புதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.
கடைசி நேரத்தில் போக முடியாவிட்டால் என்ன செய்வது என்று பதியவே இல்லை. நிலவன் அண்ணாத்தே சொன்னபின்னர் பதிந்தேன். இதனிடையே சகோதரி தேன்மதுரத் தமிழ் நூல் வெளியிட இருப்பதாகவும், நூலுக்கு வாழ்த்துரை வழங்கும் நபர்களில் ஒருவனாக நான் இருப்பதாகவும் மகிழ்நிறை மூலம் சொன்னபொழுது ஏனுங்க அவ்வளவுக்கு நான் ஒர்த்தில்லீங்க என்றுதான் சொல்ல விரும்பினேன்.
பின்னர் சகோதரி கீதா அவர்களது கவிதை நூலுக்கு மகிழ்நிறை வாழ்த்துரை ஒன்றை வழங்க தவிர்க்கவே இயலாமல் நிகழ்வுக்கு வருவது உறுதிப்பட்டுவிட்டது.
வான்மழை வாழ்த்தோடு புதுகையில் இருந்து கிளம்பினோம். ஏனைய பதிவர்கள் சமர்த்தாய் பேருந்து நிலையம் வந்து கிளம்பிவிட நான் மட்டும் வீட்டுக்கு வாங்க போலாம் போற வழிதானே என்றேன். உண்மையில் நிறை எங்களுடன் வந்ததால் அவள் நனைவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.
நிலவன் அண்ணாத்தே இடத்தில் நானாக இருந்திருந்தால் சரி சரி மெல்ல வாங்க நாங்க முன்னாலே போறோம்னு சொல்லியிருப்பேன்.
ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடம் வீட்டு வாசலில் டவேரா!
கவிஞர் ஸ்டாலின் சரவணன், கவிஞர் கீதா, புத்தகப் புழு ஜெயலட்சுமி (AEEO) அம்மா, அனுஷுயா, கவிஞர் நீலா, மேடைப் புயல் சுந்தர் அண்ணா, கவிஞர் மாலதி என ஒரே அறிவு ஜீவிக் கூட்டம்.
தப்பான எடத்துலே இருக்கோம் என்ற நினைவு சிறிது நேரத்தில் அவர்களின் இயல்பான பேச்சால் மறைந்தது.
போகிற வழியில் செமையா ஒரு ஹோட்டலில் காலை உணவு. திருப்பத்தூர் அருகே இருக்கும் ஷண்முகா பாரடைஸ் நல்லதோர் உணவகம். சரியாக நான் பொங்கலை தொட்டவுடன் தங்கை கிரேஸ் தொலைபேசி நீங்கள் வீட்டுக்கு உணவருந்த வாருங்கள் என அனைவரையும் அழைத்தார். என்ன டைமிங்.
அந்தப் பொங்கல் சுந்தர் அண்ணாவிற்கு ஏனோ பிடிக்கவில்லை. சுமார்தான் என்றார்.
ஜெயம்மாவை பொறுத்தவரை அவர் இருக்கும் இடத்தில் நண்பர்கள் உணவருந்தினால் அதன் கட்டணத்தை அவர்தான் செலுத்தவேண்டும் என்பார். எப்போவும் அப்படிதான். அன்றும் அப்படியே.
அப்படி ஒரு அன்பான மிரட்டல் அம்மாவிடம் இருந்து.
அந்த உணவகத்தில் பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நாங்கள் புறப்பட்டோம். குழம்ப வேணாம் அது ஒரு செட்டிநாட்டு வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடிபோல் வடிவவமைக்கப் பட்டிருந்தது.
ஒருவழியாக நிகழ்வின் மண்டபத்தை அடைந்தபொழுது நிகழ்சிகள் தொடங்கிவிட்டிருந்தன. நுழைந்தவுடன் கிரேஸ் நிறையை மாப்பிளை ஆல்பர்டுடன் வீட்டிற்கு அனுப்பிவிட நாங்கள் மண்டபத்தில் நிகழ்வுகளில் கலக்க ஆரம்பித்தோம்.
முதலில் நான் பார்த்தது கில்லர்ஜியைத்தான், தேவகோட்டையில் இருப்பதால் பலமுறை சந்திக்க நினைத்தும் முடியாத ஒருவரை அரங்கில் சந்தித்தது மகிழ்வு. மிகவும் மகிழ்வான சந்திப்பு அது!
சாளையக்குறிச்சி வெற்றிவேல், சரவணன், தமிழ்வாசி, சீனா அய்யா என நிறையப்பேரை நேரில் சந்திக்க முடிந்தது. திண்டுக்கல் தனபாலன் ஒரு அணியுடன் சுழன்று சுழன்று வேலைபார்த்தார்.
எதிர்பாரா விதமாக கூழாங்கற்கள் கடங்கநேரியான் வர கடங்கு என அழைத்தேன். இது தான் எனது முதல் சந்திப்பு. இருப்பினும் கடங்கு என்று அழைக்கும் அளவிற்கு எங்களை நெருக்கப்படுத்தியது முகநூல்!
நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம் மறக்காமால் புதுகை இலக்கிய தாதாக்களிடம் அவரை அறிமுகம் செய்துவைத்தேன்.
கரந்தையார் முதல் வரிசையில் வெகு சின்சியராக அமர்ந்திருந்தார். அவரை அவரது குடும்பத்தினரோடும் முனைவர். ஜம்புலிங்கம் அவர்களோடும் சந்திக்க முடிந்தது மகிழ்வு.
ஜோக்காளியின் படத்தை மட்டுமே பார்த்திருந்த நான் அவரை நேரில் பார்த்தவுடன் அசந்துவிட்டேன். பதிவர் கூட்டத்தில் ஏகப்பட்ட இளமையோடு இருந்தவர்களில் அவரும் ஒருவர்!
பகவான்ஜி நான் நாகலிங்கம் அவர்களின் நண்பன். நிகில் பயிற்சியாளரா நீங்க? என்று கேட்க எனக்கோ வியப்பு.
நிகில் பிறந்ததில் இருந்து இறந்ததுவரை எனக்கு தெரியும் என்றார். அது ஒரு எதிர்பாராத தகவல். பின்னர் அதன் பின்னணி குறித்து விளக்கினார். அவரது நற்பாதியை சந்தித்த பொழுது நிகில் நிறுவனர்களுடன் ஒன்றாக பணியாற்றியதைச் சொன்னார்கள்.
கூடவே இப்போ அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆகிவிட்டார்கள் தெரியுமா? என்றார். மகிழ்வான செய்தி அது. வாழ்த்துக்கள் நிகில் நிறுவனர்களுக்கு.
சீனுகுரு, அரசன், ஆவி, நாய் நக்ஸ், ஸ்கூல் பையன், மணவை ஜேம்ஸ் அய்யா என பல பதிவர்களை சந்திக்க முடிந்தது. மூங்கில் காட்டிடம் நிறைய நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். பக்காவாய் டிரஸ் பண்ணி சும்மா டீக்கா இருந்தார் அவர். எதுவும் ஷூட்டிங் எதற்கும் வந்திருக்கிறாரா என்று குழம்பினேன்.
விழாவில் விமலன் ஐயாவை நேரில் பார்க்க முடித்தது! முனைவர்.வ. நேரு அய்யா தனது இரண்டு நூல்களை வழங்கினார். நேரு அவர்களின் புதல்வன் பகுத்தறிவு பரப்பவே ஒரு தளம் வைத்திருப்பதாக சொன்னார். ரொம்ப மகிழ்வாக இருந்தது.
வாத்தியார் பாலகனேஷ் அவர்களின் புத்தகம் செமை ரகளை. முன்பாதி செண்டிமெண்ட் பின்னாலும் ஒரு அட்டை படித்தால் காமெடி என வடிவமைப்பே ரகளை. இதுகுறித்தும் பேசினேன். ரொம்ப எளிமையாக சொன்னார் ராஜேந்திரகுமரின் ஐடியா அது. நான் அதை பாலோ பண்ணினேன் என்றார். நானே சிந்தித்தேன் என்று பீலா விடும் ஆட்களின் மத்தியில் வாத்தியார் எனக்கு எடுத்தப் பாடம் தனித்துவம் வாய்ந்தது!
சாளயக்குறிச்சி வெற்றி இந்த மாதம் வன வள்ளி புத்தகத்தை வானதி பதிப்பகம் மூலம் வெளியிடப் போகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
தங்கை கிரேஸ் அட்லாண்ட்டா பயணப்படுகிறார் அவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவரது நூல் வெளியீட்டின் பொழுது அவரது தந்தை ஆற்றிய உரை அருமை. குடும்பத்துடன் வந்து விழாவில் கலந்துகொண்டார். குழந்தைகள் ஹானி மற்றும் ஆல்வின் வந்திருந்தது நிறைவு.
மதியம் வந்த இந்திர செளந்தர்ராஜன் சும்மா ஆத்து ஆத்துன்னு ஆத்தி சேம் ப்ளட் உணர்வுக்கு கொண்டுபோய்விட்டார்.
அவர்தான் அப்படி ஆத்துனார்னா மறுநாள் செய்தியில் அமைச்சூர் எழுத்தாளர்களுக்கு அறிவுரை என்கிற தலைப்பில் வந்திருந்த செய்தி திருப்பி சேம் பிளட்!
நான் அமைச்சூர்தான் ஒத்துக்கிறேன்.
லேய் சாமிகளா, வளரும் கவிதை, நடைநமது, காரிகன், ஜோ.வி யெல்லாம் பார்த்ததே இல்லையப்பா நீங்க?
இல்லைனா சீனுகுருவாது பார்திருக்கீங்களா?
மிக அருமையான உபசரிப்பில் ஜிகர்தாண்டா, மதிய உணவு என்று ஏதோ நம்ம வீட்டு விஷேம் போல ஏற்பாடு செய்திருந்தனர் அமைப்பாளர்கள்.
நிறைய பதிவர்களைச் சந்திக்கவும், குறும்படங்களை பார்க்கவும் வாய்ப்பளித்த ஒரு மிக நல்ல நிகழ்வு மதுரை வலைப்பதிவர் சந்திப்பு.
விழா அமைப்பாளர்கள் சாதித்து விட்டார்கள்.
விழா வருகையையும் பங்கேற்பையும் கூட்டியிருக்கலாம். இன்னும் நிறைவாக இருந்திருக்கும். மழையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நான் ரொம்ப பேசக் கூடாது.
ஏன்?
அடுத்த முறை சந்திப்பு நிகழப் போவது புதுகையில்!
அனேகமாக ஜூன் மாசமே!
ரெடியாகுங்க மக்கா!
அன்பன்
மது
ஏனைய பதிவர்களின் பார்வையில் விழா!
இணைப்புகள் தமிழ் இளங்கோ அய்யாவின் தளத்தில் இருந்து உரிமையோடு சுடப்பட்டது.
மதுரை - மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா -
மதுரை வலைப்பதிவர் விழா அனுபவங்கள்
முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா?
796. 3-ம் பதிவர் திருவிழா -- 1
ஒரு கோப்பை மனிதம் -நூல் வெளியீட்டு விழா
மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம்
797. 3-ம் பதிவர் திருவிழா -- 2
பதிவர் சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை
ஆஹா என்ன ஒரு தன்னடக்கமான பதிவு சகோ அன்று சூப்பரா பேசி பேச்சிலும் வல்லவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்...வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி சகோதரி...
Deleteவணக்கம்
ReplyDeleteதங்களின் பதிவை பார்த்த போது நிகழ்வு எந்த இடர்பாடும் இல்லாமல் நிறைவாக முடிந்துள்ளதை காட்டுகிறது... தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூப்ஸ்
Deleteவிழாவைப்பற்றி ரொம்ப அருமையா தொகுத்து சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteஅடுத்த வருடம் புதுகையிலா! ஜூன் மாதம் எனும்போது தான் கொஞ்சம் உதைக்கிறது. ஏனென்றால் நான் ஜூலை மாத இறுதியில் இந்தியா வரலாம் என்றிருக்கிறேன். பார்ப்போம் அடுத்த வருட விழா ஜூலை மாதம் என்றால், இதுமாதிரி நானும் ஒரே இடத்தில் எல்லா பதிவுல நண்பர்களையும் சந்திக்க இயலும். அதுவும் என்னுடைய ஊருக்கு பக்கத்து ஊரிலேயே...
கருத்தில் ஏற்றினோம் கவனம் கொள்வோம்..
Deleteகருத்தில் ஏற்றினோம் கவனம் கொள்வோம்..
Deleteவழிமொழிகிறேன் மது
வரவேண்டும் நண்பரே!
மதுரையில் தங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. விழாப்பதிவினைத் தாங்கள் பதிந்துள்ள விதம்சிறப்பாக உள்ளது. வலைப்பூ நட்பினைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் சந்திப்பில் பலரைப் பற்றிய புரிதல் சுவாரஸ்யம்...
ReplyDeleteஜூன் மாசமா...? அதற்குள் பல பதிவர்களை உருவாக்க வேண்டும்... நீங்க ரெடியா...?
எப்போதும் ... தயார்தான்
Deleteஎப்போதும் தயார்தான்.
Deleteபேசித் திட்டமிட்டு, உங்களைப் போலும் ஊக்குநர் வழிகாட்டுதலோடு, புதுக்கோட்டை மாவட்டத்திலேயே நூறு பதிவர்களை உருவாக்கிவிடுவோம். (இதுபோன்ற மாநில-மாநிலம் தாண்டிய சந்திப்புகளைச் சாக்காக வைத்து, நடக்கும் ஊர்களில் நல்லது நடப்பதும் சந்திப்புகளின் நல்ல பக்க விளைவுகள் தானே?) என்ன மதூ?
நல்லதை தேடுபவர்கள் அல்லதை தவிர்த்துவிட்டால் ....
Deleteஇது தானே உங்கள் பாணி
செம தொகுப்பு போங்க! நண்பரே! தொகுப்பினிடையே இழையோடும் நகைச்சுவை எந்தத் தறியிலப்பா நெய்தீர்கள்!!!!!? மிகவும் ரசித்து, அனுபவித்து வாசித்தோம்! என்ன எங்களால் கலந்து கொள்ள முடியாமல் போய்கிட்டது! அதுவும் கீதா பயண ஏற்பாடுகள் செய்து டிக்கெட் எல்லாம் பதிவு செய்து, இறுதியில் ரத்து செய்ய வேண்டியதாகிப் போக....
ReplyDeleteஅறிவு ஜீவிச் சிங்கங்கள் வாழும் உங்க கோட்டைக்காவது கண்டிப்பா அடுத்த வருடம் வந்துவிட வேண்டும் என்ற அவா! பார்ப்போம்.....
நன்றி ....
Deleteவருகையை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்
எல்லாப் பதிவர்களையும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாகவே இருந்தது, உங்கள் இருவரையும் சந்திக்கும் ஆவல் கொஞ்சம் தூக்கலாக எங்கள் இருவருக்கும்....அட்லீஸ்ட் கீதாவிற்காவது அது சாத்தியமாகும் என்ற நினைப்பும் கடைசியில் பஞ்ச்ராகிப் போனது.....
ReplyDeleteசமயங்களில் அப்படி ஆவது உண்டு ..அடுத்தமுறை கட்டயாம் வரவேண்டும் ... இருவருமே..
Deleteமனதின் ஏக்கத்தினை இன்னும் அதிகரிக்க வைத்தது உங்கள் பதிவு!
ReplyDeleteவந்து பங்குபற்றாவிடினும் நேர்முக வர்ணனையாய்ச் சிறப்பாகத் தொகுத்துத் தந்தீர்கள்! அருமை!
யாரேனும் இவர் இன்னார் என படமும் பெயருமாக இட்டிருந்தால் மட்டுமே உறவுகளை நானும் அறிந்துகொள்ள முடிகிறது.
அன்றைய தினம் வீட்டில் சூழ்நிலை சரிவராததினால் உடனேயே நேரலை பார்க்கமுடியவில்லை. பின்னர் தேடினேன்.. கிடைத்ததுங்கூட ஒலியமைப்பில் தடை.. ஏதும் புரியவில்லை..
யாரேனும் முழுமையாக வீடியோவை மீண்டும் இட்டால் பார்க்கலாம்.
கொஞ்சமேனும் இவ்வகையாய் அறியத்தந்தமைக்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோ!
வருக சகோதரி...
Deleteஅமைப்பாளர்களிடம் சொல்லிப் பார்க்கிறேன்.
Super & Thanks
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteவிழாவை பற்றிய சிறப்பான பகிர்வு! மதுரைக்கு வரமுடியவில்லை! கோட்டைக்கு வர கோட்டை கட்டுகிறேன்! பார்ப்போம்! நன்றி!
ReplyDeleteகோட்டைக்கு வருக... வருக
Deleteஉங்க எழுத்து பட்டாசு போல வெடிக்கிறது ...
ReplyDeleteநிறைய எழுதுங்க தொடர்ந்து படிக்க வருகிறோம் ....
அலோவ் நீங்கதானே காரைப் பார்த்தவுடன் நண்பனை கழட்டிவிட்டு சென்றது...
Deleteசும்மா கலாச்சேன்
வருகைக்கு நன்றி ..
புதுக்கோட்டை வலைப் பதிவர்களுக்கு அய்யா முத்து நிலவன் அவர்கள் நல்ல வழிகாட்டி. எனவே எல்லோரும் ஒரு குழுவாக இயங்க முடிகிறது. டவேரா, ஜெயாம்மா டிபன் செலவு. என்று ஒரு பிக்னிக் போல ஒரே சந்தோஷம் என்று நினைக்கிறேன். அந்த ஓட்டலில் எடுத்த படங்களில் ஒன்றிரண்டை கண்ணில் காட்டி இருக்கலாம்.
ReplyDeleteமதுரையில் உங்களோடும் மற்றவர்களோடும் அதிக நேரம் பேச இயலாமல் போய்விட்டது. அடுத்து நடக்கப் போகும் புதுக்கோட்டை வலைவர் சந்திப்பை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.
நடுவில் நான் எழுதவதைத் தவிர்த்து பகிர்வினோடு மட்டுமே நிறுத்திக் கொண்டேன்..
Deleteஎன்னை மீண்டும் பதிவெழுதத் தூண்டியவர் நிலவன் அண்ணாத்தேதான் ...
பலபேரை இனம்கண்டு வெளிக்கொணர்பவர் அவர்...
படங்கள் வேலு நாச்சியார் தளத்தில் இருக்கிறது.. எனவே நான் தவிர்த்தேன்..
"வலைவர்" புதிய வார்த்தை உருவாக்கிவிட்டீர்கள் அற்புதம் தமிழ் இளங்கோ சார்!
Deleteநான் உருவாக்கவில்லை. என்னையும் அறியாமல் தமிழ் சொல்லாடல் காரணமாக, அந்த சொல் டைப் செய்யும் போது வந்துவிட்டது. வலைப்பதிவர் என்று நீட்டி முழக்க யோசித்த மனம் தட்டிவிட்ட சொல் இது. சரியா தவறா என்று தெரியவில்லை.
Deleteவலைவர் என்பது மீனவரைக் குறிக்கும் சொல். ” வலைவர் தந்த கொழுமீன்” என்று ஐங்குறுநூறு (180) சொல்கிறது. BLOGGER என்பதற்கு வலைவர் என்பது நேரிடையான சொல் இல்லை. இலக்கியப் பயிற்சி காரணமாக வந்துவிட்டது. மன்னிக்கவும்.
Deleteஒரு வார்த்தையை பல பொருள் தரும்படி பயன்படுத்தினால் தவறில்லை என்பதே என் நிலை வலைவர் தமிழ் இளங்கோ அய்யா...
Deleteநான் விழாவிற்கு வந்தேனா? வந்ததாகக் கனவு கண்டேனா? ஹிஹி
ReplyDeleteபத்து வயது இளமையாக ஒரு பதிவர் உங்களை மாதிரியே இருந்தார் ...
Deleteநீலக் கலர் சிறுகட்டமிட்ட சட்டை...
அது நீங்க இல்லையா...
அவ்வ் ...
சாரி அய்யா நான் ஏமாந்துட்டேன்
உங்கள் வாழ்த்தை நிகில் நிறுவனர்களிடம் சொல்லி விடுகிறேன் ,
ReplyDeleteநகைச்சுவையுடன் கூடிய உங்கள் எழுத்து நடையை ரசித்தேன் .தொடருங்கள் உங்களுடன் நானும் பயணிக்கிறேன் !
த ம 5
நன்றி நன்றி நன்றி
Deleteவிழாவில் கலந்து கொள்ள முடியாத என் போன்றவர்களுக்கு விழாவிற்குச் சென்று வந்த உங்கள் போன்றோர்களின் பதிவுகள் தான் விருந்து.....
ReplyDeleteஅடுத்த வருடம் உங்கள் ஊரில்..... வந்துவிடுவோம்!
நன்றி திரு வெங்கட்
Deleteபுதுகோட்டை டூ மதுரை பதிவர் சந்திப்பு சூப்பர்... ஒரு மெல்லிய நகைச்சுவையுடன் நகரும் பதிவு.. ஆமா அதில் சீனுகுரு பற்றி குறிபபிட்டதும் அதே நகைச்சுவையின் தொனியில் தானே ;-)
ReplyDeleteஇல்லேப்பா அவர் பார்க்கத் தான் குழந்தையாட்டம் இருக்கிறார்...
Deleteஆனா எழுத்து ஜோர்ப்பா
நீங்க படிக்கவில்லயா?
ரசித்தேன் வரிகளை...
ReplyDeleteஎன்னால் புதுகை நண்பர்களுடன் பேச கூட முடியல....
ஆனா உங்க ஊர்ல ரகளை பண்ணிருவோம்....
நன்றி ... வருக வருக
Deleteஅருமை மது!
ReplyDeleteஅன்புக்கணவனும் அருமைமனைவியும் அழகுக் குழந்தைகளுமாய் எழுத்தாளர்கள் கஸ்தூரி-மைதிலி இணையர் அமைந்தது, புதுக்கோட்டை பெற்ற வரம். இந்தக் கோட்டை அன்பையே அடித்தளமாகவும், அறிவை கோபுரமாகவும் கொண்டது என்பதால் நல்லபல விளைவுகள் நடந்து வருகின்றன. இன்னும் நடக்கும். இணைந்து பல விளைவுகளுக்கு வித்திடுவோம். நன்றி மது.
ஆகா ...
Deleteஅண்ணனுக்கு ஒரு ஸ்ட்ராபெரி ஐஸ் க்ரீம் பார்சல் ....
நன்றி ...
ஓகே பதிவர் சந்திப்பு
நிச்சயம் அதற்கான பளு பிரிண்டை ரெடி பண்ணீட்டிங்க என்பது கடந்தமுறை தொலைபேசியபொழுதே தெரிந்துவிட்டது ...
அந்தப் பொங்கல் விஷயம் சூப்பர்! ..எப்படி பேச்சிலையும் எழுத்திலையும் கலக்குறீங்க கஸ்துரி...!?
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க...!
வருகைக்கு நன்றி அண்ணா
Deleteபதிவர் சந்திப்பைப் பற்றி அருமையான பதிவு. முதலிலேயே சொல்லாமல் சாப்பிடும் நேரம் பார்த்து அழைத்தேனே...தவறான டைமிங் ஆகிவிட்டது அண்ணா..முன்னரே சொல்லியிருக்க வேண்டும்.
ReplyDeleteஅட்லாண்டா வந்து சேர்ந்து ஹோட்டலில் இருந்துதான் இப்பொழுது கருத்திடுகிறேன். நன்றி அண்ணா..
இங்கு வந்து அனைவரையும் பிரிந்த ஏக்கத்தில் இருக்கும்பொழுது அடுத்த சந்திப்பைப் பற்றி கூறி இன்னும் ஏங்க வைக்கிறீர்களே..!
அடுத்தமுறை சேர்த்துவைத்து சாப்பிட்டால் போகுது..
Deleteநன்றி விரைவில் நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்
மீண்டும் ஒரு முறை பதிவர் சந்திப்புத் திருவிழா அரங்கில் அமர்ந்திருந்து உணர்வு
ReplyDeleteநன்றி நண்பரே
அடுத்த பதிவர் சந்ததிப்பு ஜுன் மாத்திலேயேவா, அருமை
நன்றி அய்யா ...
Deleteநன்றி ....
ReplyDeletehttp://maduraivaasagan.wordpress.com/2014/11/04
ReplyDeleteமதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா குறித்த தங்கள் பதிவு அருமை.
நன்றிகள் தோழர்
Delete