ஜூலை மாத வெயில் தகித்தது. வகுப்பறையை கொஞ்சம் மரத்தடிக்கு மாற்றினால் பரவயில்லை என்று தோன்ற மாணவர்களைக் கேட்டேன் உடனே போகலாம் என்று சொன்னார்கள்.
பாடம் குறித்த விவாதத்தில் இருந்த பொழுது பள்ளியின் உள்ளே மெதுவாக வந்த ஒரு அம்மயார் எங்களை நோக்கி வந்தார்கள். மதிய வெயில் அவர்முகம் முழுக்க வியர்வை முத்துக்களை விதைத்து வைத்திருந்தது.
சார் சுரேஷ் பாஸ் பண்ணீட்டன் சார். நீங்க இல்லைனா அவன் தேர்வு எழுதியிருக்க மாட்டான்.
நான் என்னமா பெரிசா பண்ணீட்டேன். ஒரு மூணு மாசமா கூலிவேலைக்குப் போகாமல் அவன் கூடவே இருந்து அவனைப் படிக்கவைத்துவிட்டு இப்படி நான் தான் காரணம் என்று எப்படி சொல்லாம் நீங்க? என்றேன் நான்.
ஆமா சார். சித்தாள் வேலைக்குப் போய் சம்பாரித்துக் கொண்டிருந்தேன். இவனுக்காக ஒரு வேலைக்கும் போகாமல் கோவில் கோவிலா போய் அழுதேன் சார்.
ரிசல்ட் வந்த அன்னைக்கு காலையில் ஐந்து மணிக்கெல்லாம் குளிச்சிட்டு பிள்ளையார் கோவிலில் நெடுஞ்சான் கிடையாக விழுந்து அழுதிருக்கான் சார். பார்த்தவுக சொன்னாக. திருந்திட்டான் சார்.
நீங்க வேண்டியதுதான் பலிச்சிருக்கு. நாங்க என்னம்மா செஞ்சுட்டோம். போயிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
மெல்ல சுழன்றது கொசுவத்தி.
சுரேஷ் அளவிற்கு அதிகமாக செல்லம் கொ(கெ)டுக்கப்பட்டு வளர்ந்தவன். ஆடு, கோழி புறா இவைதான் இவனது வாழ்க்கை.
கெட்ட பழக்கங்கள் வேறு இருப்பதாக சகமாணவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தனர்.
நினைத்தபொழுது பள்ளிக்கு வருவதும் சிறு தேர்வு என்றால் மாயாவியாய் மறைவதும் இவனது வாடிக்கை.
ஒருமுறை மனப்பாடப் பாடல் தேர்வு ஒன்றிற்கு வரவில்லை. எங்க அவன் என்று கேட்டால் வீட்டில் புறா பார்துக்கொண்டிருகிறான் சார் என்றார்கள்.
எப்படியும் ஆண்டுத் தேர்வுக்கு வந்துவிடுவான். ஆனால் இப்படியே விட்டால் தோல்வி உறுதி. போகுது சரித்தான் என்று விட்டுவிட மனமில்லாமல் ஒரு மாணவனை கூப்பிட்டு அவனை அழைத்துவா என்று சொன்னேன்.
பிடிச்சது சனி. சார் வரமாட்டேன் என்கிறான். என்றவுடன் அவனுக்கு நெருங்கிய நண்பன் ஒருவனை அனுப்ப சிறிது நேரம் கழித்து ஓடிவந்து சொன்னான் சார் அவன் வீட்டை உள்புறம் சாத்திகிட்டு பூச்சி மருந்து பாட்டிலை வைத்துக்கொண்டு குடிப்பதாக சொல்கிறான் சார் என்று சொல்ல எனக்கு காதுக்குள் கொய்ங் என்றது.
மெல்ல தலைமை ஆசிரியரிடம் சொல்ல எந்தக் காரணம் கொண்டும் நீங்கள் போகக்கூடாது என்று சொன்னார் அவர். சார் அவன் பாட்டுக்கு வீட்டில் புறாவை கொஞ்சிக் கொண்டு இருந்தான். நான் தான் பசங்கள அனுப்பினேன் இப்போ நான் போகலை என்றால்தான் தவறு என்று சொன்னேன்.
சரி என்றார் அவரது முகத்திலும் பதட்டம். பைக்கை கிளப்பி வீட்டிற்கு போனால் ஏற்கனவே அங்கே நான் அனுப்பிய மாணவர்கள் வீட்டின் ஓட்டைப் பிரித்து இறங்கியிருந்தார்கள். அவன் சடக் என கதவைத் திறந்து வீட்டின் பின்புறம் ஓடியிருக்கிறான். கீழே நின்ற மாணவன் அவனைத் துரத்த வீட்டின் பின்புறம் எதிர் திசையில் சரியான நொடியில் நான் செல்ல நேரே என்னிடம் வந்தான் அவன்.
ஒன்றும் சொல்லாமல் அவனை பைக்கில் ஏற்றி பள்ளிக்கு கொண்டுவந்து தலைமை ஆசிரியரிடம் காட்டியவுடன்தான் பதட்டம் தணிந்தது.
இன்று அவன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைத்துவிட்டான்.
அவன் தேர்ச்சியுறா விட்டாலும் நான் மகிழ்திருப்பேன். ஒரு பத்தாம் வகுப்பு அட்டை என்பது கிராமத்து மாணவர்களுக்கு வாழ்க்கைக்கான கடவுசீட்டு. அதை மறுப்பது ஆசிரிய அறமாகாது என்பது எனது நிலை.
அதற்காக தேர்வில் பலர் தோல்வியடைவதை நியாயம் செய்வது எனது நிலைப்பாடல்ல. சுரேஷ் போன்ற மாணவர்களும் தேர்ச்சியடைவது என்பது ஒரு அபூர்வ நிகழ்தகவு. ஆனால் முயற்சிக்க தவறுவது தப்பு அல்லவா?
உங்கள் அக்கறை கண்டு மகிழ்வாய் இருக்கிறது..முயற்சிக்கத் தவறுவது தப்புதான்.,அதை நீங்கள் செய்யாமல் முயற்சி செய்ததாலேயே சுரேஷ் வெற்றிபெற்றுள்ளான்..அவன் அம்மா சொல்வது சரிதானே? நீங்கள் தான் காரணம் :)
ReplyDeleteத.ம.2
ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி சகோதரி.
Deleteதாங்கள் மிகுந்த பாராட்டிற்கு உரியவர் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள்
தங்களின் சீரிய பணி தொடரட்டும்
அன்றோடு முழுநேர வலைப்பதிவராக மாறியிருக்க வேண்டியது ..
Deleteபூர்வ ஜென்ம புண்ணியம் பணியில் தொடர்கிறேன்.
நன்றி தோழர்
வணக்கம்
ReplyDeleteமாணவர் மீது உள்ள அக்கறை கண்டு மகிழ்ந்தேன்.... தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கரந்தயாருக்கு போட்ட நன்றியை படிக்கவும்
Deleteநன்றி
அட...! சுவாரஸ்யமா இருக்கு.அப்ப சுரேஷ விரட்டினது தேர்வு தானே..!?...சிறுகதை படித்தது போலவே இருந்தது.
ReplyDeleteவாழ்த்துகள் உங்களுக்கும்,சுரேஷ் மற்றும் அவன் அம்மாவிற்கும்.
என் கதை தொங்கலில் போயிருக்கும் அண்ணா
Deleteஎஸ்.கெ.டி ஆசிரியர் என்ன பாவம் செய்தார்? இந்தச் சம்பவம் தான் நான் இதை எழுதக் காரணம்
மேற்கண்ட பிரச்னையில் முதலில் நின்று பிரச்சனையை தீர்த்து ஆசிரியரைக் காப்பற்றியவர் யார் என்பது உங்களுக்கு தெரியுமா.
Deleteவழக்கம்போல "அய்யா" தான்.
இதம்!
ReplyDeleteகொசுவத்திகள் இன்னும் சுழலட்டும் காத்திருக்கிறேன் தோழர்!
சுழலும் தோழர்
Deleteநன்றி
தாங்கள் செய்த முயற்சியின் பலனே சுரேஷின் வெற்றி.
ReplyDeleteஅவனது அம்மா சொல்வது உண்மைதானே...
சரி இப்படி உசுப்பேத்தியே நம்மள ரணப்படுதுங்க
Deleteஅவரவர் வாழ்க்கை அவரவர் கையில். 10 வகுப்பு மாணவன் இந்த தவறான முடிவை எடுத்தால் ? அதற்க்கு தாங்கள் எப்படி பொருப்பாளியாவீர்கள் ?
ReplyDeleteவகுப்பு தான் பத்து
Deleteமனசு எட்டு
பல்வேறு காரணிகள் ...
தொடர்வோம் தோழர்
வருகைக்கு நன்றி
தங்கை கிரேஸ் சொல்வதை நானும் வழிமொழிகிறேன் கஸ்தூரி. நல்ல் மதிப்பெண் பெறக்கூடியவர்களைத் துரத்தி மேலும் கூடுதல் மதிப்பெண் வாங்க வைக்க விரட்டும் உலகத்தில், மெல்லக் கற்கும் மாணவர்களை வீடுவரை சென்று எழுதத்தூண்டி, வெற்றிபெற வைப்பவர்கள் அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மட்டுமே என்பதை இந்தச் சமூகம் என்றைக்குப் புரிந்துகொள்ளப் போகிறதோ தெரியவில்லை. ஆனால், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் நம்மை மறந்துவிடுவதுண்டு. சுரேஷகள் தான் என்றைக்கும் நம்மை நினைத்திருப்பார்கள். விடாதீர்கள் இந்த வருடச் சுரேஷ்களைக் கவனியுங்கள்.. வாழ்த்துகள் கஸ்தூரி.. நல்ல ஆசிரியர் நீங்கள்..தொடருங்கள்.
ReplyDeleteஎனக்கு காதுக்குள் கொய்ங் என்ற சத்தம் கேட்டது என்றது உண்மை அண்ணா ..
Deleteநான் கொஞ்சம் இட்ட்றுப் போய்விட்டேன்
அணுகுமுறை தயக்கத்துடன் தொடர்கிறது..
வணக்கம் சகோதரரே!
ReplyDeleteஆசிரியர் என்பவர் ஒரு சர்வாதிகாரியாக இருக்கக் கூடாது. படிக்கும் மாணவருக்குப் பீதி மட்டும் இருந்தால் அவர்கள் தம் தவறைக்கூட உணர மாட்டார்கள்.
அவ்வகையில் உங்கள் அணுகுமுறை அருமை! இதனால்தான் சுரேஷ் கொஞ்சமேனும் சிந்திக்கும் நிலைக்கு வந்து தேர்வினைச் செம்மையாகச் செய்து தேர்ச்சியடைந்துள்ளான்.
அவன்னின் அம்மாவின் கூற்று ஏற்கவேண்டியதுதான்.
இனி அவன் முயற்சிப்பான்! முன்னேறுவான்!
உங்கள் பணி மிகச் சிறந்ததே! வாழ்த்துக்கள் சகோ!
ஒருகாலத்தில் மிக மோசமான சர்வதிகாரி நான் ..
Deleteவாசிப்பு பழக்கம் என்னை இந்த அளவிற்கு மாற்றியுள்ளது ..
எனது பைக்கின் ஹாரன் கேட்டால் பூனையைக் கண்ட எலிகள் போல பள்ளியே வகுப்பறைக்குள் அடையும் ..
இன்று எவ்வளவோ மாற்றம் என்னிடம் ..
சர்வ சிக்க்ஷா அபியானின் அற்புதமான புத்தங்கங்கள் ஒரு காரணம் (ஜன்னலில் ஒரு சிறுமி ஒரு உதா)
வருகைக்கு நன்றி சகோதரி
உங்கள் பதிவில் அன்றைய கிராமங்களில் இருந்த, மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்திய சம்பாதிக்கத் தெரியாத நல்லாசிரியர்களைக் காணுகின்றேன்.
ReplyDeleteசிலர் உங்களை கிண்டல் கூட செய்யலாம். உங்கள் சேவை தொடரட்டும். அதே சமயம் அதிக ஆர்வக் கோளாறும் வேண்டாம். எல்லோருமே எல்லா நேரமும் எப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
Tha.ma.5
ஆர்வக் கோளாறு என்பதை உணர்ந்தே இருக்கிறேன் நான்
Deleteநன்றி தோழர்
ReplyDeleteபல பள்ளிகள் தேறாது என்று நினைக்கும் மாணவர்களை 9;ம் வகுப்பிலேயே விரட்டி விடுகின்றன.அரசு பள்ளிகளும் இந்த முயற்சியில் ஈடுபடுவது வாத்கஈயாகி விட்டது. தேர்ச்சி விகிதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம்.
ReplyDeleteபதிவின் நிறைவு வரிகளை ஆமோதிக்கிறேன்.
நன்றி
நோயாளிகளை வெளித்தள்ளிவிட்டு ஆரோக்கியமானவர்களை மட்டும் அனுமதிக்கும் விசித்திரமான மருத்துவமனைகள் பள்ளிகள் என்று ஒரு மாணவன் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவான் ... நீங்கள் படிதிருகிரீர்கள் தானே "ஏன் டீச்சர் எங்களை பெயிலாக்கிணீங்க'
Deleteஉலகத்தில், மெல்லக் கற்கும் மாணவர்களை வீடுவரை சென்று எழுதத்தூண்டி, வெற்றிபெற வைப்பவர்கள் அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மட்டுமே என்பதை இந்தச் சமூகம் என்றைக்குப் புரிந்துகொள்ளப் போகிறதோ தெரியவில்லை. ஆனால், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் நம்மை மறந்துவிடுவதுண்டு. சுரேஷகள் தான் என்றைக்கும் நம்மை நினைத்திருப்பார்கள். விடாதீர்கள் இந்த வருடச் சுரேஷ்களைக் கவனியுங்கள்.. வாழ்த்துகள்...வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி திரு ரவி..
Deleteபடிக்காத மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லையென்றால் விட்டது சனியன் என மகிழும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் ! பாராட்டு என்ற வார்த்தையெல்லாம் தாண்டிய மனிதநேயமிக்க தொண்டு உங்களுடையது. பெருமைபடுகிறேன்.
ReplyDeleteநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
மனிதநேயம் என்பதெல்லாம் பெரியவார்த்தை.
Deleteஎன்னைப் பொறுத்தவரை கேலிக்கு ஆளாகாமல் தப்பித்ததே பெரிது..
இப்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்தே செய்கிறேன் இதுபோன்ற பணிகளை
கை கொடுங்கள் சார்! குடோஸ்! நன்றாகப் படிக்கும் மாணவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு எங்கள் பள்ளி 100% தேர்ச்சு என்றும், நல்ல ஆசிரியர்கள் என்று மார்தட்டிக் கொண்டு விளம்பரப்படுத்தி வரும் இந்நாளில் தாங்கள் செய்திருக்கும் இந்தப் பணி மிக மிக பாராட்டிற்குரியது! எவ்வளவு நல்ல ஆசிரியர் தாங்கள் என்பது தங்களது பல பதிவுகளில் இருந்து தெரிய வருகின்றது! இப்படிப்பட்ட ஆசிரியர்கள் பல இருந்தால் சிறிய ஊர்களில் இருக்கும் அரசுப் பள்ளிகள் எல்லாமே முதன்மை பெற்று தனியார் பள்ளிகளின் ஆதிக்கமும், மவுசும் குறைந்து விடாதோ! வாழ்க தங்கள் பணி! இன்னும் இது போன்று எத்தனையோ மாணவர்களைக் கரையேற்றி இருப்பீர்கள்தானே! எழுதுங்களேன்! நண்பரே! பெருமையாகவும் இருக்கின்றது!
ReplyDeleteஉசுப்பெற்றியதற்கு நன்றிகள்
Deleteமுயற்சிக்கத் தவறுவது தப்புதான். நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி முனைவரே...
Deleteஅன்பின் மது - ஆசிரியப் பணியே அறப்பணி - அதற்கே உனை அர்ப்பணி என்பதனை வேத வாக்காகக் கருதி பெரும்பாலான ஆசிரியப் பெருமக்கள் பணி புரிந்து வருகிறார்கள். தவறு செய்யும் ஆசிரியர்கள் மிக மிகக் குறைவே ! சுரேஷ் திருந்தி இருப்பான் - பள்ளியின் சூழ்நிலை - ஆசிரியர்களின் ஒத்துழைப்பு - தலைமை ஆசிரியரின் கட்டுப்பாடு இவைகளே தவறு செய்யும் மாணவர்களைத் திருந்தச் செய்யும். கவலை வேண்டாம் - பிரசனைகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை அமைய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் ... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...
Deleteசுரேஷ் பிரச்னை வேறுமாதிரி ஆகியிருந்தால் காலத்துக்கும் என்னை வருத்தும் ஒரு நிகழ்வாக ஆகிப் போயிருக்கும் ... இதுபோன்ற விசயங்களை மிகுந்த கவனத்துடன் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா
வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தகவலுக்கு நன்றி அண்ணா ...
Deleteஆஹா நானும் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் வாழ்த்துகள்
ReplyDelete