நம்ம கேள்வி கேட்டால் பசங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள இரண்டு பெரும் பதிவர்கள் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிஇருக்க வேண்டும். அவர்களுக்கு என் நன்றி . திருமிகு. மைதிலி, மற்றும் உண்மையானவர் திரு. சொக்கன்.
1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
ஒரு நூறு பேர் மனபூர்வமாக வாழ்த்தும் வகையில்.
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
எனது துறையில் நிபுணத்துவம் பெரும்வகையில் வாசிப்பும், கணிப்பொறியில் எனக்காக டாட் நெட்
மாணவர்களுக்காக போட்டோஷாப், டாலி, பேஜ் மேக்கர் (மூன்றும் இருந்தால் ஒரு கிராமத்துப் பையன் செட்டில் ஆகிவிடலாம்)
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
இன்று
ஒருவர் ஆண்டவன் என்னை உழைக்கச் செய்யும் அமைப்பை(ஜாதக ரீதியில்) இன்னும் ஏற்படுத்தவில்லை, மற்றவர்களிடம் வேலை வாங்கித் தான் பழக்கம் நான் வேலைபாக்கும் அமைப்பை ஆண்டவன் எனக்கு தரவில்லை என்று சொன்னபொழுது. சிரித்து சிரித்து தலை சுற்றிவிட்டது. அவர் சொன்ன பாணியும், அவருடைய இயல்பும் சொல்லப்பட்ட இடமும் அறிந்தால் நீங்களும் சிரிப்பீர்கள்
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
பகலில் நண்பர்களைச் சந்திப்பேன். குழந்தைகளோடு பூங்காவிற்கு செல்வேன். இரவில் மின்சாரம் தொலைந்த மகிழ்வில் பெருமிதத்தோடு மின்னும் நட்சத்திரங்களைக் காட்டி குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்க வைப்பேன்.
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
சத்குரு அருள்வான். சுற்றி இருப்பவர்களை மகிழ்வாக வைத்துக்கொள் உனது மகிழ்வுதானே வரும்.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
சக மனிதனை மதம் கொண்டு பார்க்காமல் சகோதரனாக பார்க்கும் உலகை, சக மனிதனைஅவனது கையை வாஞ்சையோடு பற்றிக்கொள்ளும் உலகை படைக்க , மதங்களை பண்படுத்த அல்லது அழித்தொழிக்க.
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
பிரச்சனைகளைப் பொருத்து
ஒன்று. கார்த்திக், குமார்
இரண்டு. ஆத்துக்காரி,
மூன்று. அம்மா
நான்கு. தங்கை
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
முன்பெல்லாம் கோபம் வரும், இப்போது சிரிப்புத்தான் வருகிறது.
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
சொல்லித் தேற்றும் இழப்பல்ல கூட இருந்துதேற்றும் இழப்பு. ஒன்றும் சொல்லாது அவனது வலியில் பங்கெடுப்பேன்.
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
ரீடிங், மூவி அல்லது டி.வி
இதைப் பத்து பேருக்கு பகிரவும் வேண்டுமாம்.
என்னை நண்பனாக ஏற்றுக் கொண்ட பதிவர்களில் பத்து பதிவர்கள் பதிலளிப்பார்கள் என்று நம்பி உங்களை பணிவுடன் வேண்டுகிறேன் நன்றி.
முகநூல் பதிவுகள்
1.
வேகப்பட்டு வாக்களிப்பதும் பின்னர் வருந்துவதும் உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் வழக்கம்...
இந்தி என்று இப்போது கத்தினால் எப்படி...
ஆரம்பம்தான் இப்பவே இப்படி வருந்தினால் ... மனச தேத்திக்கிட்டு அடுத்தடுத்த அதிர்சிகளுக்கு தயாராகுங்கள் நண்பர்களே...
2.
ஜே.சி.ஐ அனுபவத்தில் செயல்திறம்மிக்க ஒரு தலைவர் என்றால் முதலில் என் நினைவிற்கு வருவது ஏ.வி.ஏம்.எஸ். கார்த்திக் அவர்கள் தான்.
அதீதமான செயல்பாடு, மண்டல அளவில் புதுகை கிளை இயக்கத்தை தூக்கி நிறுத்தியது, எப்போதும் கவர்ந்திழுக்கும் புன்னகை, ஜே.சி என்றால் இப்படி இருக்கனும் என்று சொல்கிற மாதிரி ஜோரான செயல்பாடு..
இப்படி பலவிதத்தில் என்னை ஆச்யர்யப் படுத்திய திரு AVM.S. Karthick Selva அவர்களின் பிறந்தநாள் இன்று..
வாழ்த்துக்கள் கார்த்திக், முறியடிக்க முடியா மலைக்கவைக்கும் சாதனைகளுக்கும் சேர்த்து.....
3.
அனைவருக்கும் காலை வணக்கங்கள்
சில எழுத்துக்கள் புவியினைச் சுழற்றும்,
இதயத் தசைகளை நெகிழ்த்தும்
அத்தகு எழுத்தாளுமைகள் சாமான்யர்களிடம் பேசுவதோ அவர்களுக்கு சமவாய்ப்பு கொடுத்து கருத்துக்களை கேட்பதோ அரிது
ஈரமிகு எழுத்துக்கு சொந்தக்காரார், பேரா பாலா அய்யாவின் மூத்த மாணவர், போதுஉடமைச் சிந்தனையாளருமான அன்பு அண்ணா
https://www.facebook.com/edwin.iraa அவர்களுக்குப் பிறந்தநாள்..
வாழ்த்துக்கள் அண்ணா
4.
ஆங்கில வழி மாணவர்களிடம் மதிய உணவு இடைவேளையில் உரையாடல் பயிற்சி..
பல்வேறு தலைப்புகளை குறித்து பேச சொல்வது வழக்கம்
உனது வீட்டினைக் வர்ணி, பழைய பள்ளி பற்றி சொல் என்று வரும் தலைப்புக்கள்
இன்று நீ ஒரு சட்டமன்ற உறுப்பினர் எங்கே வாக்கு சேகரி பார்க்கலாம் என்று சொல்ல
ஆறாம் வகுப்பு காயத்திரி எழுந்தாள் மகளிர் மசோதா, தண்ணீர் என்று ஏதாவது பேசுவாள் என்று எதிபார்த்தேன்...
அயம் எம்.எல்.ஏ. பைவ் ஹண்ட்ரட் ருபீஸ்
வில் யு வோட்?
நோ, தௌசன், டென் தௌசன்ட் என்று எகிறி கோடியில் ஒரு வாக்கை வாங்கினாள் ...
இன்னொரு பெண் இரண்டு கோடி கேட்டாள்..
சபிக்கப் பட்ட ஒரு சமூகம் குழந்தைகளின் மனதை எப்படி கரைபடுத்தும் என்று நிலைகுத்திய விழிகளோடு பார்த்திருந்தேன் நான் ...
5.
அருள் கூர்ந்து பகிர்க..
கல்வி வாய்ப்பு
எஸ்.எப்.எஸ் ஐ.டி.ஐ
எஸ்.எப்.எஸ். தொழிற் பயிற்சிக் கூடம் புதுக்கோட்டை.
அரசு அங்கீகாரம் பெற்ற இரண்டு பயிற்சிகள்
1. வெல்டர்
2. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
இவை இரண்டும் மாநில தொழிற் பயிற்சி குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவை
மேலும்
பிரிண்டிங் நுட்பம்
கணிப்பொறி பயிற்சியும் அளிக்கப் படுகிறது
மிகக் குறைந்த கட்டணம் 6500/- மட்டுமே.
பத்து தவணைகளில் கட்டலாம்.
ஹாஸ்டல் வசதி இலவசம்.
தொடர்புக்கு 04322-236511
செல்: 9486663745
எஸ்.எப்.எஸ் ஐ.டி.ஐ
எஸ்.எப்.எஸ். தொழிற் பயிற்சிக் கூடம் புதுக்கோட்டை.
அரசு அங்கீகாரம் பெற்ற இரண்டு பயிற்சிகள்
1. வெல்டர்
2. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
இவை இரண்டும் மாநில தொழிற் பயிற்சி குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவை
மேலும்
பிரிண்டிங் நுட்பம்
கணிப்பொறி பயிற்சியும் அளிக்கப் படுகிறது
மிகக் குறைந்த கட்டணம் 6500/- மட்டுமே.
பத்து தவணைகளில் கட்டலாம்.
ஹாஸ்டல் வசதி இலவசம்.
தொடர்புக்கு 04322-236511
செல்: 9486663745
பதில்கள் அருமை
ReplyDeleteதம 2
நன்றி கரந்தையாரே..
Deleteவணக்கம்
ReplyDeleteகேள்வியும் நன்று பதிலும் நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ ரூபன்
Deleteமனம்திறந்த பதில்கள் அருமை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சகோதரி..
Deleteஒ!! எனக்காகவும் பதிவிட்டமைக்கு தேங்க்ஸ் :))
ReplyDeleteஎப்படி ஒரு முழு நேர ஆசிரியராக இருந்து எல்லாவற்றிலும் தனது மாணவனுக்கான விசயங்களை பெறுவது குறித்து தேடலுடன் இருப்பது என்பதை இத்தனை நாள் அருகில் இருந்தும் உங்களிடம் இருந்து என்னால் கற்றுக்கொள்ள முடியவில்லை!!!!! //மாணவர்களுக்காக போட்டோஷாப், டாலி, பேஜ் மேக்கர் (மூன்றும் இருந்தால் ஒரு கிராமத்துப் பையன் செட்டில் ஆகிவிடலாம்)// hats off. tats really great!!
நன்றி ...
Deleteசூப்பர்...!
ReplyDeleteஎவ்வளவு சீரியஸ் ஆனபதில்கள். நேர்த்தியான நல்ல பதில்கள் கண்டு மகிழ்ந்தேன். தங்கள் ஆசைகள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ என் தோழி போலவே நானும் \\ hats off // really great answers மது. நன்றி வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteநன்றி.. சகோதரி..
Deleteஒவ்வொருவரின் பதில்களை படிக்கும் போது மிக சுவையாக இருக்கிறது உங்களது பதில்களும் அருமை
ReplyDeleteஒரு பூரிக்கட்டையை இப்படி பூமராங்காய் சுழல விட்டுவிட்டீர்கள்
Deleteரசனையாகத்தான் இருக்கிறது
வணக்கம் சகோ.
ReplyDeleteஅழகான பதில்கள். ஆழமான சிந்தனைகள் மாணவர்கள் பற்றிய உங்கள் சிந்தனைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும். அருமையான விடயத்தை வைத்து அனைவரின் மனங்களிலும் வாழ்வியல் சிந்தனைகள் பற்றிய சுடரை ஏற்றிய அனைத்தும் உள்ளங்களுக்கும் என் அன்பான நன்றிகள்.
நன்றி பாண்டியன்
Deleteதாங்கள் ஒரு ஆசிரியர் என்பது பல பதில்களில் பளிச்! சுவையான பதில்கள்!
ReplyDeleteசபிக்கப்பட்ட சமூகம்தான் நண்பரே! குழந்தைகளின் மனது மிகவும் கெட்டுத்தான் போயிருக்கின்றது! நம்மைப் போன்ற ஆசிரியர்கள் தான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்தி, அவர்கள் ஒரு நல்ல சமூகத்தைச் செதுக்க உதவ முயற்சிக்க வேண்டும்!அந்த வகையில், தாங்கள், சகோதரி மைதிலி, திரு பாண்டியன், கரந்தையார் ஆகியோர் எடுக்கும் முயற்சிகள் அபாரம்!
நல்லாசிரியர்கள் வாழ்க! தங்கள் நல்ல எண்ணங்கள் தழைத்தோங்கட்டும்!
நன்றி சகோ
Deleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteவித்தியாசமான பதில்கள் உங்களிடத்தில் கண்டேன்.
மிகச் சிறப்பே!
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோ!
நன்றி சகோதரி..
Deleteஅருமையான பதில்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteநான் மாட்டிவிட்டாலும், என்னைத் திட்டாமல் எனக்காகவும் பதில்களை சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஒவ்வொரு பதிலும் உங்களின் முதிர்ச்சியை காட்டுகிறது. அதிலும் குறிப்பாக தாங்கள் கிராமத்து மாணவர்களுக்காக பாடுபடுவது மிகவும் மழிச்சியான விஷயம்.
பதிவில் மட்டுமே பாடுபடுகிறமாதிரி ஒரு ஆயாசம் இருக்கு சொக்ஸ்...
Deleteநிறைய செய்ய வேண்டும்..
அருமையான பதில்கள் !
ReplyDeleteமாணவர்கள் பற்றிய உங்களின் அக்கறைக்கு எனது மரியாதை.
நன்றி
saamaaniyan.blogspot.fr
நன்றி தோழர்..
Deleteமுத்துக்கு முத்தாக
ReplyDeleteபத்துக்குப்க பத்தாக
கேள்வி - பதில்
நன்றாக இருக்கிறதே!