எட்ஜ் ஆப் டுமாரோ

எம்.ஐ ஒன் முதல் பாகத்தில் ஒரு டெலிபோன் கூண்டுக்குள் நின்று போனை எடுத்து "மை டீம் இஸ் டெட்" என்று ஆற்றாமையில் முஷ்டி மடக்கி பூத்தின் சுவர்களை குத்திக் கதறும் காட்சியில் எனக்குப் பிடித்துப் போன நட்சத்திரம் டாம் க்ருஸ்! உண்மையில் ஐயா பாதிரியாருக்கு படித்தவர் இன்று காதல் ரசம் சொட்டும் பல காட்சிகளில் கதாநாயகன்!



சில படங்கள் மிக நேர்த்தியாக தயாராகி இருந்தாலும் சரியான கவனம் பெறாமல் போய்விடுகின்றன.

ஒரு ஜப்பானிய நாவலின் திரைவடிவமான இது ஒரு செமையான படம்.

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்பவர்களுக்கு பர்ஸ்ட் பர்சன் ஷூட்டிங் கேம் அப்படியே நிஜவாழ்வில் நடந்தால்!

இந்த மாதிரி கணிப்பொறி விளையாட்டுக்களில் ஹீரோ பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் மரித்து பின்னர் உயிர்த்து முன் அனுபவத்தின் காரணமாக கடந்த முறை மரித்த இடத்தை கடந்து இன்னொரு இடத்தில் மரித்து பின்.... ஒரு சுழல் இது.

இதுதான் இப்படத்தின் தனித்துவம்.

ராணுவ விளம்பர அதிகாரியாய் இருக்கும் மேஜர் வில்லியம் கேஜ் பிரான்சில் நடக்கும் யுத்தத்தை கவர் செய்ய வருகிறார். வெளிக் கிரக வாசிகளான மிமிக்குகள்  ராணுவத்தை பிரிதுமேய வேறு வழியில்லாமல் கேஜ் களத்தில் இறங்க வேண்டியிருகிறது.

களத்தில் துப்பாக்கியைப் பிடிப்பதில் இருந்து தப்பிப்பதற்காகவே விளம்பர அதிகாரியாய் பணியாற்றும் வில்லியம் கேஜ் புலம்பிக்கொண்டே போர்க்களம் போகிறான்.

முதல் தாக்குதலிலேயே ஒரு ஜந்துவை அழித்து அதன் ஆசிட் போன்ற ஊதா வண்ண ரத்ததில் உருகி உருக்குலைந்து போகிறான்.

ஆனால் இது ஒரு கொடுங்கனவு போல் பதைத்து எழுகிறான் தனது முகாமில்!  எதையும் புரிந்து கொள்ள முடியாமல் திணறும் அவன் ஒரு காலச் சுழலில் மாட்டிக்கொண்டிருப்பதை உணர்கிறான்.

கேஜ் கொன்ற விலங்கு ஒரு ஆல்பா. ஏதாவது ஒரு ஆல்பா இறந்தாலும் காலம் திரும்பிவிடும். வெளிக்கிரக வாசிகள் தங்கள் வெற்றியை உறுதி செய்துகொள்ள இப்படி ஒரு திறனைப் பயன்படுத்துகிறார்கள்!

ஆல்பாவின் ரத்தம் கேஜின் உடலில் கலந்துவிட்டதால் அவன் இறந்தாலும் காலம் ஒரு பதினாறு மணிநேரம் முன்னால் சென்று எல்லாமே திரும்ப நடக்க ஆரம்பிக்கிறது.

இந்த கான்செப்டை வைத்துக்கொண்டு பிரித்து மேய்ஞ்சு தொவட்டி காயப் போட்டிருக்கிறார்கள்.

வெகு அற்புதமான காட்சி அனுபவமாக இருக்கும் இந்தப் படம்.

 தனது அணியின் எல்லா வீரர்களாலும் இகழப்படும் கேஜ் எப்படி அதே வீரர்களின் ஆதரவோடு ஒமேகா விலங்கை அழிக்கக் கிளம்புகிறான் என்பது செமை.

கேஜுக்கு வழிகாட்டும் சார்ஜன்ட் விடா ராடஸ்கி படத்தின் விவா பவர். முதல் முதலில் கேஜின் சக்தியை அவனுக்கு அறிமுகப்படுத்தி பயிற்சியளித்து காதல் செய்து என வெகு பலமான கதாபாத்திரம் இது. எமிலி ப்ளன்ட் கலகீட்டாங்க.

படத்தின் ஆரம்பத்தில்  தொடை நடுங்கியாக இருக்கும் கேஜ் எப்படி வெறிகொண்டு பயிற்சிகளை செய்து ஜோரான வீரனாகிறான் என்பதும் பின்னர் நடக்கப் போவதை முன்னரே அறிந்திருப்பதால் எழும் மன எழுச்சிகளையும் பக்கவாக காட்டியிக்ருகிறார் டாம் க்ருஸ்.

படம் முழுதுமே போர்க்கள காட்சிகள் நிறைந்தது. ஒவ்வொரு முறையும் புதுமையாக இருக்கும் காட்சிகளோடு வெகு வேகமாக நகருகிறது திரைப்படம்.

குறிப்பாக எதிர்கால படையணிகளின் ஆயுதங்கள் அசத்தல். எக்ஸ்சோ ஸ்கேலிட்டன் உடையில் பாய்ந்து மோதும் வீரர்கள் என சி.ஜி மிரட்டல்.

டக் லிமான் இயக்கத்தில் வந்திருக்கும் படம். பார்டி ஏற்கனவே மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித், ஜம்பர் என கரம் மசாலாக்களை இயக்கியவர்.

படத்தின் போர்க்கள காட்சிகள், விலங்குகள் அனைத்தையும் கணிப்பொறியில் உருவாக்கியது சோனி நிறுவனம்.

178 மில்லியன் டாலர்களைப் போட்டு 369 மில்லியன்களை எடுத்திருக்கிறார்கள்.

பார்க்கலாம்

மதிப்பெண் 7/10


ஜூலை 31 மசாலா நேஷன்  சாரி ரோக் நேஷன் வெளிவருவது உங்களுக்குத் தெரியும்தானே.

அன்பன்
மது
படக்குழு விவரம் பார்க்க சுட்டுக 


Comments

  1. பகிர்வுக்கு நன்றி. வாய்ப்பிருப்பின் பார்ப்பேன்.

    ReplyDelete
  2. அட! கொஞ்சம் டைம் தியரி கான்செப்ட் அடிப்படையாக. உங்கள் விமர்சனத்தைப் பார்த்தால் படம் செமயா இருக்கும் போல அதுவும் டாம் க்ரூஸ்...ம்ம்ம்

    ஆங்கிலப் படங்கள் எல்லாம் பெரும்பாலும் ஏதேனும் ஒரு நாவல் அல்லது நடந்த உண்மையான நிகழ்வுகளின் அடிப்படையில் எடுப்பதால்தான் வெற்றி பெறுகின்றனவோ?!

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள்

      உண்மைதான் அந்த தில் நம்ம ஆட்களுக்கு வரணும்

      Delete
  3. நானும் இத்திரைப்படத்தைப்பற்றி எழுதலாம் என்று நினைத்துக்சொண்டே இருந்தேன் . நீங்கள் எழுதியே விட்டீர் . அருமை அண்ணே

    ReplyDelete
    Replies
    1. தாங்களும் எழுதலாமே மெக்

      Delete
  4. சின்ன டவுட் : இந்த படங்களை எல்லாம் எங்கே பார்க்கிறீர்கள்...?

    ReplyDelete
    Replies
    1. ஹும் என்னை கலாய்க்காட்டி உங்களுக்கு தூக்கம் வராதே

      Delete
  5. இந்தப் படத்தைப் பார்த்தபோது வடிவேலுவை ஒருவர் " வா நாம செத்து செத்து வெளையாடலாம்" என்று அழைப்பாரே அதுதான் ஞாபகத்திற்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. நச் என்ற விமர்சனம்

      Delete
  6. பிடித்த படம் அண்ணா..பாவம் டாம் க்ரூஸ் என்று தோன்றும்..

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அப்படித்தான் தோன்றியது

      Delete
  7. நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம்...

    இங்கு பள்ளி விடுமுரை காலம்... பிள்ளைகளுக்காக ANT MAN மற்றும் MINIONS பார்த்துவிட்டதால் இதனை துறந்துவிட்டேன் ! பட்ஜெட் பிராப்ளம் சார் !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  9. வணக்கம் !

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_28.html

    நன்றியுடன்
    சாமானியன்

    ReplyDelete

Post a Comment

வருக வருக