விதைக்கலாம் நிகழ்வு இரண்டு

விதைக்kalaam  அப்படின்னு ஒரு அமைப்பா? 

ஆம். மேதகு கலாம்  அவர்களின் மறைவை ஒட்டி  அவர் கனவுகளை நினைவுறுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதல் நம் எல்லோருக்குமே இருந்தது.

நானும் சில விசயங்களை செய்ய நினைத்தேன். என் பாணியில் தனியே செய்ய ஆரம்பித்தேன்.

இந்நிலையில் 

 திடீர் என ஒரு நாள் ஸ்ரீ அழைத்து ஏன் நாம் ஒரு அமைப்பை துவங்கக்கூடாது என்று கேட்க தள்ளிப் போடக்கூடாது இம்மாதிரி நல்ல பணிகளை என்பதால் உடன் கருத்தொருமை உள்ள  நண்பர்கள் புதுகை பாரதி தனிப்பயிற்சி வகுப்பில் கூடி ஆலோசித்தோம். கன்றுகள் நடுவது அவற்றை எண்கள் இட்டு பராமரிப்பது தொடர் பணிக்கு வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் சேவையை தொடர்வது என பல்வேறு கருத்துருக்கள் முன்வைக்கப்பட்டன. 

அமைப்புக்கு ஒரு பெயர் தேவை என்று சொல்லி குழுவினர் விவாதத்திற்கு அதை விடவும் செய்தோம். பிரபாகரன் என்கிற தோழர் விதைக் kalaam என பரிந்துரைக்கவே அதை தேர்வு செய்தது குழு. 

விதைக்கலாம் பிறந்தது இப்படித்தான். அடுத்த கூட்டம் ஆக்ஸ்போர்ட் உணவியல் கல்லூரியில் நடந்தது. ஸ்ரீயின் கருத்துப்படி ஒரு ஆண்டிற்கு வளாகங்கள் பதிவானஉடன்  செயல்படத் துவங்கலாம் என்றே நினைத்திருந்தோம்.  ஆனால் தோழர் ராமலிங்கம் பதினாறு பள்ளிகள் வந்துவிட்டனவே ஏன் தாமதம் என்று கேள்வி எழுப்பி செயலுக்கு கொண்டுவந்தார் அமைப்பை. 

ஞாயிறு மட்டும் செயல்படும் வண்ணம் திட்டமிடப்பட்டது. அருகில் உள்ள பள்ளிகள் என்றால் இருசக்கர வாகனத்திலும், தொலைதூரப் பள்ளிகள் என்றால் கார்பன் புட் பிரிண்டை குறைக்கும் விதமாக பேருந்திலும் பயணிக்கலாம் என்று முடிவானது. 

எனது பள்ளியில் துவங்குங்கள் என்று காசி முதல் ஆளாக பெயர் கொடுத்தால் அவர் பள்ளிக்கு சென்றோம். முப்பது பேருக்கு மேல் கூடிய கூட்டம் பத்துபேராக சுருங்கியிருந்தது! இருந்தும் மகிழ்வுதான். ஞாயிறு அன்று யார் அதிகாலையில் பேருந்து நிலையத்திற்கு வருவார்கள்? வந்தவர்கள் உண்மையிலேயே நல்ல இனிசியேட்டிவ் உள்ளவர்கள். அதுவே பெரிய மகிழ்ச்சி. 

இலுப்பூர் பள்ளியில் ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. திரு.காசிப்பாண்டி ஆசிரியராக இருப்பதால் மரக்கன்றுகள் பாதுகாப்பாய் இருக்கின்றன. மிக சிறந்த தலைமை ஆசிரியர்களில் ஒருவரான திரு. பிரபாகரன் அவர்களின் பள்ளிவேறு. எனவே கன்றுகள் பாதுகாப்பாய் இருக்கும் என்கிற உறுதி இருந்தது. 

 அதிகாலை ஐந்து மணிக்கே புறப்பட்டு சோமசுந்தரம்  அண்ணாவை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றேன். எனக்கு முன்னே ஐந்து கூண்டுகளோடு ஒரு படை பள்ளியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. 

 இரண்டாவது நிகழ்வாக இந்த ஞாயிறு எனது பள்ளியில் ஆறு கன்றுகள் நடப்பட்டிருகின்றன. ஐந்து என்கிற விசயத்தை தாண்டி ஆறு ஏன் எனில் கடந்த வாரம்  தோழர். இ.சாந்தக்குமார் அவர்களின் பிறந்தநாளை கொண்டடியதின் பதிவாக அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு வேப்பம் கன்றினையும் ஆறாவதாக விதைத்தோம். 

இன்று நிகழ்வில் கலந்துகொண்ட கார்த்திகேயன் உடையப்பன், (யு.கே. டெக்), ஆசிரியர் காசிப்பாண்டி, ஆசிரியர் சாந்தக்குமார், பிவெல் மருத்துவ மனையின் நிர்வாகி திரு.பாக்கியராஜ், மென்பொருள் பொறியாளர், வினோத் (யூ.கே டெக்), எம்.எஸ்.எஸ். சந்தோஷ் மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி.  

கடந்த வாரம் பாரத வங்கியில் இருந்து ஒய்வு பெற்ற திரு.மணி, பள்ளன்கோவில் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சோமசுந்தரம் என ஒரு பெரும் படையே வருகைதந்து எமது பள்ளி வளாகத்தைப் பெருமைப்படுத்தியது. 

கன்றுகள் நடப்பட்ட பின்னர் ஒரு சிறிய ஆலோசனையை நாடினோம். திரு.மணி அவர்கள் இந்த அமைப்பில் பங்களிப்பத் தந்த அத்துணை இளம் உறுப்பினர்கள் நம்பிக்கையை விதைப்பவர்களாகவும் இருப்பதைக் கூறி பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு ஏதாவது செய்யவேண்டும். அடுத்த மாதம் அதைக் குறித்து நகரலாம் என்று சொன்னார். 

பின்னர் பேசிய தலைமைஆசிரியர் சோமசுந்தரம் தனது மாணவர்களை ஒன்றிணைத்து நிதிதிரட்டித் தரஇருப்பதாக சொன்னபோது அத்துணைபேருக்கும் ஆனந்த அதிர்ச்சி. 

மரம்நடும் இயக்கமாக துவங்கிய அமைப்பு சுற்றுச்சூழல் அமைப்பாகவும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியை செய்யும் அமைப்பாகவும் மாறத்துவங்கியிருப்பது மகிழ்வு. 

அடுத்த இரண்டு வார செயல்பாட்டிற்கு கவிஞர்.திரு.  முத்துநிலவன் அவர்கள் நிதி தருவதாக உறுதியளித்து உற்சாகப் படுத்தியிருக்கிறார்! அவருக்கும் நன்றிகள். 
திரு.சோமசுந்தரம் அவர்களின் ஆலோசனைகள்

இன்று வருகை தந்த  பங்கேற்பாளர்களும் நிதி அளித்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றிகள். தொடர்ந்து இயங்கவேண்டும் இளைஞர்கள்.  அமைப்புக்கான சட்ட விதிகள் வரும் புதனுக்குள்(9/9/2015) இறுதி செய்யப்பட்டுவிடும் என்றே நினைக்கேன். 

அன்பன்
மது.

டெயில் பீஸ் 
இந்த தொடர் நிகழ்வுகள் பல்வேறு புரிதலை எனக்குக் கொடுத்தன. நாகபாலாஜியும், ஸ்ரீ மலையப்பனும் இணைந்து கலாம் மறைவை விவாதித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். இதுவரை அச்சிடப்பட்ட பிளக்ஸ் போர்டுகளில் புதிய சாதனையை கலாம் அவர்களின் மறைவு செய்திருந்ததைப் பேசிய அவர்களின் உரையாடலின் ஒரு பொறிதான் விதைக்கலாம்.

ஒரு நற்பணியை முன்னெடுக்கும் பொழுது எத்துனை இளைஞர்கள் ஒன்றாக கூடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதே எனக்கு பெருவியப்பாக இருந்தது! 

முதலில் செய்யத் துவங்குபவர்களே தலைவர்களாக இருக்கிறார்கள் என்கிற கருத்தை நிஜ வாழ்வில் நேரில் காணும் பொழுது எழும் வியப்பு அலாதியானது. 

ஸ்ரீ இதை எனக்கு செய்து காட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள் ஸ்ரீ. 
வாழ்த்துக்கள் தோழர்கள் அனைவருக்கும் . 
தொடர்வோம். 

பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி அளிக்கும் ஒரு அமைப்பை முயன்று தோற்றவன் என்கிற வகையில் ஸ்ரீ அடைத்திருக்கும் வெற்றி எளிதானது அல்ல.. அவர்கள் நண்பர்களும் சாதாரமானவர்கள் அல்ல. 

நீங்களும் இணையலாமே எங்களுடன்.
:-)

Comments

  1. கஸ்தூரி கை கொடுங்கள் முதலில்! எங்கள் பொக்கே! ...மிக மிக நல்லதொரு சிந்தனை விதைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை எழுகின்றது. நாளைய இந்தியா நன்றாக மிளிரும் என்ற நம்பிக்கை! இளைய இந்தியச் சிற்பிகள் கூடிவிட்டால் இந்தியா தலைநிமிர்ந்து நின்றிடாதோ!! அந்த நாளும் வந்திடாதோ?!! என்று பாடியதை அந்த நாளும் வந்துவிட்டது என்று இனி பாடத் துவங்கலாம்...வாழ்த்துகள்! மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்! எங்கள் இருவரின் வணக்கங்களும்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்...
      உண்மையில் உங்கள் வார்த்தைகளுக்கு தகுதியாக வரவேண்டிய மிச்சம் இன்னு இருக்கிறது..
      இனிதான் வளர்ச்சி..
      நன்றிகள் தோழர்

      Delete
  2. //கன்றுகள் நடுவது அவற்றை எண்கள் இட்டு பராமரிப்பது தொடர் பணிக்கு வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் சேவையை தொடர்வது என பல்வேறு கருத்துருக்கள் முன்வைக்கப்பட்டன//
    அருமை .நிறைய மரங்கள் நடுவது பெரிதல்ல.அதை தொடர்ந்து பராமரித்து மரமாகும்வரை பேணிக் காப்பதுதான் சிறந்தது அதனை மனதில் கொண்டு திட்டமிடும் 'விதைக்கலாம் ' நண்பர்களுக்கு வாழ்த்துகள்
    . கலாமின் கனவு நனவாகி வருவது மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவை படித்தேன் தோழர் ...
      //எத்துனை கன்றுகள் வளர்ந்துள்ளன,//
      என்ற கேள்வி
      நிச்சயம் அப்படி போகாது...
      காசியின் கன்றுகள் எம் பள்ளி ஆண்டியப்பனின் (தமிழாசிரியர்) கன்றுகளும் சரி விருட்சங்கள் ஆகிடும்.

      Delete
  3. கஸ்தூரி சகோ! எனது சிறிய வேண்டு கோள்! நீங்களும், உங்கள் குழுவில் ஆசிரியர்களும் இருப்பதால்...
    நம் நாட்டின் எதிர்காலம் இன்றைய மாணவச் செல்வங்களின் கையில்தான் இருக்கின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. கலாமின் கனவு பல என்றாலும் முக்கியமாகக் கல்வி என்பதும் நாம் எல்லோரும் அறிந்ததே. கல்வி என்றால் ஏட்டுக் கல்வி மட்டுமல்ல என்பதும் உங்களுக்குத் தெரியாதது அல்ல.

    மாணவச் செல்வங்களை சாதிக் கட்டுக் கோப்புக்குள் இருந்து வெளியில் கொண்டு வர முயற்சிக்கலாம். நாளைய நம் நாடு கொஞ்சமேனும் அதிலிருந்து வெளியில் வராதோ என்ற ஒரு ஆதங்கம். இந்த மாணவர்களில் ஒரு சிலரேனும் நாட்டை அமைப்பதற்கும் ஆள்வதற்கும் வரும் வாய்ப்பு இருக்கிறதே! அதனால்தான்...அவர்களேனும் சாதி அரசியல் செய்யாமல் இருப்பார்கள் அல்லவா ...

    சிறிய வகுப்பிலிருந்தே சிவிக் சென்ஸ் ஊட்ட ஆசிரியர்கள் முனையலாம். ஏன் பெரிய வகுப்புகளிலும் இப்போதே அதைச் செய்யலாம்.

    ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க விதையை ஊன்றலாம்...அவர்களேனும் ஒரு நல்ல சமுதாயத்தில் வாழலாமே நம் குழந்தைகள் தானே...
    அவர்களை, வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமின்றி நன்றாக ஆராய்ந்து கல்வி கற்கும் உத்வேகத்தைப் புகுத்த முயற்சிக்கலாம்.
    நல்லதொரு நூலகம் பராமரித்து நல்ல நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கலாம். ஏனென்றால் புத்தகங்கள் மனதில் பல விதைகளை விதைக்கின்றது நமது எண்ணங்களை, சித்தாந்தங்களை உருமாற்றி நல்வழியில் பயணிக்கும் ஆற்றல் பெற்றவை.

    தாய்மொழியில் ஆர்வத்தை வளர்ப்பது..இதற்குப் புத்தங்கள்தான் பெஸ்ட்...மற்றும் விவசாயத்தைப் பற்றி விழிப்புணர்வு வளர்த்தல்...

    நல்லொழுக்க வகுப்புகள் இப்போதெல்லாம் இல்லை எனவே உங்கள் நற் செயல்களை நல்ல கதைகள் மூலம் குழந்தைகளின்மனதில் விதைக்கலாம். குழந்தைகள் ஏன் +2 குழந்தைகள் உட்பட கதை விரும்பிகளே. சும்மா அட்வைஸ் செய்தால் யார் மனதிலுமே பதியாதே அதனால் அவற்றையும் சுவைபடச் சொன்னால் நன்றாக இருக்குமே என்பதால்தான்..

    "பெண் குழந்தைகள்" கல்வியை வலியுறுத்தி, புதுமைப் பெண்களாக, இந்தச் சமுதாயம் பார்க்கும் பெண் என்ற விதிவிலக்கிலிருந்து மாற்றி உருவாக்க முயற்சிக்கலாம். (இங்கு ஓவரான பெண்ணீயக் கருத்துக்களை நான் சொல்லவில்லை. ) பெண் குழந்தைகள் தைரியமாக இந்தச் சமுதாயத்தை எதிர்கொண்டு வாழும் கலையையும், ஆண் குழந்தைகளுக்கும் அதே....இரு பாலாருக்கும் ஆளுமைத் திறன் பற்றிய கல்வி...இது ஏட்டில் கிடைக்காது..

    ஆராய்ச்சிகளில் ஆர்வம் ஏற்படுத்துதல் ....

    குழந்தைகளின் விருப்பம்/எதிர்கால கனவு அறிந்து அவர்களை அதற்கு ஏற்ப உற்சாகப்படுத்துதல்.

    குறிப்பாக அவர்கள் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை உருவாக்குதல்...

    மாணவச் செல்வங்களையும் உங்கள் நற்பணிகளில் உட்படுத்தலாம்.

    இன்னும் பல......எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்ய முடியாதுதான்....மெதுவாக ஒவ்வொன்றாக உட்படுத்தி விதைத்த விதையை ஒரு மரமாக இல்லாமல் பல மரங்களாக விரிவாக்கி நல்ல பாதையை உருவாக்கலாம்தானே....உருவாக்கினால் நாளை வயதான சமுதாயம் அந்த இளம் சமுதாயத்தைக் கண்டு மகிழ்ந்து இளைப்பாறலாம்...நான் ரொம்ப ஐடியலாக சிந்திக்கின்றேனோ? !!! சிரித்து விடாதீர்கள் இதை வாசித்து..ஹ்ஹ இருந்தாலும் உங்கள் விதைகளுடன் இந்த விதைகளையும் கலந்து விதைத்துவிடுங்கள்...

    வாழ்த்துகள், பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      திட்டங்கள் இருக்கின்றன..
      விரைவில் நல்ல செய்தி வரும்

      Delete
  4. கஸ்தூரி சகோ! எனது சிறிய வேண்டு கோள்! நீங்களும், உங்கள் குழுவில் ஆசிரியர்களும் இருப்பதால்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ கருத்துக்கு நன்றி
      ஸ்ரீ குறித்துக் கொள்ளுங்கள் செய்வோம்

      Delete
    2. குறித்துக்கொண்டேன் அய்யா...

      Delete
    3. மிக்க நன்றி கஸ்தூரி அண்ட் ஸ்ரீ !

      கீதா

      Delete
  5. வாழ்த்துகள். சீரிய பணி. போற்றுதலுக்குரியது.

    ReplyDelete
  6. விதை
    மரமாய் தழைக்கட்டும்
    தம +1

    ReplyDelete
  7. சிறப்பான முயற்சி... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிவில் விழாவில் இதைப்பற்றியும் சொல்ல வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா

      Delete
  8. நல்ல செயல் தேவையான செயலும் கூட.....மலையப்பன் உண்மையில் விதை தான் செடியாக வளரத்துவங்கியுள்ளார்...விருட்சமாய் அனைவருக்கும் பயன் தருவார் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது...வாழ்த்துகள் அனைவருக்கும் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சகோ

      Delete
    2. நன்றி அம்மா...

      Delete
  9. விதை மரமாக வாழ்த்துக்கள். கலாம் கூறிய மொழிகளில் ஒன்றான வீட்டில் நூலகத்தைத் துவங்குவோம் என்பதை மனதில் கொண்டு எங்கள் வீட்டில் நூலகத்தை ஆரம்பித்தோம். தற்போது 1000 நூல்களைத் தாண்டிவிட்டது. தங்களின் முயற்சிக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிகள் முனைவரே

      Delete
  10. அருமையான சிந்தனையை விதைத்துள்ளீர்கள் சகோதரரே!

    விருட்சமாய்ப் பலன் தரும்! வாழ்த்துக்கள்!

    த ம +1

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சகோதரி

      Delete
  11. உண்மையை சொல்ல வேண்டும் இங்கே... உங்களுடைய சரியான ஆலோசனையும், தெளிவான வழிகாட்டுதலும் மற்றும் நம் நண்பர்களின் ஒத்துழைப்பும் இல்லையெனில் இது சாத்தியமில்லை அய்யா...என் நண்பர் சாந்தகுமார் எவருக்கு எது வேண்டும் செய்வோம் என்பார் அதுபோல் எவையெல்லாம் முடியுமோ அவையெல்லாம் விதைக்கலாம் செய்யும்... செய்வோம்.... உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு இந்த அமைபிற்கு தேவை... அனைத்து விதைக்கலாம் அமைப்பு நண்பர்களின் சார்பில் நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீ ...
      எப்போதும் இருக்கும் என்னுடைய ஒத்துழைப்பு

      Delete
    2. நன்றி சொல்ல மாட்டேன் நீங்கள் என்னுடன் இருக்கும்போது.... தொடர்வோம் என்றெண்டும்...

      Delete
    3. இந்த புரிதலோடு உங்கள் பயணம் மேலும் சிறப்படைய வாழ்த்துகள் சகாஸ்!! இந்த பக்கத்தை சொடுங்குங்கள்,http://engalblog.blogspot.com/2015/09/blog-post_12.html?showComment=1442047462095#c7888743607159980744 உங்கள் அமைப்புக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறந்த அங்கீகாரம்!!

      Delete
  12. அன்புள்ள அய்யா,

    ‘விதைக்கலாம்’ நல்ல அமைப்பைத் தொடங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். இன்றைக்கு விதைக்கும் விதை எதிர்காலத்தில் விருட்சமாகி தங்களின் அமைப்பிற்கு தாலாட்டுப்பாடி நன்றியுடன் தலையாட்டும். எத்தனை எத்தனையே உயிர்கள் அதன் நிழலில் இளைப்பாரும். அதைப்பார்க்கின்ற போது உள்ளம் கூத்தாடும்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மேலும் சுகமா(க்)கும் தங்கள் அமைப்பின் பணி. சீரிய முயற்சி... சிறப்புடன் தொய்வின்றி தொடருங்கள்.

    பாராட்டுகள்!

    நன்றி.
    த.ம. 8

    ReplyDelete
    Replies
    1. நல்ல இதயம் ஒன்று செயல்பட முடிவெடுக்கும் பொழுது ஏற்கும் இதயங்கள் பின்தொடர்வது இயல்பே கவிஞரே

      அப்படி ஸ்ரீ மட்டும் நாகா முன்னெடுக்க நாங்கள் ஒன்றிணைந்தோம்

      வார்த்தைகளைத் தாண்டி, நிகழ்வுப் பங்களிப்பைத் தாண்டி இந்த நிமிடம் வரை ஒரு பைசா கூட நான் அமைப்புக்காக செலவிடவில்லை!
      நண்பர்கள் அதற்கான வாய்ப்பையும் தரவில்லை!
      மகிழ்வு தொடரவேண்டும் உங்கள் போன்ற முன்னோடிகளின் வாழ்த்துடன்.

      Delete
  13. பாராட்டப்படவேண்டியது தோழரே
    தமிழ் மணம் 9

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அய்யா

      Delete
  14. உங்கள் எண்ணம் ,விதைக்கலாம் என்று செயல் வடிவில் வந்திருப்பதால் நல்ல பலன் அளிக்கலாம் என்றே நினைக்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நண்பர்கள் இன்று நாற்பது நண்பர்களாக வளர்ந்த விசயம் தான் விதைக்கலாம்...
      உங்களுடன் சேர்த்து நாற்பத்து ஒன்று...
      அடுத்த நிகழ்வுக்கு வாங்க

      Delete
  15. இயற்கையைப் பேணும் எண்ணம் எல்லோர்க்கும் வந்துவிட்டால் எல்லாமும் செழிக்கும் .

    ReplyDelete
  16. விதைக்கலாம் குழுவிற்கு வாழ்த்துகள் அண்ணா,
    அருமையான விசயம்!

    ReplyDelete
  17. தங்கள் திட்டங்கள் செவ்வனே நடந்தேற என் இனிய வாழ்த்துக்கள்...! சகோ!

    ReplyDelete
  18. செய்தியைக் கொடுத்த எங்கள் ப்ளாகிற்கு நன்றி.
    விதைக்கலாம் வளர்ந்து விருட்சமாகி விதைக்களாமாகச் செயல் பட வாழ்த்துகள். வளர்க நலமுடன்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக