ஜீவா ...
தோழர்
ஜீவாவைத் தெரியுமா?
கேட்டேன்
எட்டாம் வகுப்பில்
எழுந்து பாடினாள்
என்னமோ ஏதோ
விரக்தியில்
சிரித்த என்னை
வியந்து பார்த்தாள்
எனது
நம்பிக்கை நட்சத்திரம்.
சோரம் போன
வாக்குகளில்
மின்னும்
தலிவர்களின்
பகட்டு ஒளியில் ..
எப்படி
நீ தெரிவாய்
தோழா?
தங்கள்
மீட்பரை
வெள்ளித் திரைக்குள்
தேடும்
தமிழனுக்கு ...
எப்படி
நீ தெரிவாய்
தோழா?
அன்று
நீ
மாறிக்கொண்டே இருந்தாய்
கொள்கைக்காக
இன்று
இவர்களும்
மாறிக்கொண்டே இருக்கிறார்கள்
கொள்ளைக்காக
வளமையின்
வெள்ளைக் கதரைவிட
வறுமையின் சிவப்பு
உனக்கு உவப்பு
இவர்களுக்கு
அது பெரும் கசப்பு.
இன்னும்
நம்பிக்கை இருக்கிறது
தோழா
உன்னைக் காணும்
கண்கள்
எங்களுக்கு இல்லை
எனினும்
இன்னொரு
நல்லக்கண்ணு
வராமலா போவார்!
முகிழ்காமல்
போவானா
இன்னொரு
முத்துக்குமரன்
மது
லின்க்கை செக் செய்தாச்சா..
தோழர் நல்லக்கண்ணு இன்றய அரசியல் சூழலில் இருந்து சற்று விலகி இருப்பதால்
இன்னொரு நல்லக்கண்னுவிற்கான தேவை இருப்பதால் அவரையும் கவிதையில் சேர்த்துவிட்டேன்... மன்னிக்கவும்...நம்மிடையே நலமுடன் இருக்கும் அவர் நீடுழி வாழ எனது பிரார்த்தனைகள் ..
தோழர்
ஜீவாவைத் தெரியுமா?
கேட்டேன்
எட்டாம் வகுப்பில்
எழுந்து பாடினாள்
என்னமோ ஏதோ
விரக்தியில்
சிரித்த என்னை
வியந்து பார்த்தாள்
எனது
நம்பிக்கை நட்சத்திரம்.
சோரம் போன
வாக்குகளில்
மின்னும்
தலிவர்களின்
பகட்டு ஒளியில் ..
எப்படி
நீ தெரிவாய்
தோழா?
தங்கள்
மீட்பரை
வெள்ளித் திரைக்குள்
தேடும்
தமிழனுக்கு ...
எப்படி
நீ தெரிவாய்
தோழா?
அன்று
நீ
மாறிக்கொண்டே இருந்தாய்
கொள்கைக்காக
இன்று
இவர்களும்
மாறிக்கொண்டே இருக்கிறார்கள்
கொள்ளைக்காக
வளமையின்
வெள்ளைக் கதரைவிட
வறுமையின் சிவப்பு
உனக்கு உவப்பு
இவர்களுக்கு
அது பெரும் கசப்பு.
இன்னும்
நம்பிக்கை இருக்கிறது
தோழா
உன்னைக் காணும்
கண்கள்
எங்களுக்கு இல்லை
எனினும்
இன்னொரு
நல்லக்கண்ணு
வராமலா போவார்!
முகிழ்காமல்
போவானா
இன்னொரு
முத்துக்குமரன்
மது
லின்க்கை செக் செய்தாச்சா..
தோழர் நல்லக்கண்ணு இன்றய அரசியல் சூழலில் இருந்து சற்று விலகி இருப்பதால்
இன்னொரு நல்லக்கண்னுவிற்கான தேவை இருப்பதால் அவரையும் கவிதையில் சேர்த்துவிட்டேன்... மன்னிக்கவும்...நம்மிடையே நலமுடன் இருக்கும் அவர் நீடுழி வாழ எனது பிரார்த்தனைகள் ..
நம்பிக்கையோடு இருப்போம்...
ReplyDeleteஇணைப்புகளுக்கும் நன்றி...
அவர் நீடுழி வாழ பிராத்திப்போம்.
ReplyDeleteநல்லக் கண்ணுக்கள் தான் இன்றைய தேவை
ReplyDeleteவருவார்கள் என நம்புவோம்
எவ்வளவு பெரிய தலைவர் அவர்! ஒருநாள் அதிகாலை 7மணிக்கு எனது அலைபேசி ஒலிக்க, நான் எடுக்க...“நான் நல்லக்கண்ணு பேசுறேன்“ என்ற கரகர குரல்... தூக்கக் கலக்கத்திலிருந்த நான் “எந்த நல்லக்கண்ணு” என்று கேட்டதற்காகப் பலமுறை வருத்தம் தெரிவிக்கும்படியாக, “நான் நல்லக்கண்ணுத் தோழர் பேசுறேங்க தோழர்” என்று அதட்டவும் நான் ஆடிப்போய்விட்டேன்...வாரிச்சுருட்டி எழுந்து...“ஐயோ சாரிங்க தோழர்...“ என்று தொடர.. அவரோ.சாதாரணமாக .“இப்பத்தான் இன்றைய ஜனசக்தியில உங்களோட கம்பன் பற்றிய கட்டுரை படித்தேன்“ என்று சொன்ன பல விஷயங்கள்... அற்புதமான மனிதர் அவர். அவர் ஒதுங்கியிருக்கவில்லை. உடல்நிலை சரியில்லாமலே உழைத்துக் கொண்டிருக்கிறார். இருப்பார். அருமையான பதிவு மது! அவசியம் தொடருங்கள்
ReplyDelete"மீட்பரை வெள்ளி திரைக்குள் தேடும் தமிழன்" சரியான சாட்டையடி. .
ReplyDelete