyDeleteசகோதரிக்குப் பாராட்டுக்கள்.
நன்றி அய்யா ...
Deleteஅந்த டீச்சரின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteஒன்றும் செய்யாமல் தான் சாதனை செய்த்தாக சொல்லி தற்பெருமை பேசி தன் முகத்தை பல இடங்களில் காட்டி வாழும் மக்கள் இருக்க தன் முகத்தை மறைத்து நல்லது செய்யும் இதயமும் இன்னும் நம் நாட்டில் இருக்கிரது என்பதை அறியும் போது மனம் பெருமை கொள்கிறது. அவருக்கு எனது ராயல் சல்யூட்..
ReplyDeleteஅவரைப்பார்த்தால் நான் அவரை வாழ்த்தி வணங்கியதாக சொல்லுங்கள்
பணியை விரும்பி செய்யும் எல்லா ஆசிர்யர்களும் அவருக்கு தருவது ராயல் சல்யுட்தான் தோழர்..
Deleteஅவர்களின் பணி மாவட்டம் முழுதும் தெரியும்...
அன்பின் ஆழத்தை உணர்ந்து தனக்கு கிடைக்காத அன்பை பிறரிடம் செலுத்தி சாதனை செய்கிறார். அவர் எல்லா நலன்களும் பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ மனமார வாழ்த்துகிறேன்.
ReplyDeleteநன்றி சகோதரரே தங்கள் நற் பணி தொடரட்டும்....!
இன்றுவரை என்னைக் காலை வாறுவது மாணவர்களின் மேல் நான் செலுத்தாத அக்கறைதான்... பாடம் தாண்டி ஒரு அக்கறையும் அனுசரணையும் இல்லாவிட்டால் ஆசிரியர்கள் சுலபத்தில் வெற்றிபெற இயலாது..
Deleteதலைவணங்குகிறேன் நூர் ஆசிரியருக்கு..
ReplyDeleteபகிர்ந்த உங்களுக்கு நன்றி மது!
நன்றி சொன்னது பாதி தான் இதுக்கே தலைவணக்கமா ?
Deleteதற்பெருமை பீற்றிக் கொள்ளும் மனிதர்க்கிடையில் சகோதரி நூரைப் பற்றிய பதிவு மிக அருமை! மகத்தான சாதனை! அவருக்கும் அதைப் பதிங்க உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதுளசிதரன், கீதா
நன்றி உங்கள் நாடகத்தை சுட்டு வகுப்பில் போட ஆசை பாப்போம் நடக்குதானு
Deleteஆசிரிய தொழிலைப் அர்ப்பணிப்புடன் செய்யும் அந்த முகமறியா சகோதரிக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி அய்யா ...
Deleteஇப்படி எத்துனை ஆசிரியைகள் என்பது இன்னும் தெரியாது மீடியாவிற்கு ...
எனவே தான் இந்தப் பகிர்வு
nan ninaippathu sari enil antha nuur en thozi. on d way to manappaarai road .
ReplyDeleteசரி...
Deletecorrect chance se illa .she is the only best teacher in pdk and also my best friend .thanks .nan yellam avanga mun summa
ReplyDeleteமகிழ்ச்சி...
Deleteஉண்மையாக மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள், தங்களை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள் என்பதை, சகோதரி நூர் அவர்கள் நிரூபித்து விட்டார்கள். அந்த சகோதரிக்கும், இதனை பகிர்ந்துக்கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நன்றி அண்ணா
Deleteஉங்களுக்கும்
சுரேஷுக்கும் ...