கடந்த வாரம் நிகழ்ந்த பயிற்சியில் நண்பர் சிவாஜி ஒரு சம்பவத்தை சொன்னார். திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற பொழுது ஒரு ஆறாம் வகுப்பு மாணவனைப் பார்த்துக் கேட்டிருக்கிறார்
What is your name?
பயல் மிகச்சரியாக ஆங்கிலத்தில் அவனது பெயரைச் சொல்லியிருக்கிறான்.
வெரி குட் நீ ரொம்ப நல்லா வருவாய் என்று சொல்லியிருக்கிறார் அவர்.
பயல் கேவிக் கேவி அழ ஆரம்பித்திருக்கிறான்.
ஒரு நேர்மறையான பின்னூட்டத்திற்கு இப்படி அழும் ஒரு குழந்தை யாரைத்தான் அசைக்காது?
தலைமை ஆசிரியர் அறைக்கு வந்த மு.க.அ அந்தப் பையனை தனியே விசாரித்திருக்கிறார்.
அய்யா இத்துணை வருசமா யாருமே என்னை நீ நல்லா வருவடான்னு சொன்னதில்லை சார் என்று சொல்லியிருக்கிறான் அந்தக் குழந்தை.
நீண்ட பெருமூச்சுக்களோடும், வியர்க்கும் கண்களோடு மட்டுமே இந்த வரிகளை அடிக்க முடிகிறது.
என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் என்று என்னையே சுய விமர்சனம் செய்துகொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் செய்தது இந்த பகிர்வு.
சிலபஸ், மதிப்பெண், தேர்ச்சி விழுக்காடு இன்று ஒரு ஆசிரிய இயந்திரமாய் மாறிப் போயிருக்கும் என்னை மீட்டு மனிதனாக்கியது இந்தச் செய்தி.
கல்விச் செயல்பாடுகளில் கொஞ்சம் கூட அக்கறையற்ற ஒரு சிறுமியின் கைவண்ணம் திறமைகளை உணர ஒரு வாய்ப்பு இம்மாதிரி நிகழ்வுகள் |
கடந்த வெள்ளி அன்று எமது பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பயல்கள் விதவிதமான எளிய அறிவியல் கருவிகள் முதல் சிக்கலான கருவிகள் வரை கொண்டுவந்து காட்சிக்கு வைத்து அசத்தினார்கள். பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரையும் கைகொடுத்து வாழ்த்தினேன் நான்.
கூடவே ஆசிரிய சகோதரிகளுக்கும் ஒரு பாராட்டு. பள்ளி ஆசிரியைகள் திருமிகு.ஜெயலக்ஷ்மி, திருமிகு.ராணி மற்றும் திருமிகு.அருந்ததி என மூவருமே அசத்திவிட்டார்கள். வெகு குறைந்த கால அளவில் இவ்வளவு அறிவியல் வெளிப்பாடுகளை நம்மால் செய்ய முடிகிறது, தொடர்ந்தோம் எனில் நிறைய கலாம்களையும், மயில் சாமி அண்ணாத்துரைகளும் நமக்குக் கிடைப்பார்கள்தானே!
மாநில அளவில் மாவட்ட அளவில் வரும் கல்விச் செயல்பாட்டு வழிமுறைகளை தவறாது பின்பற்றி செய்தோம் என்றால் இது சாத்தியமே.
அன்பன்,
மது
பல மாணவர்கள் ஆசிரியரின் பாசமிகு வார்த்தைகளுக்காக ஏங்கித்தான் காத்திருக்கிறார்கள்
ReplyDeleteதம =1
வாக்குக்கு நன்றி
Deleteபாராட்டுரைகள்
ஆக்சிஜன் போல்
அவசியம்
நன்றி வருகைக்கு
ரிஸல்ட் ஃபோபியாவால் வந்த வினை இது...
ReplyDeleteஇதையும் கடந்து தட்டிக் கொடுத்து தூக்கிவிடுபவரே, நல்லாசான் என மாணவர்களால் போற்றப் படுகிறார்.
-www.pjprabu.blogspot.in
வாங்க சிங்கமாமா,
Deleteநலம்தானே
உங்கள் தளம் எனது பட்டியலில் இருக்கிறது
பார்க்கவில்லையா
அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றிகள் அய்யா
Deleteவாழ்த்துக்கள்! கல்வி தவிர்த்து வேறொரு உலகம் இருப்பதையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும்! உங்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிகள் ஸ்வாமிகள் ...
Deleteஇதுபோன்று கல்வி சார் திறன்களை அங்கீகரிப்பதில் கொஞ்சம் சுனங்கிவிட்டேன்...
இனி தொடரவேண்டும்
மாணவர்களின் திறமைகளைக் காணுவதைவிட மகிழ்ச்சி அனுபவம் ஒரு ஆசிரியருக்கு வேறு என்ன இருக்க முடியும்?
ReplyDeleteநன்றிகள் தோழர்
Deleteவருகைக்கும்
கருத்துக்கும்
அய்யா இத்துணை வருசமா யாருமே என்னை நீ நல்லா வருவடான்னு சொன்னதில்லை சார் என்று சொல்லியிருக்கிறான் அந்தக் குழந்தை.
ReplyDeleteநீண்ட பெருமூச்சுக்களோடும், வியர்க்கும் கண்களோடு மட்டுமே இந்த வரிகளை அடிக்க முடிகிறது. // இதைப் படித்ததும் மனம் நொறுங்கிவிட்டது நண்பரே!
நாம் ஆசிரியர்கள் நீங்கள் சொல்லுவது போல் மதிப்பெண், பாடத்திட்டம் தேர்வு என்று மாணவர்களையும் இயந்திரங்களாக்கி வருகின்றோம். அவர்களது அறிவுத்திறனையும், கலைத்திறனையும் வளர்ப்பதில் அக்கறை செலுத்துவதில்லை என்றுதான் தோன்றுகின்றது. இன்னொன்று அப்படிக் கொடுத்தாலும் பெற்றோர் ஓடி வந்துவிடுகின்றனர். நீங்கள் தொடர்வதற்கு வாழ்த்துகள்...
கீதா: கஸ்தூரி/மது எங்கிட்ட எந்த பெற்றோராவது வந்து "என்பிள்ளை படிக்கலை, விளாயாட்டு மார்க் கம்மி அப்படி இப்படினு சொன்ங்கனு வையுங்க (நான் ஆசிரியை எல்லாம் கிடையாது...நம்ம அண்டை அயலார்தான் ...) முதல்ல கேட்டுருவேன்...நீங்க என்ன செஞ்சீங்க உங்க பிள்ளைங்களுக்கு? அவன்/அவள் கூட நேரம் செலவழிச்சீங்களா...அவன் ஊக்கப்படுத்தினீங்களா...நாலு வார்த்தை நல்லதா பேசுனீங்களா நு......இதுல என்ன வேடிக்கைனா "அவன்" என்பதுதான் நிறைய வரும்..."அவள்" என்பது வருவதில்லை. ஒரு வேளை அவள் என்பதன் அடையாளம் மருமகள் என்றாகிப் போனதாலோ என்னவோ...வருத்தமா இருக்கும்...அப்புறம் நல்லா சொல்லி, அனுப்புவேன் ஆனா அவங்களுக்கு நாம் சொல்லுவதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாது என்பது போல...இருந்தாலும் நான் சொல்லுவதைச் சொல்லிக் கொண்டிருப்பேன்..
சரி அந்த குட்டிப் பசங்களுக்கு எல்லாம் எங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லிடுங்க..பாராடுகளையும்...பசங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க.....நல்ல செஞ்சுருக்காங்க. நாளைய பாரதத்தைச் செதுக்கப் போகும் சிற்பிகள்!!!
நன்றிகள் சகோதரி..
Deleteகுட்டீஸுக்கு சேர்கிறேன் உங்கள் வாழ்த்துக்களை
கஸ்தூரி/மது அவர்களின் தனித்துவத்தை முடிந்தால் கண்டறியுங்கள். பிற ஆசிரியர்களின் உதவியோடும்....அந்தத் தனித்துவத்தை வளர்க்க உதவினால் இன்னும் நல்லது...நாளைய இந்தியாவிற்கு நல்ல திறமை படைத்த அறிஞர்கள், கலைஞர்கள் கிடைப்பார்கள்...உங்க மருமகன் சொல்றான்....எனக்குத்தான் பள்ளில கிடைக்கல....ஆசிரிய மாமாக்கள், அத்தைகளிடம் சொல்லும்மா அவங்க மாணவர்களுக்காவது அது கிடைக்கட்டும்...கிடைக்க வேண்டும் என்று...
ReplyDeleteஉண்மைதான்
Deleteஇம்மாதிரி
நிகழ்வுகள் மட்டுமே உணரச் செய்கின்றன மாணவர்களின் தனித்துவத்தை
மாணவர்களை தட்டிக்கொடுத்து பாசமுடன் நடந்து கொள்வதும் கூட நல்ல பலன்களை நிச்சயம் தரும் தான் அப்படி சொல்லும் போது energy கூட வரும் எல்லாம் எளிதாக கற்றுக் கொள்ளலாம் போல் தோன்றும். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஉண்மைதான்
Deleteஅடிப்படைக் கல்வி உளவியல்தான்
பி.எட் தேர்வு முடிந்தவுடன் போச்சு... எல்லாம்
உற்சாகம் தரும் பதிவு. இதுதான்தேவை. இவ்வாறாக உளவியல் ரீதியாக மாணவர்களை அணுகுவது மாணவர்களுக்குப் பயனளிக்கும்.
ReplyDeleteநன்றிகள் முனைவரே
Deleteமாணவர்களை உற்சாகப்படுத்தும் செயல்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி பரிவையாரே
Deleteஉண்மை...
ReplyDeleteசரியான நேரத்தில் வாஞ்சையுடன் வெளிப்படும் சில வார்த்தைகளுக்கு ஈடான ஊக்கம் வேறெதுவும் கிடையாது.
நன்றி
சாமானியன்
ஆம் சாம் ஜி
Deleteஇதை மறந்துவிடாமல் செய்பவர்கள் சிறந்த ஆசிரியர்கள்