எனது பணி ஓய்வு தினத்தில் என்னுடைய மூன்று புத்தகங்களை வெளியிடுவேன் என்று சொல்லி தேதி, விழா அரங்கம் முதல் குறிப்பிட்டு சொல்லியிருந்தார் அண்ணாத்தே முத்துநிலவன். அன்றே புதுகை இணையத் தமிழ் சங்கத்தையும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்றும் சொல்லியிருந்தார்.
மூன்று புத்தகங்களை அச்சுக்கு கொண்டுவருவதும் இறுதிப்படுத்துவதும் ஒன்றும் சாதாரண வேலையல்லவே! விழா கொஞ்சம் தள்ளிப் போய்விட்டது. வலைப்பூவில் மலர்ந்த கட்டுரை மலர்கள் மாலையாகியிருக்கின்றன! நறுமணம் கமழ்கின்றன. மலர்களை விட மாலைக்கு மதிப்பு அதிகம்தான் என்று ஒரு முகவுரையில் இருந்தது எவ்வளவு பொருத்தமானது.
நூல்கள் முன்பே கைக்கு வந்துவிட்டாலும் விழா முடிந்துதானே அவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து பொறுமைகாத்தேன்.
விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. நகர்மன்றமே கோலாகலமாக இருந்தது. தோழர்கள் அரங்கை நிறைக்க ஆரம்பித்தனர் நான்கு மணிக்கெல்லாம்!
தோழர் ஜி.ராமகிருஷ்ணன் வந்தவுடன் விழா துவங்கியது. கவிஞர் நந்தலாலா, தீக்கதிரின் மதுக்கூர், பாலபாரதி எம்.எல்.ஏ என மேடை நட்சத்திரங்களால் மின்னியது.
தனது கந்தர்வக் குரலால் கவிஞர் தங்கமூர்த்தி நிகழ்வை ஒருங்கிணைக்க பார்வையாளர்கள் லயித்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
நிகழ்வு பெங்களூரில் இருந்து சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸை வரவழைத்து விட்டது. மாப்பிள்ளை ஆல்பர்ட் வினோத்துடன் வெகுதூரம் பயணம் செய்து வந்திருந்தார் கிரேஸ்.
கிரேஸ் தனது தேன் மதுரத் தமிழ் என்கிற தளத்தில் சங்க இலக்கியங்களை எளிய கவிதைகளில் எழுதிவருவதுதான் உங்களுக்குத் தெரியுமே.
இத்துடன் அவர் சங்க இலக்கியத்தை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வருகிறார். ஒரு மென்பொருள் துறை பெண் எப்படி இப்படி சங்கத் தமிழ்க் கடலில் முத்து குளிக்க ஆரம்பித்தார் என்று பலமுறை நானும் என் மனைவியும் வியந்து பேசுவது உண்டு. மேலும் கிரேஸு க்கு தமிழர்கள் சங்க இலக்கியத்தை கொண்டாடுவதில்லை என்ற விமர்சனமும் வருத்தமும் உண்டு.
நாம்தான் தமிழையே கொண்டாடுவதில்லையே! அப்புறம் எங்குட்டு சங்க இலக்கியம் கொண்டாட்டம் சாத்தியம்?
தமிழின் எதிர்காலம் குறித்த நினைக்கையில் கவிழும் காரிருளிலும் ஒளிரும் நட்சத்திரங்கள் பல உண்டு ஆங்கில ஆசிரியர் ஜோ.வி., கணித ஆசிரியர் கரந்தை ஜெயக்ககுமார், இளையநிலா, பிரான்சின் கவி பாரதிதாசன் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களோடு ஒளிரும் சகோதரி கிரேஸ் விரைவில் புத்தகம் ஒன்றை வெளியிடப் போகிறார்.
மாப்பிள்ளை ஆல்பர்ட் வினோத் தமிழில் எழுதுவதில்லையே தவிர அவரது அசரவைக்கும் தமிழுணர்வும், கலாச்சாரப்பீடும் ஒரு நல்ல மனிதரை சந்தித்திருக்கிறோம் என்கிற மனநிறைவு கிடைத்தது.
சகோதரி. கீதா மற்றும் மாப்பிளை ஆல்பர்ட் வினோத்துடனும் கிரேசுடனும் பழனியப்பா உணவகத்தில் இனிதே கழிந்தது ஒரு மணிநேரம். கீதா அக்காவின் பறைப் பயிற்சி குறித்த அனுபவங்கள் உணவுக்கு அலாதி சுவையை சேர்த்தன.
இந்த இடைவெளியில் தப்பி ஓடிவிட்ட கரந்தையாரையும், அய்யா தமிழ் இளங்கோவையும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
லேய் புத்தக வெளியீடு என்று சொல்லிவிட்டு பதிவர் சந்திப்பை நடத்தியிருக்கீங்களா என்று நீங்கள் புகைவிடுவது புரிகிறது.
விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரப் பதிவர்கள் ஊமைக்கனவுகள் விஜு, எனது எண்ணங்கள் தமிழ் இளங்கோ ஐயா, கரந்தையார், பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் அய்யா.மதிவாணன், ஸ்டாலின் சரவணன், மழலையர் பிரிவு கூ.தொ.க.அ. ஜெயலெட்சுமி அம்மா, சகோதரி கீதா, கவிஞர் சுவாதி, நந்தலாலா இணைய இதழின் ஆசிரியர் கவிஞர் வைகறை, எண்ணச்சிதறல்கள் மகாசுந்தர், மகிழ்நிறை , மணவை ஜேம்ஸ், என மிகப் பெரிய பதிவர் பட்டாளத்தை விழா ஒருங்கினைத்திருந்தது.
இதில் பாதிப்பேரை பதிவராக்கிய நடைநமது விழாவில் இல்லாதது வருத்தமே என்றாலும் புரிகிறது.
----
அதெல்லாம் சரி நீ ஏன் பதிவை தாமதமாகப் போட்டாய் என்போர்க்கு.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் பழைய வேகம் இப்போது மட்டுப்பட்டிருகிறது. பல்வேறு காரணிகள்.
ஒரு நாளைக்கு மூன்று பதிவுகள் கூட வெளியிட்டிருக்கிறேன். ஆனால் இப்போது முன்தேதி இட்டுவிடுகிறேன். விடுதலை வேள்வி இப்படி முன்தேதி இடப்பட்டதுதான். பதிவுகள் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே வெளியாகும். கடைசிப் பதிவு பட்லர் நேற்று பதியப்பட இன்று இது சாத்தியமானது.
இது மூங்கில் காடு முரளீதரன் அவர்களின் ஆலோசனை. ஒரு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் குறைந்தது ஒன்னரை நாட்கள் இடைவெளி இருக்கவேண்டும் என்று சொன்னார் அவர். இதுதான் வாசகருக்கான மரியாதை என்றும் சொன்னார்.
இதற்கு பின்னும் நான் ஒன்றும் மரியாதையாக நடந்துகொள்ளவில்லை. (காரணங்கள் இன்னோர் பதிவில்)
பகிர்தலுக்கான நியாயங்கள்.
பொதுவாக எனது பாணியை மட்டும் படிப்போருக்கு ஒரு விடுதலை அளிக்க வேண்டியது எனது கடமை. எனவே வாசிப்பு பாணி மாற்றத்திற்காக சக பதிவர்களின் பதிவை அனுமதிபெற்று பகிர்கிறேன்.
லேய் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்லே எப்டீல இருபது பதிவுகளை பகிர்வாய் நீ ?
எனக்கு விடுதலை போர் குறித்த ஒரு ஈர்ப்பும் கவர்ச்சியும் உண்டு. எனவே வெட்கமின்றி பகிர்ந்தேன். வரும் ஆண்டிற்கு மாணவர்களை தயார் செய்ய விரும்பும் ஆசிரியர்களுக்கு உதவிய மாதிரியும் ஆச்சு. எனக்கான உசாத்துணை கருவூலமும் ஆச்சு. எனவே விடுதலை வேள்வி கட்டுரைத் தொடரைப் பகிர்ந்தேன்.
நன்றி நண்பர்களே
சந்திப்போம்
நாம் தான் தமிழையே கொண்டாடுவதில்லையே... சரியாகச் சொன்னீர்கள் சார்... விழா நல்ல முறையில் நடந்ததற்கு வாழ்த்துகள், உண்மையிலேயே விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் தொடர் பதிவு எல்லோருக்கும் பயனளித்தது சார்...
ReplyDeleteநன்றி ஜெய்..
Deleteஆஹா அருமையான பதிவு...உண்மைதான் பதிவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்வும், தம்பியின் விருந்தோம்பலும் மறக்கவியலா ஒன்றாய்..கிரேஸ் &வினோத் ஆகியோர் வந்தது கூடுதல் சிறப்பாய்...
ReplyDeleteஅனைவரையும் சந்தித்தது உண்மையில் மகிழ்வு..
Deleteமுத்து நிலவன் அய்யாவிற்குதான் நன்றி சொல்லவேண்டும் ...
இது எப்ப நடந்தது? மதூ? ஒவ்வொரு மாநாட்டிலும் இதுபோலும் “கிளைமாநாடுகள்“ நடப்பதுதான் சிறப்பு. பெரியவுங்க அவங்கபாட்டுக்கு தீர்மானம், செயல்திட்டம் னு போட்டுத்தாக்கிக்கொண்டிருக்க, இன்னொருபக்கம் வெகுநாள் கழித்து சந்தித்த நண்பர்கள் தேநீருடன் பேசும் பேச்சுகளில்தான் மாடநாடுக்ள் சிறப்புறும். ஆகா..என்னையும் கூப்பிட்டிருக்கலாம்ல மது? பழனியப்பன் அண்ணன் நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்த ரகசியம் இதுதானா? நன்றி மது... எல்லாவற்றிற்கும்.
Deleteநாயகனை இழுத்துக்கொண்டு வந்துவிட்டால் அப்புறம் நிகழ்வு எப்படி ?
Deleteநான் உணவகம் உள்ளே செல்லும் பொழுது அவசரமாக ராதா புறப்பட்டுகொண்டிருந்தார் ... என்ன என்றால் அப்பா வெளியூரில் இருந்து வருகிறார் அவரை விழாவிற்கு அழைத்து செல்ல போய்க்கொண்டு இருக்கிறேன் என்றார்..தோழர். ச.ப வெளியூரில் ஒரு கூட்டத்தில் இருந்து அவசரமாகத்தான் வந்தார்..
அடுத்த குடும்ப விழாவில் சந்திப்போம்...
ReplyDeleteநிச்சயம்... நடுவில் மைத்துனர் ஒருவரின் திருமணம் வருகிறது ...
Deleteதேதிகள் சிரமப்படுத்தாது என்றே நினைக்கிறன்...
எலேய்! (மன்னிக்கவும்! இது சும்மா தோழரே! நம்ம கூட ஒருத்தங்க எழுதறாங்கல்ல அவங்க வேலை இது!!) இப்படி பதிவர் குடும்ப விழா மாதிரி நடத்திப்புட்டு எங்க காதுல புகைய வைச்சுட்டீங்களே! இது நியாயமா? அடுக்குமா? இதுல வேற ஆளுக்கால், பக்கம் பக்கமா போட்டுத் தள்ளுறாங்க! எந்தப் பக்கம் போனாலும் இதப் பத்தித்தான் பேச்சு! எத்தனைவாட்டிதான் பொறாமைப் பட்டு புகையறதாம்..ஹஹஹஹ....சத்தியமா மிஸ்ட் இட்! மது தோழரே மிகவும் ரசித்தோம் உங்கள் பதிவை, மிகவும் நகைச்சுவை இழையோட அழகான பதிவு!
ReplyDeleteசந்திப்போம் தோழர்...
Deleteமதுரையில் சந்திப்போம் நண்பரே.
Deleteஇப்படி எல்லாரும் மிக அழாகாகக் கூடி கும்மி அடிக்கிறீங்களேப்பா.....மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது! ஆனால் நம்மால் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தமும் வருகின்றது! என்ன செய்ய?!!
ReplyDeleteஇதைவிடப் பெரிய விழா காத்திருகிறது அல்லவா ?
Deleteஅங்கே சந்திப்போம்..
அண்ணா, புத்தக வெளியீடு பற்றி எழுதுவீர்கள் என்று பார்த்தால் என்னையும் என் கணவரையும் பற்றி இவ்வளவு எழுதியிருக்கிறீர்களே. உங்கள் அன்பும் உபசரிப்பும் கொடுத்த மகிழ்ச்சி இன்னும் நீங்கவில்லை, எப்பொழுதும் நீங்காது..எங்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. முத்துநிலவன் அண்ணாவின் புத்தகவெளியீடு இனிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது. மேலதிகமாக நிறை,மகியின் அன்பு... நன்றி அண்ணா.
ReplyDeleteவாழ்வின் அற்புதமான தருணங்கள் ஒரு கனவுபோல் கடக்கும் என்பதை உணர்ந்த தருணங்கள் அவை.
Deleteநன்றி வினோத்திற்கும் நெடும் பயணம் //பயமல்ல// செய்து வந்து கலந்துகொண்ட உங்களுக்கும். விரைவில் புத்தகம் அச்சிட வாழ்த்துக்கள்.
எல்லாவற்றையும் விலாவாரியாக கூறியுள்ளீர்கள் சகோ ! மிக்க நன்றி எனக்குத் தான் பொறாமையாக இருக்கிறது என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே என்று. உங்களை எல்லாம் சந்திக்க முடியாவிட்டாலும் புகைபடத்தில் பார்த்த திருப்தியுடன் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteநன்றி சகோதரி ... என்ன நாங்க நேரே வந்து பார்க்கிறோம்... சரிதானே..?
Deleteஉங்கள் விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். சமூகத்தில் உங்கள் இடமும் உங்களுக்குண்டான தகுதியையும் இதன் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. வாழ்த்துகள்
ReplyDeleteவருக ஜி
Deleteஉங்கள் பதிவுகளைப் பற்றி அடிக்கடி விவாதங்கள் வரும் வீட்டில்.
நீங்கள் பார்க்கும் மின்வெளிப் பிம்பம் ஒரு அப்பாடக்கர்தான் ...
ஒரு ஆசிரியனுக்கு உள்ள தகுதியோடு சமூகத்தில் இருந்தாலே போதும் தோழர்.
பல புத்தகங்களை வெளியிட்ட தங்கள் வரவு மகிழ்வு.
நான் நடைநமது, ஜோ.வி (ஊமைக்கனவுகள்), கரந்தையார், தோழர் எட்வின் போன்றோரின் பதிவுகளைப் படிக்கும் பொழுது இனி இந்த வலைப்பூவில் எழுதுற வேலையெல்லாம் எனக்குத் தேவையா என்று கேட்பேன்.
அப்போது வீட்டுக்கார அம்மா சொல்வாங்க கீதமஞ்சரி, ஜோதிஜி அண்ணாவின் பதிவுகளை படிக்கும் பொழுது எனக்கும் அப்படித்தான் இருக்கும் என்று !.
//பீலிங்க்ஸ் ஆப் இந்தியா... //
மூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும் பதிவு என்னை ஆத்மார்த்தமாக அங்கேயே இழுத்து வந்துவிட்டது சகோதரரே!
ReplyDeleteநடந்தவற்றை நிகழ்வினை நேரிற்கண்ட ஓருணர்வு! மிகச் சிறப்பு!
கவிழும் காரிருளிலும் ஒளிரும் நட்சத்திரங்கள் என்ற வரிசையில் அடிக்கடி தலைமறைவாகும் இந்த இளையநிலவுமா?..
உங்கள் அன்பினை என்னென்று நான் சொல்ல.. காலம் கைதரட்டும் சகோ!
உங்களையெல்லாம் காண வரும் நாளுக்காகக் காத்திருக்கின்றேன்!
உங்கள் வலைப்பூ உண்மையில் எனக்கு முக்கியமான வாசிக சாலை!
பதிவுகள் ஒவ்வொன்றுமே அறிவுக்கு விருந்தாகும் அற்புத நூல்கள்!
தொடருங்கள்!..
வாழ்த்துக்கள் சகோ!
உங்கள் எழுத்தின் வீர்யம் உங்களுக்கு புரியவில்லை
Deleteமரபுக்கவிதை உங்களை ஒரு வரம் மாதிரி பற்றிக்கொண்டிருக்கிறது.
அதற்கென்று பண்டிதர்களுக்கு மட்டுமே புரியும் வண்ணம் எழுதாது
என்னை மாதிரி தரைடிக்கெட்டுக்கும் புரிகிற மாதிரி எழுதுவது உண்மையில் அந்த வரத்தின் வேலையாகத்தான் இருக்கவேண்டும்...
வருகைக்கு நன்றி சகோதரி...
தொடருங்கள்
நூல் வெளியீட்டு விழாவை தங்களது பாணியில் அசத்தலாக பகிர்ந்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள் தோழரே!
ReplyDeleteநன்றி சுவாமிகளே...
Deleteஉங்களுக்கென்று ஒரு கலக்கல் நடை! நூல் வெளீயீட்டு விழா பற்றி ஜமாய்த்து விட்டீர்கள். புதுக்கோட்டையில் வலைப் பதிவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முக்கிய காரணம், அய்யா கவிஞர் முத்துநிலவன் அவர்கள்தான்.
ReplyDeleteபெங்களூரில் இருந்து ஆர்வமாக வந்திருந்த, தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களின் தமிழ் ஆர்வம் பற்றி சொல்லி இருந்தீர்கள். அவருடைய வலைப் பதிவின் தலைப்பே இன்னும் சொல்லும். அவருடைய சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பு பின்னாளில் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரிதாகப் பேசப்படும். அவருக்குக்கும் அவருடைய கணவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
// இந்த இடைவெளியில் தப்பி ஓடிவிட்ட கரந்தையாரையும், அய்யா தமிழ் இளங்கோவையும் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். //
ஓடி விடவில்லை. மழையின் மிரட்டல்தான் காரணம். பழனியப்பா மெஸ்சின் சுவையான உணவினை பதிவர்களோடு சேர்ந்து சாப்பிடும் வாய்ப்பை இழந்து விட்டேன்.
த.ம.4
நான் ரொம்பவே வருத்தப்பட்டேன்.
Deleteமோப்பக் குலையும் என்கிற பாடல் நினைவில் வந்து படுத்தியது..
//அவருடைய சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பு பின்னாளில் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரிதாகப் பேசப்படும். அவருக்குக்கும் அவருடைய கணவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!// உங்கள் வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி ஐயா. உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
Deleteதோழரே வணக்கம்.
ReplyDeleteநானும் ஏதாவது எழுத வேண்டும் என்றுதான் நினைத்தேன்.
நீங்கள் வேறு நகைச்சுவையாக எழுதும் படிக் கூறிவிட்டீர்களா..
நிச்சயமாய் அடுத்த பதிவு நகைச்சுவையாகத்தான் எழுத வேண்டுமென்று முடிவு செய்துவிட்டேன்.
நட்சத்திரப்பதிவர்கள் வரிசையில் என்னைச் சேர்த்துவிட்டீர்கள் அல்லவா..
என் தலையைச்சுற்றி ஒரே நட்சத்திரம் தான்...
காமிக்ஸில் காட்டி இருப்பார்களே அது மாதிரி..!!!!
பதிவை ஏற்றிவிட்டு நாம் அமைக்கும் தேதியில் வெளியிடலாமா....?!
நம்பினால் நம்புங்கள்,
இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் ஏங்கிய வசதி அது..!
தொழில் நுட்ப விஷயங்களையும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் தோழர்!
புத்தக விழாவில் அதிகம் பேச முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.
நிறைய உங்களிடம் கேட்க தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
தொழில்நுட்ப விஷயங்கள் அல்ல!
சாத்தியப்படவில்லை.
முத்துநிலவன் ஐயா என் வீட்டிற்கு வந்த ஜனவரி 1,2014 ஐயும்,
“வலைத்தளங்களில் ஏதும் இயங்குகிறீர்களா“ என்ற கேள்வியையும்
பல முறை நினைத்துக் கொண்டேன்.
கவனிப்பாரற்று பதினாறு ஆண்டுகளாக இருந்து ஒரு சில மாதங்களாக என்னால் ஆராதிக்கப்பட்ட கணினி செயலிழந்த நேற்றிரவு முதல் இன்று மாலை இதைச் சரிசெய்யும் வரை எனக்குண்டான படபடப்பு சரியில்லை என்று மட்டும் தோன்றுகிறது.
வழக்கம் போலவே உங்கள் பதிவின் நடையும், பல பதிவுகளை நீங்கள் பகிர்தலுக்கான நியாயங்களும் அருமை!
அதுசரி நானென்ன செய்ய?
வருக... தோழர் ..
Deleteவெகு குறுகிய காலத்தில் நிறையப் பேர் படிக்கும் பதிவராக மாறியிருகிறீர்கள். வெகுசில பதிவுகளோடு வெகு அதிகம் பேர் பார்வையிடும் நடைநமது மாதிரி.
உங்களின் பல்லாண்டு வாசிப்பு உங்கள் பதிவுகளில் கசிகிறது.
பிரமிப்பூட்டும் கவிதைகள்
ஆய்வு நோக்கு
எல்லாம் ஒருங்கே பெற்றவர்கள் வெகுசிலரே..
அவர்களிலும் பதிவுலகில் உங்களைப்போல் செயல்படுபவர்கள் ...?
படபடத்து செயல்பட வேண்டிய அவசியம் உங்களுக்கு தேவையே இல்லை.
இதுகுறித்து எனது கருத்தை விரிவாக வெளியிடுகிறேன் ஒரு பதிவாக ...
நண்பரே தேட வேண்டாம். அன்று அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சிக் கடலில் அல்லவா மிதந்து கொண்டிருந்தேன். விழா நிறைவு பெற எப்படியும், இரவு பதினோரு மணி ஆகிவிடும் என்று கணித்தோம். எனவே புறப்பட வேண்டியதாகிவிட்டது.
ReplyDeleteஅக்டோபர் 26 அன்று மதுரையில் சந்திப்போம் நண்பரே
சரியாகத்தான் கணித்தீர் ...
Deleteமீண்டும் சந்திப்போம் தோழர்...
உங்களுக்கென்று ஒரு கலக்கல் நடை! நூல் வெளீயீட்டு விழா பற்றி ஜமாய்த்து விட்டீர்கள். புதுக்கோட்டையில் வலைப் பதிவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முக்கிய காரணம், அய்யா கவிஞர் முத்துநிலவன் அவர்கள்தான் என்பதில் தவறில்லை!
ReplyDeleteபெங்களூரில் இருந்து ஆர்வமாக வந்திருந்த, தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களின் தமிழ் ஆர்வம் பற்றி சொல்லி இருந்தீர்கள். அவருடைய வலைப் பதிவின் தலைப்பே இன்னும் சொல்லும். அவருடைய சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பு பின்னாளில் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரிதாகப் பேசப்படும். அவருக்குக்கும் அவருடைய கணவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
// இந்த இடைவெளியில் தப்பி ஓடிவிட்ட கரந்தையாரையும், அய்யா தமிழ் இளங்கோவையும் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். //
ஓடி விடவில்லை. மழையின் மிரட்டல்தான் காரணம். பழனியப்பா மெஸ்சின் சுவையான உணவினை பதிவர்களோடு சேர்ந்து சாப்பிடும் வாய்ப்பை இழந்து விட்டேன்.
த.ம.4 (முதலில் நான் அனுப்பிய பின்னூட்டம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை)
சீனியர் பதிவருக்கு நன்றி,
Deleteதங்கைக்கு உங்கள் பின்னூட்டம் நல்லதோர் உந்துசக்தியாக இருக்கும்.
உண்மைதான் ஒரு பல்லாயிரம் மைல் பயணத்தில் ஒரு இருபது அடி எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு தெரியாமலேயே இன்னும் பல நூறு மைல்கல் அவர் பயணிப்பார். அந்தப் பயணத்தின் பின்னர் நிச்சயம் பேசப்படுவார்.
"தமிழ் இளங்கோவின்" வாக்கு பலிக்காமல் போகுமா என்ன ?
நன்றி ...
நன்றி.
ReplyDeleteநிலவன் ஐயா அவர்களின் புத்தக வெளியீட்டிற்குச் சென்று பதிவர் சந்திப்பும் நிகழ்த்தி வந்திருக்கிறீர்கள். அருமை...
ReplyDeleteநன்றி சகோ.குமார்.
Deleteமுன்று புத்தகங்களின் வெளியீடும்,நட்புவிழாவுமாய் நடந்த நூல் வெளியீட்டிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஸ்ட்ரீம் ஆப் கான்ஷியஸ்னஸ் பதிவருக்கு வணக்கம்..
Deleteவருகைக்கு நன்றி..
விழாவுக்கு வரமுடியாத வருத்ததை உங்களின் இந்த பதிவு போக்கியது. வலைப்பூக்களின் மூலம் ஒரு புதிய தமிழ்புரட்சி நடக்கப்போவதன் கட்டியமாக இந்த விழாவினை பார்க்கிறேன் !
ReplyDeleteநன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...
http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி
நன்றி சாம்
Deleteவருகிறேன்..
“சகோதரி. கீதா மற்றும் மாப்பிளை ஆல்பர்ட் வினோத்துடனும் கிரேசுடனும் பழனியப்பா உணவகத்தில் இனிதே கழிந்தது ஒரு மணிநேரம்“ - பார்ரா... இந்தக் கிளை மாநாட்டுக்கு என்னை ஏன் அழைக்கவிலலை மது? உண்மையில் உங்கள் எல்லாருடனும் பேசிக்கொண்டிருக்க முடியவிலலையே என்னும் உறுத்தல் எனக்கு (மேடையில் மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது) இருந்தது. விழாநிகழ்வில் நம் இனிய வலைப்பதிவர் குடும்பம் சந்தித்ததை மறக்கஇயலாது. நமது விழாவைப்பற்றி உளப்பூர்வமாக எழுதியது குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் உங்கள் இருவரின் அன்பால் வந்த வலைப்பதிவர்களையெல்லாம் கவர்ந்து சென்று விட்டீர்கள்! குட்டீஸ இருவரும் வந்தது கூடுதல் அழகு சேர்த்தது. அதை அழகாகத் தொகுத்து எழுதியது நெஞ்சில் நிற்கிறது. மிகவும் நெகிழ்கிறேன்.
ReplyDeleteநன்றி
Delete//அழகாக//
???
பெருந்தன்மைக்கு நன்றி...அண்ணாத்தே