நண்பர் ஸ்டாலின் சரவணன் ஒரு கவிதைப் பயிலரங்கை கரம்பக்குடியில் ஏற்பாடு செய்திருந்தார். 16/02/2014 இல் நண்பா அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரான திரு.பிரகாஷ் செல்வராசுவின் திருமண வரவேற்பு வேறு. இரண்டு நிகழ்வுகளும் முக்கியமானவையே.
இதனிடையே அவ்வப்போது மண்டையில்பாடும் சைத்தான் ஏன் மாணவர்களுக்கு பயிலரங்க வாய்ப்பை தரக்கூடாது என்று பாடிவைக்க, மானசீகமாக ஒரு பட்டியலை போட்டு அவர்களை மட்டும் அழைத்தேன்.
குறிப்பாக பா. மணிகண்டன் என்று ஒரு பையன், ஒன்பதாம் வகுப்பில் விசயங்களை உள்வாங்கி செரித்து சொந்த வார்த்தையில் கட்டுரைகள் எழுதக் கூடியவன். இவனுக்கு ஒரு தளத்தை அறிமுகம் செய்தால் எதிர்காலத்தில் ஒருவேளை தமிழ் தாய்க்கு உணவளிக்கும் கவிதைகளை தரலாம் என்று சாத்தான் செப்ப அவனை அழைத்தேன்.
சார் அவனை மட்டும் அழைக்கிறீர்கள் எங்களை ஏன் அழைக்கவில்லை என்று மற்ற மாணவர்கள் வருந்த ஒரு அரைமணி நேரத்தில் 24 நான்கு மாணவர்கள் வரத்தயார் என்று சொன்னார்கள். மாணவர்களின் ஆர்வத்தை மட்டுப்படுத்துதல் முறையன்று என்று மீண்டும் சாத்தான் செப்ப இறுதிப் பட்டியல் தயார்.
ஒருவழியாய் இன்று காலை ஆறுமணிக்கு எழுந்து அவசரமாய் பள்ளிக்கு சென்றேன். ஆட்சியர் அலுவலகத்தை கடக்கும் பொழுது ஏன் இந்த வேண்டாத வேலை என்று சாத்தான் கேட்டுவைத்தான். ஒரு ஆயசத்துடனே பள்ளிக்கு சென்றேன்.
மாணவர்களை ஒன்றிணைத்து பேருந்தில் அழைத்து செல்ல பழய மாணவர் வேனில் குமரன் வந்திருந்தான். தற்போது பாலிடெக்னிக்கில் இறுதியாண்டு படிக்கும் அவன் எனது ஆபத்பாந்தவன்.
மிகப் பொறுப்பாக மாணவர்களை அழைத்துக் கொண்டு கரம்பக்குடி சென்றவுடன் எனக்கு தொலைபேச நான் நண்பா அறக்கட்டளையின் நிறுவனர் திருமண வரவேற்பிற்கு செல்ல எத்தனித்தேன். ஆனால் வரவேற்பு விழா காலை பதினொன்றிர்க்குதான். வேறு வழி இல்லை மாலை நேராக பார்த்தால் போச்சு என்று சொல்லி இன்னொரு பழய மாணவர் நடராஜனுடன் கரம்பக்குடி புறப்பட்டேன்.
விழா நிகழ்வுகள் ரொம்பவே அருமை. அதைப் பற்றி விரிவான பதிவுகள் தனியே இருப்பதால் இப்போதைக்கு எனக்கு கிடைத்த பாடம் மட்டும்.
பயிலரங்கின் இறுதியில் மாணவர்களின் கவிதைகளை தேர்ந்தெடுத்து பரிசுகள்தர நான் இருபத்தி மூன்றில் யாரவது தேறினார்களா எனபார்க்க ஆவலுடன் காத்திருந்தேன்.
மூன்று கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு பயிலரங்கம் என்பதால் நான் எனது மாணவர்கள் ஆறுதல் பரிசினையாவது பெறுவார்கள் என்று நினைத்தேன்.
ஒருவர் கூட ஆறுதல் பரிசு பெறவில்லை! பின்னர் பரிசுகள் அறிவிக்கப் பட்ட பொழுது இரண்டாம் பரிசு காளிஸ்வரி என அறிவிக்க எனது மாணவி ஒருத்தி எழுத்து ஓடி பரிசினைப் பெற்று வந்தாள்!
நல்ல பாடம் எனக்கு. மணிகண்டனை மட்டும் எதிர்பார்த்த எனக்கு எதிர்பாராமல் காளீஸ்வரி என்கிற கவிஞர் கிடைத்தார். நல்லவேளை அந்தப் பெண் நான் வருகிறேன் என்று சொன்ன பொழுது மறுக்காமல் அனுமதித்தது ஒரு நல்ல துவக்கத்தை தந்திருக்கிறது.
வரும் வழியில் மீண்டும் பேருந்தில் மாணவர்கள், நான் கொஞ்சம் முன்னதாக வந்து நண்பா அறக்கட்டளை, பிரகாஷின் வீட்டிலும் பிரசன்ட் போட முடிந்தது.
பெரிய மனதோடு என்னை மன்னித்த பிரகாசுக்கு ஒரு நன்றி! நட்டு (நடராஜன்) அறக்கட்டளை நிறுவனர்களை பார்த்தது பேசி மகிழ்ந்து ஒரு கூடுதல் நிறைவு.
மீண்டும் பள்ளி இப்போ இரவு 8.00 மணி. ஒரு ஞாயிறு இப்படிக் கழிந்தாலும் சில குட்டிக் கவிஞர்களை உருவாக்கியதில் மகிழ்ச்சியே.
இவ்வளவு நீண்ட நேரம் நான் வெளியில் சுற்ற அனுமதித்த எனது இல்லாள் ஒரு வார்த்தையும் சொல்லமல் உணவிட்டார். அவருக்கும் நன்றிகள்.
மீண்டும் ,
நன்றி ஸ்டாலின், நன்றி ஜெயலக்ஷ்மி அம்மா(மாணவர்களின் கவிதைகளைப் பொறுமையா படித்து வழிகாட்டியதற்கு), நன்றி குட்டீஸ்
ஒரு இனிய ஞாயிறின் நினைவுகளுடன்
அன்பன்
மது.
டிஸ்கி : இப்படி ஒரு தளம், ஒரு தேர்ந்த கவிதை அறிமுகம் குட்டீஸுக்கு கிடைத்தால் இன்னும் கொஞ்சம் சிரமப் படலாம் என்று சொன்னேன் காலையில் புலம்பிய சாத்தானிடம்!

வணக்கம் சகோ !
ReplyDeleteநல்ல விடயம் அவர்களை ஊக்கப்படுத்துவது நம் கடமை யல்லவா பெரும்பாலும் பெற்றோரை விடவும் ஆசிரியர்கள் தான் எந்தப் பிள்ளைக்கு என்ன ஆற்றல் உண்டு என்பதை கண்டு அறியவும் அவற்றை வளர்க்கவும் முடியும் என்பது என் எண்ணம் அதை நன்றாக செய்வதில் மிக்க மகிழ்ச்சியே,அதில் பெறும் திருப்தியே தனி தான். சாத்தானை எல்லாம் நுழைய விடாதீர்கள். தங்கள் மனைவிக்கும் நன்றி சொல்லத் தான் வேண்டும்.
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் வாழ்க வளமுடன்.....!
என் புதிய முயற்சி ஒன்று உங்களுக்காக என் வலைத்தளத்தில் காத்திருகிறது முடிந்தால் பாருங்கள்.
நானும் சகோதரி சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். இங்கு தமிழ் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடத்தில் இருக்கும் ஆற்றலை (தமிழ் போட்டிகளில் பங்குப்பெருவது, வானொலி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்குப்பெருவது) ஆசிரியர்களான நாங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு செய்யும்போது மனதிற்கு ஏற்படும் திருப்தியே தனி தான்.
Deleteகவி இனியாவிர்க்கும்
Deleteஎழுத்தாளருக்கும் சொக்கு அவர்களுக்கும் நன்றிகள்
அறிவுரைக்கு நன்றி கவிஞரே..
Deleteவணக்கம்
ReplyDeleteநல்ல முயற்சி.... தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருக ரூபன்
Deleteகருத்துக்கு மிக்க நன்றி..
குட்டிக் கவிஞர்களை உருவாக்கியதற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி அண்ணா, இன்னும் நான் புகைப்படத்தை தேடிக்கொண்டு இருக்கிறேன்..
Deleteசில குட்டிக் கவிஞர்களை உருவாக்கியதில் மகிழ்ச்சியே.
ReplyDeleteநன்றி கணித ஆசிரியரே...
Deleteவலை வித்தகரே..
சில குட்டி கவிஞர்களை உருவாக்கியதற்கும், வருங்காலத்தில் பல குட்டி கவிஞர்களை உருவாக்கவும் என்னுடைய மனமார்ந்த் பாராட்டுக்கள்.
ReplyDeleteசாத்தானிடம் சொல்லிவையுங்கள், இம்மாதிரி நல்ல விஷயங்களில் ஈடுபடும்போது, குறுக்கிடாதே என்று.
அவன் சொல்லித் தான் ஆரம்பித்ததே... அப்படியும் சொல்வான் இப்படியும் சொல்வான்...
Deleteவணக்கம் சகோ
ReplyDeleteதங்களின் பணி மிகவும் பாராட்டதலுக்குரியது. குட்டிக்கவிஞர்களுக்கு வாழ்த்துகள். இன்னும் இன்னும் பல பரிசுகள் பெறுவதோடு ஆக்கப்பூர்வமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள் எம் மாணவர்கள் எனும் நிலையை உருவாக்கி மகிழ தங்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றி சகோ.
ஏ. எல். எம் சரியாக பின்பற்றப்படும் பள்ளிகளில் இது சாத்தியம்தான் சகோ..
Deleteஇன்னும் கொஞ்சம் செய்ய வேண்டும் நான்..
அருமையான பணி செய்திருக்கிறீர்கள்...
ReplyDeleteமாணவர்கள் அனைவருக்கும் குறிப்பாக காளீஸ்வரிக்கும் வாழ்த்துகள்! 24 மாணவர்களின் இதயத்திலும் ஒரு விதை விதைத்துவிட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும்....உங்களுக்கு என் மரியாதைகலந்த வணக்கம்!
//இவ்வளவு நீண்ட நேரம் நான் வெளியில் சுற்ற அனுமதித்த எனது இல்லாள் ஒரு வார்த்தையும் சொல்லமல் உணவிட்டார். அவருக்கும் நன்றிகள்// மிக அருமை! உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்!
விதைப்பு என்பதுதான் சரி..
Deleteஅவப்போது பேணிக் காத்து உருவாக்கினால்தான் விளைச்சல் கிடைக்கும்..
இளம் கவிஞர்கலை உருவாக்குவதற்கு மிக்க பாராட்டுக்கள்! தங்களது பணி மிக மிக வரவேற்கப்படவேண்டிய ஒன்று! இன்னும் தங்கள் பணி சிறக்கவும், வளரவும், வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனைவி அமைவதெல்லாம்..இறைவன் கொடுத்த வரம்!
பகிர்வுக்கு நன்றி!
அட நீங்க வேற இப்படி பிட் போட்டதானே
Deleteமறுபடி சுத்தவிடுவாங்க. தங்களை போன்றோரின் வாழ்த்துகள் என்னை மேலும் சீர் செய்யும். நன்றி.
மிக நல்ல முயற்சி சாத்தான் அல்ல,உங்களின் மாணவர் குறித்த அக்கறையே.மிகவும் சந்தோசப்பட்டேன்.இந்த பயணங்கள் மாணவர்கள் மனதில் நீங்காது நிலைத்திருக்கும்.வாழ்த்துக்கள் .சார்
ReplyDelete