அன்றெல்லாம் தெரியாது வலையுலகின் வீச்சு!
மெல்ல மெல்ல பின்னூட்டங்கள் வர மீண்டும் நான் அவர்களின் தளத்திற்கு செல்ல உருவானது ஒரு நட்பு வட்டம்!
நான் பெரிதும் மதிக்கிற பல பதிவர்கள் எனக்கு இப்படித்தான் அறிமுகம்!
அப்புறம் நிலவன் அண்ணாத்தே மூலம் பல இலக்கிய ஆளுமைகள் அறிமுகமாக வலை நட்புக்கள் நேரடி நட்புக்களாக மாறிப் போயினர்.
அய்யா எட்வின், கரந்தை ஜெயக்குமார், திண்டுக்கல் தனபாலன், ஜோவி, கிரேஸ், பகவன் ஜி, கில்லர் ஜி என அனைவரையும் நேரில் பார்க்கும் வாய்ப்பைத் தந்தது நிலவன் அண்ணாதான்!
இப்படி நேரில் பழக வாய்ப்புள்ள பதிவர்களைத் தவிர வெளிநாடுகளில் இருக்கும் சில பதிவர்கள் பல ஆண்டு பழகிய நண்பர்களாகவே உணரவைத்து அன்பில் திகைக்க வைத்தனர்.
இவர்களில் முதன்மையானவர் இளையநிலா !
கடும் இறை நம்பிக்கை உள்ளவர்களே இவரின் இடர்களை அறிந்தால் அப்படி ஒருவன் இருக்கிறானா என்று உண்மையிலேயே வருந்துவார்கள்.
பதிவுலகின் பெளணர்மி இப்போதெல்லாம் அதன் வானத்திற்கு வரவே இயலாத சூழல் என்பது உணர்வை வருத்தும் விசயம்.
மீண்டு வர நலம் பெற எப்போதும் உண்டு என்னுடைய பிரார்த்தனைகள்.
அடுத்து பதிவில் வந்தே எங்கள் இல்லத்தில் ஒரு நபராக மாறிய இனியா சகோ. மகளின் திருமணத்திற்கு பிறகு இந்தப்பக்கம் எப்போவாது வருவதோடு சரி!
இப்போ அவர்களின் எழுதும் கூர்மையாகி இருப்பது ஒரு கூடுதல் மகிழ்வு.
அடுத்து
சின்சியர் பின்னூட்டங்களின் பதிவர் துளசிதரன் குறும்படம் எடுக்கிறேன் என்று இவரும் அப்பீட்!
இப்போது மீண்டு வந்திருப்பது ஆறுதல்கள்.
இவர்களுக்கு முன்னால் நீண்ட விடுப்பு எடுத்தது அடியேன்தான்!
எனக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள்! இன்னொரு கண் பரிசோதனை என்ற காரணங்கள்!
பதிவுலகம் வாழ்வின் ஒரு பகுதியே அதுவே வாழ்வல்ல என்பதே எனது நிலைப்பாடு.
மேலும் வலைப்பூ உலகின் அடிப்படை விதிகளில் ஒன்று எத்துனை நாள் வேண்டுமானாலும் விடுப்பு எடுக்கலாம், அது குறித்து எந்த வருத்தமும் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க தேவையில்லை என்பதையும் அறிந்தவன் நான்.
ஒரு கதை தன்னை அது எழுதச் சொன்னால்தான் எழுதுவேன் என்பார் நண்பர் நந்தன் ஸ்ரீதரன் (கவிஞர், இயக்குனர்).
உண்மைதான் எழுத்து என்பது நம்மை வசப்படுத்தி தன்னிலை மறக்கச் செய்து படைப்போடு ஒன்றச் செய்து தன்னை அது பிரசவித்துக் கொள்கிறது.
நலக் காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருக்கும் பதிவர்கள் நலம்பெற்று திரும்பவும்
இதர பதிவர்களை அவர்களது படைப்பு உந்தி இங்கே தள்ளவும் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் ...
சந்திப்போம்
அன்பன்
மது
பிகு இதுவும் இன்றும் தொடரும் எனது பரிசோதனை முயற்சிகளுக்கு ஒரு சான்று. உங்களுக்கு தெரியும் என்றே நினைக்கிறன் இணைப்பை சுட்டுக!
முன்பு எல்லாம் பதிவுலகில் பின்னுட்டம் என்ற பெயரில் உரிமையுடன் ஒருவரை ஒருவர் கலாய்த்து கருத்துக்கள் இட்டு ஒரு குடும்பம் போல பழகிவந்தனர் ஆனால் இப்பொழுது அப்படி எல்லாம் யாரும் செய்வதில்லை. அதனால் பதிவு எழுதுபவர்களுக்கு ஒரு சோர்வு வந்துவிடுகிறது அதனாலலே பலரும் எழுதுவதில் இருந்து விலகி விடுகின்றனறோ என்று தோன்றுகிறது.
ReplyDeleteநானெல்லாம் பொழுது போக்கிறாக எழுத ஆர்ம்பித்தவன் ஆனால் எனது வாழ்வில் பெரும் புயலே அடித்து கொண்டிருக்கிறது அந்த புயலில் இருந்து தப்பிபதற்கு இந்த வலைதளம் எனக்கு உதவுகிறது அதனால்தான் தொடர்ந்து கிறுக்குகிறேன்
அப்படியா மச்சான் ...
Deleteசரி கலக்கிடுவோம் ...
புயல்கள் மட்டுமே நல்ல மாலுமிகளை உருவாக்குகின்றன...
மீண்டுவாருங்கள்
பிரார்த்தனைகள்
தமிழா என்ன ஆச்சு உங்களுக்கா....புயல்...
Deleteநீங்கள் மறுபடியும் எங்களை எல்லாம் கலாய்க்க வேண்டும் தமிழா...நாங்க உங்கள விட ரொம்ம்ம்ம்ப பெரியய்வங்க அப்படினு எல்லாம் நினைச்சுறாதீங்க...சும்மா கலாய்க்கலாம்...அப்பதான் நீங்கள் சொல்லுவது போல ஒரு குடும்ப உணர்வு மேலிடுகிறது...
மது அவர்கள் சொல்லி யிருப்பது சரியே...புயல்கள் மட்டுமே நல்ல மாலுமிகளை உருவாக்குகின்றன...மிக மிகச் சரியே...அருமையான வார்த்தைகள்...
வாருங்கள் தமிழா நாங்களும் பிரார்த்திக்கின்றோம்....
தொகுப்பில் இணைத்து கொண்டதற்கு முதலில் நன்றி...
ReplyDeleteபலரும் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பமும் வேண்டுதலும்...
இந்த மாதம் 30-40 புதிய பதிவர்களை உருவாக்கும் திட்டம் என முத்துநிலவன் ஐயா சொல்லி உள்ளார்... உங்கள் உதவி மிகவும் தேவை...
புதியவர்களை உருவாக்குவது எளிது
Deleteஎனது மாணவர் ஒருவரும் பதிவுலகில் இருக்கிறார் ஆனால் இல்லை நிலையில்
அவர்களை தொடர்ந்து எழுத ஊக்கம் தருவதும் அவசியம் ..
அண்ணா நாம் ஆட்சென்ஸ் தமிழ் குறித்து நகரவேண்டிய நேரம் இது என்று நினைக்கேன் ..
ஆமாம் அண்ணா, எனக்குத் தெரிந்த சிலர் ஆட்சென்ஸிர்க்காக ஆங்கிலத்திற்கு நகர்ந்துவிட்டனர்.
Deleteநிறையப் பேர் சோம்பல் காரணமாகவோ சலிப்பின் காரணமாகவோ முகநூலில் நான்கு வரி நிலைக்குறிப்புக்கு தாவி விட்டது ஏமாற்றம்தான்.
ReplyDeleteஇளையநிலா இடரில் இருந்து மீண்டு வரவேண்டும்.
காலம் கடந்த முயற்சிகளைப் போலவே காலத்துக்கு ரொம்பவே முந்திய முயற்சிகளும் சில நேரங்களில் உரிய கவனம் பெறாமல் போய்விடுகிறது.
ஆனால் அவை நிச்சயம் ஒரு சமயத்தில் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை. உங்கள் பரிசோதனை முயற்சிகள் தொடரட்டும் வாழ்த்துகள்
நன்றிகள் அய்யா
Deleteமகிழ்வு தங்கள் வருகை
தொடரும் நட்புக்கள் ஏதோ காரணங்களால் திடீரென எழுதுவதை நிறுத்தி விடுகிறார்கள்... மீண்டும் வர வேண்டும்.
ReplyDeleteநானும் கூட இரண்டு மாதங்களாக எழுதவில்லை... ஊரில் இருந்து வந்ததும் எல்லாம் மறக்க... மன ஆறுதலுக்காக மீண்டும் வலையில்...
இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமிழ்மணத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 106 பதிவுகள் பதியப்பட்டது இது 200க்கு மேல் இருந்து குறைந்து வந்த சராசரி... இப்போது 100க்கு கீழ் (96) வந்துவிட்டது...
நிறைய புதியவர்கள் வரவேண்டும்...
நன்றி நண்பரே
Deleteமீண்டு வரட்டும் அனைவரும்
ப்ளாகிங் பிளாட்பார்ம் லைவாக மாறினால் புதுப் பாய்ச்சல் கிடைக்கும் ...
நன்றி நண்பரே
Deleteமீண்டு வரட்டும் அனைவரும்
ப்ளாகிங் பிளாட்பார்ம் லைவாக மாறினால் புதுப் பாய்ச்சல் கிடைக்கும் ...
தங்கள் எண்ணம் ஈடேறுக தோழர்.
ReplyDeleteநன்றி.
த ம 5
நன்றி தோழர்
Deleteஆமாம் அண்ணா, பதிவுலகில் நண்பர்களாகி பின்னர் நிலவன் அண்ணாவின் விழாவில் உங்களையும் மைதிலி, குழந்தைகள், இன்னும் பல பதிவுலக நண்பர்களையும் சந்தித்து, அதற்குப் பின் குடும்பம் போல் பலப்பட்ட நட்புகள் உண்டு.
ReplyDeleteஇளமதிக்காக ஒரு பா எழுதி வைத்திருக்கிறேன் அண்ணா. வெளியிட யோசித்துக் கொண்டிருந்தேன், இன்று வெளியிடுகிறேன்.
த.ம.6
அதை படிக்கிற நிலையில் அவர் இருக்கிறாரா என்பதே கேள்விதான் கிரேஸ்..
Deleteமருத்துவ அற்புதம் நிகழ்ந்தால்தான் உண்டு.
இறைவன் அவருக்கு சக்தியைக் தரட்டும்
2011 இல் இருந்து இளமதி பற்றிஅறிவேன் ..நான் ஒரு மெசேஜ் போட்டாலும் உடனே பதில் தருவார் ..என்னாச்சோ தெரில அவர் நெட் பக்கமே வரல ...
ReplyDelete:( எப்படியாவது முயற்சிக்கிறேன் ..தொடர்பு கொள்ள
அவர் பற்றி நீங்கள் நிறய அறிய வேண்டியிருக்கிறது..
Deleteஒரு முறை மைதிலியிடம் பேசினார் அப்புறம் தொடர்பே இல்லை.
தெரிந்து கொள்ளவே உங்களுக்கு மனபலம் வேண்டும்
நேற்று மெயிலில் தொடர்பு கொண்டேன் ..அவர் ரிப்ளை செய்தார் .
Deleteபூரண குணமாகல .அனைவரையும் விசாரித்தார்
என்னைப் பொறுத்தவரை(முதுமையும் முதுகு வலியும் வருத்தினாலும்)
ReplyDeleteமுடிந்தவரை (முகநூல் வலைதளம் இரண்டிலும்)எழுதி வருகிறேன்!
வயது எண்பத்து மூன்று
ஒரு கூட்டத்தில் மேடையில் உங்களைக் குறிப்பிட்டு பேசினார் கரந்தை ஜெயக்குமார் ஐயா.
Deleteஉண்மையில் உங்கள் மனஉறுதி யாருக்கும் வராது
எனக்கு வெட்கமாக இருக்கிறது ..
தொடர்க தங்கள் எழுத்துப் பணி
சரக்கு இருக்கும் வரைதானே நானும் இங்கே இருக்க முடியும் ?சிலர் போனாலும் பலர் வருவார்கள் ,இதுதான் வலையுலக விதி :)
ReplyDeleteவரத்து குறைந்துவிட்டது பகவனே...
Deleteமுக்கியமாக தொழில் நுட்ப சிக்கல்கள் காரணம்
ஒரே வேளையில் அடுத்தவர் பதிவை பார்க்கும், இன்னொரு நண்பர் லைக்கும் பதிவுகள் உடனுக்குடன் நம்மை கோர்த்து விடும் முகநூல் ப்ளாக்கை காலிசெய்வதில் வியப்பேதுமில்லை ..
இப்போ கூகிள் வசம் இருக்கிறது பந்து.
மேம்படுத்தினாலும் சிக்கல் மரபில் ஊறிப்போன பெரும் பதிவர்கள் பழைய பழக்கங்களை விட முடியாமல் ஒரே அடியாக பதிவுலகை விட்டு போய்விடவும் கூடும்.
காலம் மட்டும் தீர்மானிக்கும் இதனை
இளைய நிலா நலம் பெற வேண்டுவோம்
ReplyDeleteவலைப்பூவில் இருந்து முகநூலுக்கு ஏராளமானவர்கள் சென்று விட்டது
வருந்துதற்கு உரியதே
முத்து நிலவன் ஐயா அவர்களின் திட்டம் வெற்றி பெறட்டும்
பல புது வரவுகளை வலைவரவேற்கக் காத்திருக்கிறது
நன்றி நண்பரே
தம 11
வேண்டுவோம் தோழர்
Deleteஅது வருத்தம் அல்ல முகநூலுக்கும் வலைப்பூவிற்கும் ஏகப்பட்ட வித்யாசங்கள் உண்டு ..
நன்றி தோழர்
வலைப்பதிவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி. ஒரு சின்ன விபத்து. இடது குதிகாலில் காயம். கம்ப்யூட்டரில் முன்புபோல் தொடர்ச்சியாக பணி செய்ய முடியவில்லை. எனவே இப்போதைக்கு முன்புபோல் என்னால் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை எழுத இயலவில்லை. முழுமையான குணம் அடைந்ததும் மீண்டும் வருவேன். ஆசிரியர் மதுவுக்கு நன்றி.
ReplyDeleteதமிழ்களஞ்சியத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
த.ம.11
நண்பர்களின் அத்துணை தளங்களையுமே இணைத்திருக்கிறேன் ...
Deleteஉங்கள் தளம் எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை ..
அப்புறம்
அடியேனின் செயல் வேகம் அப்படி ..
வணக்கம்
ReplyDeleteசகோதரி
சகோதரி இளமதி குணமடைய இறைவனைப் பிராத்திப்போம்.. மிக விரைவில் வலையில் சந்திக்கலாம்.... உண்மைதான் பல பதிவர்கள் எழுதுவது குறைவுதான்.. தங்களின் பதிவை படித்த பின்னாவது எழுதுவார்கள் என்ற நம்பிகை உள்ளது பகிர்வுக்கு நன்றி. த.ம 12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றிகள் ரூபன்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவருக சகோதரி
Deleteநலம்தானே
உங்களை குறிப்பிடாமல் வேறு யாரைக் குறிப்பிடுவது ?
தமிழ் இளங்கோ அய்யாவின் பதிவில் பார்த்தேன் அவருக்கும் ஒரு சிறு விபத்தாம்...
இதோ போல் மணவை ஜேம்ஸ் அய்யாவிற்கும் இப்படி நிகழ்ந்தது இப்போது மீண்டிருக்கிறார்.
அலை ஆடும் கடல் போல பதிவர்களின் இயக்கம் இருப்பதை உணர முடிகிறது ...
ஒரு அலை அப்புறம் உள்வாங்கல்
அப்புறம் ஒரு அலை
காத்திருப்போம் அடுத்த அலைக்கு ..
அலைகள் ஓயாது !
அந்த நம்பிக்கை உண்டு
நட்புகள் என்றும் நலபலம் பெற்றுய்ய
Deleteமுட்களிலா வாழ்வும் மகிழ்வதும் - கிட்டிடவும்
பொல்லா விதியினையும் போராடி வென்றிடவும்
சொல்லாமல் வாழ்த்தும் மனம் !
வலைக்கு வருவாய் வலம்வர மீண்டும்
கலையுணர்வு கொண்டு கைவேலை - நிலையான
நட்பைநாடி நிற்கின்ற நற்கவிகள் நீமேலும்
நுட்பமாய் தாநிலா வந்து !
தேகம் சுகம்பெற நான்தினமும் வேண்டுகின்றேன்
சோகமும் நீங்கசேரு மின்பங்கள் - மேகமழை
போல்சொரியும் பாச முமுதவும் நோய்நீங்க
மாலவனும் நிற்பான் துணை !
நீங்கள் சொல்வது உண்மை தான் சகோ தாங்கள் நலம் தானே ஏனோ இப்பதிவை பார்த்த நொடியில் இருந்து இனம் புரியாத வேதனை கவ்விக்கொண்டது. எண்ணத் தாளவில்லை நெஞ்சு. அப்போதிருந்த மகிழ்ச்சி இப்போ இல்லை என்பது உண்மையே மீண்டும் அந்நிலை பெறவேண்டும் என்பது தான் என் விருப்பமும். என் இனிய தோழி இளமதி மீண்டும் வரும் வரை அது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. அவர் வரவுக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன் கண்ணீருடன். நிச்சயம் வெகு சீக்கிரத்தில் வருவார் எனும் நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. நமது அன்பும் ஆதரவும் நிச்சயம் அவரை குணப்படுத்தும் என்றே நான் நம்புகிறேன்.
நட்புகள் அனைவரும் நலமுடன் வலம் வர வேண்டும் வலையிலும்
என்று மனமார வேண்டி வாழ்த்துகிறேன்....!
மிக்க நன்றி ! சகோ ! இப் பதிவுக்கு, என்னையும் குறிப்பிட்டு கூறியதும் நெகிழ்ந்தேன் மகிழ்ந்தேன். மிகவும் நெகிழ்வான தருணம் இது. தங்கள் ஆதங்கமும் புரிகிறது. தங்கள் எண்ணங்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள் ..!
பதிவர்கள் அனைவரையும் மீண்டும் ஒருசேர காண ஆவலாக உள்ளேன்.
இளையநிலா அக்காச்சி விரைவில் வர பிரார்த்திப்போம். வலையில் எல்லோரும் உற்சாகத்துடன் வரட்டும்.
ReplyDeleteவாருங்கள் தோப்பே..
Deleteஅதேதான் அனைவரின் பிரார்த்தனைகளும் ..
நன்றிகள் வரவிற்கு
இளையநிலா தளம் இப்போது அமாவசை போல்...அமாவாசையைத் தாண்டி மீண்டும் பௌர்ணமியாய் வருவார் வந்து மீண்டும் சூரியனாய் ஒளிர்வார் என்று நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்....
Deleteமது/கஸ்தூரி, இது கீதா....என்னப்பா ஆச்சு உங்களுக்கு? ! எனக்கு உங்க மேல கொஞ்சம் கோபம் (அன்பான செல்ல கோபம் தான்...)அது என்ன துளசி மட்டும்... எக்சாம், குறும்படம்னு எழுத முடியலதான்....நீங்களும் அந்த சமயத்துல எக்சாம் அப்பீட்....ஆனா இங்க கீதா இப்பீட்டாத்தான் இருந்தேன்...ஹஹஹஹ்.....ம்ம்ம் நீங்க சொன்னதும் சரிதான் துளசி இப்பதான் வந்துருக்காரு....
மீண்டும் பழையபடி அடுத்த எக்சாம் வரது வரை ஜமாய்க்கலாம்பா....நிறைய டீச்சர்ஸ் இல்லையா மது....
நானும் இப்போது மீண்டும் வலைத்தளத்தில் இயங்க ஆரம்பித்து விட்டேன் மது. ரிலே ரேஸ் மாதிரி ஒருவர் ஏதாவது ஒரு டாபிக்கை ஆரம்பித்து வைத்து மற்றவர் தொடர்வது என்று ஒரு சமாச்சாரம் தொடர்பதிவு என்ற பெயரில் முன் இருந்தது. தொடரும் கண்ணிகளின் மூலம் நிறைய புதிய நட்புகள் கிடைக்கும். அதைப் புதுப்பிக்கணும். இளமதி என் தளதைப் படித்து, ரசித்து, ஊக்கப்படுத்திய நல்ல ரசிகை + சகோதரி. அவரின் அனைத்து இடர்களும் நீங்கி மீண்டும் பிரகாசிக்க பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteதங்களை மீண்டும் இப்படிப் பார்த்தது மகிழ்வு வாத்தியாரே.
Deleteவாருங்கள்
பல சமயங்களில் எழுத முடியாது போய்விடுகிறது. என்னுடைய பக்கத்தில் சில நாட்களாக பதிவுகள் எழுத முடியாத சூழல். விரைவில் சரியாக வேண்டும். பார்க்கலாம்.....
ReplyDeleteஉண்மைதான் தோழர்
Deleteமுன்பு ஏதாவது ஒரு பதிவு மண்டைக்குள் ஓடிகொண்டே இருக்கும் இப்போது ... நிலைமை தலைகீழ்.
வலைப்பூ பிணைப்பை தங்களது பதிவு நன்கு உறுதிப்படுத்துகின்றது. இளையநிலா குணம் பெற பிரார்த்திப்போம். தங்களது எழுத்துப் பணி தொடரட்டும்.
ReplyDeleteபுத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html
நன்றிகள் முனைவரே
Deleteஅண்ணா
ReplyDeleteகருத்து சொல்ல நானும் வந்துட்டேன். நல்ல எழுத்தாளர்களை மீண்டும் எழுத தூண்டிய பதிவு. நற்பணிக்கு நன்றி
நன்றி பாண்டியன் ...
Deleteஇன்று மருமகளுக்கு பிறந்தநாள் ...
அதற்கு செல்கிறோம்
வந்து இன்னொரு பதிவிட விருப்பம் பார்ப்போம்
நானும் ஒரு மூன்று மாதகால ஓய்வில் இருக்கின்றேன் அண்ணா . 100 நாட்களுக்குண்டான பெரும் தொடர்கதை ஒன்றனையும் , 100 திரை விமர்சனமும் தொடர்ச்சியாக எழுதலாம் என்ற ஐடியா . பார்க்கலாம் . அமையும் என்று நினைக்கிறேன் .
ReplyDeleteநல்ல படி தேர்வை எழுதவும் ..
Deleteதொடர்ந்து எழுத வரவும் வாழ்த்துக்கள்
வணக்கம்,
ReplyDeleteஊக்கம் அளிக்கும் பதிவு,
அவர் குணமடைந்து பதிவுலகில் வளம் வரட்டும்.
நன்றி.
நன்றிகள் பதிவரே ...
Deleteநலம் பெறுவார் அவர் ...