அவையோருக்கு அடியேனின் பணிவான வணக்கம்
கவிஞர் கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பை வாழ்த்தும் முகத்து இங்கே உங்கள் முன்னே நான்.
நல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள்.
மொழியை நேசிப்போர் வியந்து ரசிக்கும் வார்த்தை பயன்பாடு இந்நூலெங்கும் விரவி ஜாமுன் ஜீராவாய் இனிக்கிறது.
கவிஞர் குளிர்களி என ஐஸ்க்ரீமை சொல்கிறபொழுதும் சூரியனை அனலி என்று செல்லமாய் சினுங்குகிறபோழுதும், கணிப்பொறி வைரசை நச்சு நிரல் என்கிற பொழுதும் தமிழ் இன்னும் பிழைத்துக் கிடக்கும் என்கிற நம்பிக்கை நமக்கு துளிர் விடுகிறது.
புத்தாண்டை வரவேற்கும் கவிதை ஒவ்வொரு புத்தாண்டும் பல பத்தாண்டுகளுக்கு முன் வந்தாலும் இன்னும் ஒலிக்கும் சகலகலா வல்லவனின் விஷ் யு ஹாப்பி நியு இயர் போல ஜனரஞ்சகமான அடைதலை பெரும் என்பதற்கு
தேன்மதுரத் தமிழ் தித்திக்க
எட்டுத்திக்கும் செந்தமிழ் கமழ
தமிழும் தமிழரும் வளம்பெற
வருக எம் இனிய புத்தாண்டே!

என்கிற வரிகளே சாட்சி
இப்படி மாஸ் கிரேஸ் மட்டுமல்ல தொகுப்பெங்கும் நிறைந்திருக்கும் கவிஞரின் சூழல் அக்கறையும் சொல்கின்றன பல வரிகள்.
பாப்பா கதையில் திக் திக் கேள்விகளை பொதிக்கிறபொழுது அது நமக்கு புரிகிறது.
கூழாங்கல் எங்கே?
பானையும் எங்கே?
தண்ணீரும் எங்கே? எங்கே?

இன்னொரு கவிதையில் ஆற்றுக்கு ஆறுதல் பாவொன்று
ஆறுகளும் காணாமல் போனால்
ஆழியும் என்ன ஆகுமோ?
வானம் எங்கிருந்து முகருமோ?
உயிர்கள் எங்ஙனம் தழைக்குமோ?
கவிஞர் இப்படி கேட்கும் பொழுது நமது சட்டையைப் பிடித்து உலுக்கப்போகும் எதிர்காலச் சந்ததிகளின் கேள்விக்கும் நாம் தயாராகிறோம்.
நீர் சிக்கனம் குறித்து
நீதான் பூமியக் காப்பாத்தப் போறியா?
என்றாள், அவள்
நான்தான் இல்லை
நானும்தான்
என்றேன், நான்
என்கிற வரிகளில் நமக்கு நம்பிக்கை மட்டுமல்ல நாமும் செய்லபட உத்வேகம் கிடைக்கிறது.
தன் மனைவி கவலைப்பட்டு பேசினால் அவளுக்கு ஆறுதல் மட்டுமே தரவேண்டும் ஆலோசனை தரக் கூடாது என்பது பல கணவர்களுக்கு தெரியாத இல்லற மந்திரம். கவிஞர் ஒரு பெண் என்பதால் இந்த விசயம் வெகு எளிதாக சொல்லப்பட்டிருகிறது ....
மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்
நீ மட்டும் என்னுடனே இருப்பாயா?
இதைவிட மேலாய் இல்லறம் சிறக்க சகோதரி ஒரு ஆத்திசூடியை தந்திருக்கிறார் கனவுக் கணவனே என்கிற கவிதையில்.
இந்தக் கவிதையை பிரின்ட் செய்து வீடுகளில் ஒட்டிவிட்டால் போதும் நாட்டில் ஒருபோதும் மன முறிவுகளே இருக்காது!
நாளைய சமுதாயம் நம் கையில் என்கிற கவிதை நான் உட்பட பலபேரின் மனச்சான்றை பிடித்து உலுக்கும்.
திருநாள் குறித்த கவிதையில்
மாந்தர் தம்மைக் கவனியாமல்
மயங்கிக் களிப்பதுவா திருநாள்?

என்ற கேள்வி நமது இதயத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
படைப்பாளியின் பால்யம் தவழும் கேள்விகளும் உண்டு தொகுப்பில்
அவை அலைநுரைப் பந்தாக நம் தலையில் பட்டென்று விழுகின்றன.
கவிஞர் தேன்மதுரத் தமிழ் கிரேஸ் காணும் காட்சி காப்பியமாக, கேட்ட ஒலி கானமாக, உணர்வு கவிதையாக மலர்ந்திருக்கிறது இத்தொகுப்பில். கவிஞருக்கு எனது வாழ்த்துக்கள். கவிப்பயணம் தொடரட்டும்.
அன்பன்
மது

ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழிலும் அசத்திய சகோவிற்கு பாராட்டுக்கள்,வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி சகோதரி..
Deleteஆமாம் கீதா, அண்ணா அசத்திவிட்டார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
Deleteஆத்திசூடி....! யப்ப்பா.....!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரிக்கும்....
வணக்கம் அண்ணாத்தே~!
Deleteபணியைத் தொய்வில்லாமல் தொடர வாழ்த்துக்கள்
விழா ஏற்பாடுகள் அசத்தல்..
நன்றி தனபாலன் அண்ணா
Deleteபடிக்கத் தூண்டும் அறிமுகம்..!
ReplyDeleteநன்றி தோழர்!
உங்களை நாங்கள் தூண்டுமாக்கும்...
Deleteஇப்படி கலாய்ப்பது நியாமாரே...
நீங்கள்தான் ப்ரூப் ரீட் செய்தது என்று கேள்வி...
அம்மாடியோ அப்புறம் ஒன்னும் தெரியாதது போல கேட்கிறார ரொம்ப சமத்தாக்கும் ம்..ம்..ம்..
Deleteஅருமையான உ ரை அனைவரையும் ஈர்க்கும் வகையில்.
Deleteஆனாலும் பார்க்க மட்டுமே முடிந்தது கேட்கமுடியவில்லை இருந்தும் திருப்தியே ஆனாலும் முழுதும் பார்க்க முடியவில்லை சகோ பதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!
ஊமைக் கனவுகள் இல்லையா! அதான் சத்தமில்லாமல் வேலை நடக்கிறது போலும்!
Deleteநானும் வாசித்தேன் !! இயற்கை, சுற்று சூழல் ,வருங்கால சமுதாயம் ,நெகிழி விழிப்புணர்வு என மிக அருமையாக எழுதியுள்ளார் கிரேஸ் .வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சகோதரி.
Deleteநன்றி ஏஞ்சல்
Deleteநல்லதொரு விமர்சனம்.
ReplyDeleteகவிதை நூலை இயற்றிய சகோதரிக்கும், விமர்சனம் எழுதிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி சகோ
Deleteமனங்கனிந்த நன்றிகள் அண்ணா. உங்கள் ஓயாத வேலைகளுக்கிடையிலும் என் நூலைப் படித்து அன்பாக வாழ்த்திப் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ரசித்த வரிகளைச் சொல்லி அழகாகப் பேசிய உங்கள் வாழ்த்துரை தான் அழகிய தோரணமாய் இருக்கிறது அண்ணா, மீண்டும் உளமார்ந்த நன்றிகள்!
ReplyDeleteதங்கை கிரேஸ் கையெழுத்துடன் இந்தப் புத்தகத்தை வாங்கி வந்தேன். இனிதான் வாசிக்க ஆரம்பிக்கணும் என்கிற நிலையில் இங்க நீங்கள் அழகான அறிமுகத்தை எனக்குத் தந்திருக்கிறீர்கள். சீக்கிரமே படிச்சு ரசிச்சுட்டு ரசிச்ச விஷயங்களை கிரேஸ கிட்ட பகிர்ந்துக்கறேன். நல்லதொரு கவிஞரை (கவிஞியை?) உற்சாகப்படுத்துகிற உங்களின் எழுத்துக்கு ஒரு சல்யூட் மது.
ReplyDeleteEllorum Todnki vitteerkal Nan Abu Dhabi poyi seyya vendum. m.... m... m....
ReplyDeleteஅடடே, சுடச்சுட விமர்சனமா? சூப்பர் சார்... அருமையான வரிகளை சுட்டிக்காட்டியிருக்கீங்க.... வாழ்த்துக்கள்.... விரைவில் படிக்கிறேன்...
ReplyDeleteஅருமையான வாழ்த்துரை தோழரே! நேரில்தான் கேட்க முடியாமல் போனது எங்களுக்கு! இங்கு பதிந்து பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! ஆங்கிலத்தில் பேசியதையும் பதிவீர்கள் தானே! ? அழ்கிய விமர்சனம் தோழரே!
ReplyDeleteமிக்க ந்னறி!