இன்னாது படிச்சா காசா ?
பதிவராக் கூட இருக்க வேண்டாமா?
மேலும் விவரங்களுக்கு
காலாண்டு விடுமுறையை ஆர்.எம்.எஸ்.ஏ பயிற்சி ஒன்று எடுத்துக்கொண்டது. இந்தியாவில் முதலில் செயல்படுத்தப்படும் போனிக்ஸ் மூலம் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் பயிற்சியில் இரண்டுநாட்கள் செலவிட்டேன். திட்டம் குறித்த சக ஆசிரியர்களின் உற்சாகம் தொற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது எதோ நம்மால முடிஞ்சது.
பயிற்சியின் பரபரப்பில் கொஞ்சம் பதிவர் அமைப்புக் குழு கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. பதிவர் கையேட்டுப் பணி இரவுபகலாக நடைபெற்று வருவதால் அந்தப் பணி நடைபெறும் யு.கே இன்போடெக் நிறுவனத்திலேயே அமைப்புக் குழு கூட்டமும் நடைபெற்று வருகிறது.
பதிவர் கையேட்டு வேலைகளை ஒன் மேன் ஆர்மியாக ஸ்ரீ மலையப்பன் செய்து முடித்துவிட்டார்! தனிமனித சாதனையில் உறுதுணையாக இருந்தது யு.கே டெக் கார்த்திக் மற்றும் அவர் நிறுவனத்தின் தூண்கள். அவர்களுக்கும் என் நன்றிகள்.
நேற்று இரவு இரண்டு மணிக்கு தூங்கப் போன ஸ்ரீ இன்று புத்துணர்வோடு பணிகளைத் தொடர்ந்து பார்த்தது எனக்கு ஒரு ஆச்சர்யம். குழுவின் இளைஞர் இப்படி என்றால் முதுகண் முத்துநிலவன் வாசகர் போட்டியைக் குறித்து பதிவிட்ட பொழுது மணி அதிகாலை மூன்று! சரி புதுகையில் இப்படி தீயாய் வேலை பார்கிறார்கள் என்றால் திண்டுக்கல்லில் சிலமாதமாகவே தூங்காத ஒருவரும் இருக்கிறார்! உழைக்கும் கரங்கள் அனைத்திற்கும் நன்றிகள்.
நிதி பெருவெள்ளமாக வரவில்லையே ஒழிய சிற்றோடையாக வந்துகொண்டேதான் இருக்கிறது. சகோதரி இனியா அவர்களின் பெயரினைப் பார்த்தபொழுது மகிழ்வாக இருந்தது. ஏனைய நிதி ஆதரவுக் கரங்களுக்கும் நன்றிகள்.
செல்வா மற்றும் வைகறை பல பதிவர்களுக்கு அறைகளை முன்பதிவு செய்திருப்பது கூடுதல் மகிழ்வு. எல்லோரும் பணியாற்றுகிறார்கள். அடியேன் பதிவு மட்டுமே போடுகிறேன்.
உணவுக் குழு அமைப்பாளர் இரா.ஜெயா அம்மா நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தயார் செய்ய வேண்டிய உணவுகளை ஒருங்கிணைத்துப் பார்த்தது அருமை.
இன்றைய விழாவில் கலந்துகொண்ட பதிவர்கள், கவிஞர் ரேவதி, கவிஞர்.இர.ஜெயா அம்மா, கவிஞர். கீதா, கவிஞர் செல்வா, பாவலர் பொன்.கருப்பையா, யூகே டெக் கார்த்திகேயன், யூகே டெக் முகுந்தன், தொடர்ந்து கையேட்டு விவரங்களைத் தட்டிக்கொண்டே இருந்த ஸ்ரீ, விதைக்கலாம் காசி என ஒரு பட்டாளம் விவாதத்தில் ஈடுபட்டது.
கூகுல் நிறுவனத்தை அணுக கார்த்திக் ஒப்புக் கொண்டிருக்கிறார். நான் கிடைத்த தொலைபேசி எண்ணில் அழைத்த பொழுது வி ஆர் குரல் காலையில் (திங்கள்?) பேச சொன்னது.
கூகுல் ஸ்பான்சர் கிடைத்தால் நன்றாக இருக்கும். கவிஞர் செல்வா ஒருமுறை பங்களூர் சென்றுவந்தால் என்ன என்றார்? நல்ல ஆலோசனைதான்.
நேரலை ஒளிபரப்பு குறித்து பேசியிருக்கிறோம். அகரன் (சென்னை) அவர்களிடம் ஒருமுறை பேசவேண்டும். தற்போதைக்கு வயர் காஸ்டில் முயற்சித்திருக்கிறோம்.
நாளை குழுவினர் புதுகையின் பெரிய ஆளுமைகளைப் பார்க்க இருக்கின்றனர். பதிவர்களுக்கு கையேட்டை கையில் தரப் போகிறோமா அல்லது அழகிய பையில் வைத்துத் தரப் போகிறோமா என்பது நாளை தெரிந்துவிடும். குழுவினரோடு அய்யா தங்கம் மூர்த்தி அவர்களும் வருவதால் அனேகமாக அழகிய பை ஒன்றும் வழங்க இயலும் என்று நம்புகிறோம். பார்க்கலாம்.
அன்பன்
மது.
மாலையில் பேசிக்கொண்டே வேலை பார்த்தோம். திட்டமிட்டோம் வலைப்பதிவர் கையேட்டு ப்ரூஃப் திருத்தினோம். பிறகு தேநீர் அருந்தினோம் எல்லாத்தையுமாய்யா சுட்டுப்போடுவீங்க..? அப்பறம் உங்களின் அந்த கூகுள் நிறுவனத்தை அணுகும் முயற்சியைத் தொடர வேண்டுகிறேன் மது. பெரிதினும் பெரிது கேள்! அங்க நம்ம சுந்தர் பிச்சைன்னு ஒருத்தர் இருப்பாருல்ல..அவரை நா ரொம்ப கேட்டதாச் சொல்லுங்க மறந்துறாதீங்க என்ன? வாழ்த்துகள் நன்றி
ReplyDeleteஉங்களது கூட்டு முயற்சிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகிய பையில் வைத்து தரவே ஆசை...நடக்கும்...
ReplyDeleteஆகா, அருமை!
ReplyDeleteவிழா நிகழ்வுகள் குறித்து அவப்போது பதிவிடுவது நாங்களும் உங்களுடன் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. விழாக்குழுவினரின் இரவு பகல் பாரா கடுமையான உழைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.
விழாக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
நன்றி...
ReplyDeleteநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...
இணைப்பு : பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
காண்க : இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...!
செம போங்க! நிகழ்வுகள் குறித்துத் தாங்கள் அப்போதைக்கு அப்போதே சொல்லிவிடுகின்றேன் என்று நீங்கள் பதிவிடுவது எங்களுக்கும் அறிந்து கொள்ள முடிகின்றதே...எப்படித் திட்டமிட்டு உழைத்து வருகின்றீர்கள் என்று...அருமை....
ReplyDeleteஅழகான அந்தப் பையில் (அதான் ஒரு பை கொடுக்கப்போவதாக நோட்பேட் பேனா என்று...நிலவன் ஐயா சொல்லியிருந்தாரே!!!) வைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது அழகியல் சார்ந்த??!!பார்வையில் எங்கள் பரிந்துரை...
யப்பா விழாக் குழுவினர் உங்கள் எல்லோருக்கும் எங்கள் பணிவார்ந்த வணக்கங்கள்....
அசத்துகிறீர்கள்! வர முடியாத ஏக்கம் மனதை கவ்வுகிறது!
ReplyDeleteஇப்படி நம்ம ஆளுங்க அசத்தினா நாம ஏதும் செய்யலையேனு குற்ற உணர்வு எட்டி பார்க்குதே சகோ எனக்கு. அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளும் நன்றிகளும். செம உழைப்பு சகோ.
ReplyDelete