- Get link
- X
- Other Apps
ப்ரோஆக்டிவ்னஸ் (Proactiveness)
பெருமதிப்பிற்குரிய விக்டர் பிராங்கல் கண்டறிந்த தத்துவம் இது.சூழல்களில் எழும் உணர்வுகளுக்கு ஆட்படாமல் அவற்றிற்கு வெறும் எதிர்வினைகளைத் தராமல் அவற்றை அறிவுபூர்வமாக கட்டுப்படுத்துவது ப்ரோஆக்டிவ்னஸ்.
ஒருவர் கோபமாக திட்டும் பொழுது அப்படியே மீண்டும் திட்டுவது ரியாக்டிவ்னஸ். மாறாக கண்டுகொள்ளமால் அந்த இடத்தில் இருந்து நகர்வது. புன்னகையோடு பதில் சொல்ல முற்படுவது போன்ற விசயங்களில் ஈடுபடுவது ப்ரோஆக்டிவ்னஸ் (Proactiveness)
இதுமட்டுமல்ல
சமயங்களில் நம்மீது வீசப் படும் வார்த்தைகள் நெஞ்சை கீறி ரணப்படுத்தும்.
சமயங்களில் நம்மீது வீசப் படும் வார்த்தைகள் நெஞ்சை கீறி ரணப்படுத்தும்.
மெல்ல யோசித்தால் வார்த்தைகளின் எதிர்வினையையை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம்!, என்பது புரியும்.
வார்த்தைகள்தான் அவர்களது.அவைதரும் வலியை உருவாக்குவது நமது மனமே!
அப்போ நாம் வார்த்தைகளை உதாசீனப்படுத்தினால் வலிகள் வர வாய்ப்பிலேயே!
வலி நமது தேர்வே தவிர எதிராளரின் தேர்வல்ல!
மேசையில் தனது மகனின் வெட்டுண்ட தலையைக் கண்டும் ஆங்கில அதிகாரியுடன் மகிழ்வாக உணவுண்ட ஈச்வர் சந்திர வித்யாசாகர் இந்த வகைமனிதர்தான்.
செவென் ஹாபிட்ஸ் ஆப் ஹைலி எபக்டிவ் பீப்பில் என்கிற ஸ்டீவன் கவியின் நூலில் என்னை ரொம்பவே அசத்திய விசயம் இது ...
உங்களுக்குப் பிடிச்சிருக்கா என்ன?
(வாழ்வை மாற்றும் சக்தியுள்ள ஒரு புத்தகம் இது, தமிழிலும் கிடைகிறது )
யாருப்பா அங்கே தமிழ் தாதா ஜோவியா ...இதல்லாம் நம்ம சங்கப் பாடல்களில் இருக்குதே என்று மிகச்சரியாக ஒரு பாட்டை எடுத்துகிட்டு வருவாரே...
எல்லாமே இங்கேயும் பல நூற்றாண்டுகளாக பேசப்பட்டவைதான், பாடப்பட்டவைதான்.
நம்மளுக்கு அதை இங்க்லீஸ்ல படிச்சாத்தானே திருப்தி...
ஜோஜி எங்க சாமிகள் கூட எங்க மொழியில பூசை கேட்கிறதில்லை...இதுல ஆசாமிகள என்னத்தை சொல்வது..
அன்பன்
மது.
(வாழ்வை மாற்றும் சக்தியுள்ள ஒரு புத்தகம் இது, தமிழிலும் கிடைகிறது )
யாருப்பா அங்கே தமிழ் தாதா ஜோவியா ...இதல்லாம் நம்ம சங்கப் பாடல்களில் இருக்குதே என்று மிகச்சரியாக ஒரு பாட்டை எடுத்துகிட்டு வருவாரே...
எல்லாமே இங்கேயும் பல நூற்றாண்டுகளாக பேசப்பட்டவைதான், பாடப்பட்டவைதான்.
நம்மளுக்கு அதை இங்க்லீஸ்ல படிச்சாத்தானே திருப்தி...
ஜோஜி எங்க சாமிகள் கூட எங்க மொழியில பூசை கேட்கிறதில்லை...இதுல ஆசாமிகள என்னத்தை சொல்வது..
அன்பன்
மது.
பயனுள்ள தகவல்கள் பலருக்கும் தமிழ் மணம் 3
ReplyDeleteவாம்மா மின்னல் என்கிற வேகத்தில் வந்திருக்கிறீர் ...
Deleteநன்றிகள்
வணக்கம்
ReplyDeleteஉண்மைதான் சமயங்களில் நம்மீது வீசப் படும் வார்த்தைகள் நெஞ்சை கீறி ரணப்படுத்தும்.நாம் சிந்திப்பதில்லை. அந்த நிமிடங்கள்.அருமையாக சொல்லியுள்ளீர்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி வலைதள போட்டி அறிவிப்பாளரே ..
Deleteஇன்னும் கொஞ்சம் விரிவாக்குங்கள் தோழர். உதவியாயிருக்கும்
ReplyDeleteதோழர் பிராங்களின் வாழ்வே ஒரு சாதனைதான்.
Deleteஇரண்டாம் உலகப்போரின் பொழுது நாஜிப்படைகள் தமது ஊரை நெருங்கி வர 12 பேருக்கும் மேல உறுப்பினர்கள் இருக்கும் தந்து யூத குடும்பத்தை அமெரிக்காவிற்கு இடம்பெயர்த்து விட ஆசைபட்டார் அவர்.
அமெரிக்கர்கள் மனிதநேயம் மிக்கவர்கள் ஆயிற்றே...
நீ டாக்டர் நீ மட்டும் வா உன் குடும்பத்தை அனுமதிக்க முடியாது என்று கருணையோடு அறிவித்தார்கள்.
அதிர்ந்து குழம்பிப்போன விக்டர் ப்ராங்கள் இந்தப் பிரச்சனையின் முடிவை இறைவன் அறிவிக்கட்டும் என்று முடிவெடுத்தார்!
வீட்டிற்கு வந்து பார்க்கிறார். அவரது அப்பா ஒரு கல்லை மேசையில் வைத்துவிட்டு வெறித்துப் பார்க்கிறார். பக்கத்துக்கு கிராமத்தில் யூதக் கோவிலில் இருந்த ஆண்டவரின் பத்துக்கட்டளைகளை செதுக்கியிருந்த கல்வெட்டின் சிதைந்த மிச்சம் அது.
என்னது எப்படி சிதைந்ததா? அந்தக் கிராமத்தில் நாஜிகள் நுழைந்து உள்ளேன் அய்யா என்று தங்கள் வருகைப் பதிவை அங்கிருந்த யூதக் கோவிலை சிதைத்துப் பதிந்திருந்தார்கள்.
பிராங்களின் அப்பா அங்கிருந்து எடுத்து வந்த ஒரு சிறிய கல்வெட்டுத் துண்டினைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
பிராங்கள் அந்தக் கல்லினை எடுத்தார் பார்த்தார்.
நீ உன் தாயையும் தந்தையும் கணம் பண்ணினால் உன்னை இந்த பூமி இருக்கும் வரை நான் இருக்கப் பண்ணுவேன் என்கிற கட்டளையின் முதல் எழுத்துக்கள் மட்டும் மிச்சம் இருந்தன.
விக்டர் பிராங்கள் கல்லினை இறுகப் பற்றினார். விசாவாவது வெங்காயமாவது. இறைவன் எனக்கு பதிலிறுத்து விட்டான். நான் எனது பெற்றோரோடு தங்கப் போகிறேன் என்று சொல்லி தங்கினார்.
நாஜிகள் வந்தார்கள். குடும்பத்தோடு வதைமுகாமில் அடைத்தனர். விக்டர் கண் முன்னே அவரது உறவுகள் அவமானப் படுத்தப் பட்டனர், உயிரிழந்தனர்.
அந்த வலியின் நடுவே அவமானத்தின் உச்சியில் விக்டர் உணர்ந்ததுதான் ப்ரோஆக்டிவ்னஸ்!
தோழர் இன்னும் இருக்கு ... போட்டால் ஒரு மின்னூலாகி விடுமோ என்று அஞ்சியதால் சுருக்கினேன்.
எதுவுமே நமது தேர்வே...!
ReplyDeleteஆம் அண்ணா ..
Deleteவணக்கம் தோழர்...!
ReplyDeleteஎன்ன என்னையும் இழுத்துவிட்டுவிட்டீர்கள்....!
பொறையுடைமை என்றொரு சொல் இதற்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது.
திருக்குறள் முதலான நீதி நூல்கள் இதன் இயல்புகளையும் இதனால் உறும் நன்மைகளையும் பெருகக் காட்டுகின்றன.
சாமிகள் நம்மொழியில் பூசை கேட்காததற்குக் காரணம் இன்னொரு மொழியை தேவபாஷை ........அது பேசுகிறவர் எல்லாம உயர்ந்தவர்கள் என்னும் மனோபாவத்தை மக்களின் மனதில் ஊன்றச் செய்துவிட்டதுதான் காரணம்...!
இப்போது இங்கிலீஸ் தெரிந்தவர்கள் படித்தவர்கள் என்று நினைப்பது போல...!!!
தாதா என்று கலாய்த்ததைக் கண்ட போது பாட்டொன்றும் நினைவு வரவில்லை. :)
த ம 1 .
தமிழ் மணத்தில் நுழைய.
நன்றி
யார் அந்த மனோபாவத்தை விதைத்தது ... அது எப்படிவளர்ந்தது.
Deleteஏன் தாதா இப்படி மான் கராத்தே போடுறாருன்னு தெர்ல ...
வருகைக்கு நன்றி ...
தேவையான நல்ல பதிவு. மனதில் பதிவு செய்கிறேன். நன்றி
ReplyDeleteஇன்னாது தோழரா?
Deleteநன்றிகள்
உண்மைதான் சுடுசொல் கண்டும் அமைதியாய் இருத்தல் நன்றே!
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி அய்யா...
Deleteமகிழ்வு நெகிழ்வு
நன்றி
சமயங்களில் நம்மீது வீசப் படும் வார்த்தைகள் நெஞ்சை கீறி ரணப்படுத்தும்.
ReplyDeleteமெல்ல யோசித்தால் வார்த்தைகளின் எதிர்வினையையை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம்!, என்பது புரியும்.
வார்த்தைகள்தான் அவர்களது.அவைதரும் வலியை உருவாக்குவது நமது மனமே!
அப்போ நாம் வார்த்தைகளை உதாசீனப்படுத்தினால் வலிகள் வர வாய்ப்பிலேயே!
வலி நமது தேர்வே தவிர எதிராளரின் தேர்வல்ல!
உண்மை தான் எமது மகிழ்ச்சி எமது கையில் இல்லையா . பதிவுக்கு நன்றி !
நன்றி சகோதரி ...
Deleteஇன்னா பிரச்சனைன்னா இப்போ எப்போ கோவப் பட்டாலும் உங்க அம்மு இந்தப் பதிவை காட்டி பேசுறாங்க...
பயிற்சி செய்கிறேன்
Proactiv என்ற பெயரில் விற்கப் படும் லோசனை பூசிக் கொண்டால் Proactiveness வருமா :)
ReplyDeleteகண்டுபிடிசீடீங்ளா?
Deleteபெரிய ஆள் தான் நீங்க ..
அன்புள்ள அய்யா,
ReplyDeleteவார்த்தைகள்தான் அவர்களது.அவைதரும் வலியை உருவாக்குவது நமது மனமே!
அருமையான கருத்து... மனம் அந்த நிலைக்குச் செல்வது சிரமமானதே! அதனால்தானோ அதிக ஆற்றல் வாய்ந்த மாமனிதர்கள் அவர்கள்.
நன்றி.
த.ம. 11.
நன்றி அய்யா ...
Deleteப்ரோஆக்டிவ்னெஸ் அருமையான கருத்து. இதில் இன்னும் நிறைய பேசலாம் தான்.....இது அதிக ஆற்றலை உருவாக்குவதுதான் இதனுடன் அன் க்ண்டிஷனல் லவ் அதையும் சேர்தால் இரட்டையர் ஆற்றல் அதிகம்.....
ReplyDeleteஆனால் ஒவ்வொருவரின் கெமிஸ்ட்ரியும் மாறுவதால் தானே.....ம்ம்ம்ம்
ஐயொ இந்த சாமிகள் எல்லாம் என்னவோ உயர்வான பாஷைனு ஒண்ணு சொல்லி னமக்குப் புரியாத பாஷையத்தான் பேசுறாங்கோனு சொல்லி நம்ம ஒரு வர்கம் இருக்கே அதுங்க அடிக்கற கூத்துத்தான்...அது சரி சாமினா எந்த பாஷையும் புரியணும் தானே...தமிழ் புரியாதா என்ன...அட போங்கப்பா...இதெல்லாம் எவ்வளவு சொன்னாலும் யார் காதுலயும் விழ மாட்டேங்குதுப்பா....
இரட்டையரின் பலம் சொன்னதற்கு நன்றிகள் தோழர் ...
Delete