தன்னை அறிதல் பயிற்சியில் அதிமுக்கியமான விசயம் தன்னை உணர்தல்தான்.
நம்மைப் பற்றி அறிய எளிய வழிகள் பல உண்டு.
நமது கடந்தகால சாதனைகள், பெற்ற மதிப்பெண்கள் போன்றவை மூலம் நமக்குள் இருக்கும் திறமைகளை உணரலாம்.
அடுத்த கட்டமாக நம்மை நெருங்கியிருப்பவர்பவர்களில் உண்மையைப் பேசுபவர்களிடம் கேட்கலாம்.
இந்த கட்டத்தில் நமக்குத் தெரியாத பலங்களோடு கூடவே பலவீனங்களும் தெரியவரும்.
பலவீனம் என்று நாம் உணரும் விசயங்களில் முயற்சி செய்து அவற்றையும் பலங்களாக மாற்றிக்கொள்வதில் இருக்கிறது வாழ்கையின் வெற்றி.
இதற்கு சில கருவிகள் இருக்கின்றன.
ஜோ ஹாரி சாளரம் என்பதுதான் முதன்மையான கருவி.
மனிதர்களை அவர்களின் விழிப்புணர்வின் அடிப்படையில் நான்கு பிரிவினராக பிரிக்கிறது இந்த சாளரம்.
ஜோ ஹாரி சாளரம் ஒரு அறிமுகம்.
உளவியல் அறிஞர்கள் ஜோசப் லுப்ட் மற்றும் ஹாரிங்டன் இன்ங்காம்மால் வடிமைக்கப்பட்டது. ஒரு தனிநபர் எப்படி மற்றவர்களோடு உறவைப் பேணுகிறார் என உணர்ந்துகொள்ள வடிமைக்கப்பட்ட உளவியல் கருவி.
ஜோஹரி சாளரத்தை தழுவி எழுதப்பட்ட எனது கட்டுரை இது
நீங்கள் எந்த கட்டத்தில்?
http://www.malartharu.org/2013/11/knowthyself.html
இதுமட்டுமே ஜோகாரி அல்ல இது எனது வசதிக்காக வகுப்பறையில் இளைய மாணவர்களுக்கு சொல்வதற்காக எழுதப்பட்டது.
உண்மையில் ஜோகாரி க்வார்ட்ரென்ட்ஸ் நான்கு,
நாம் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறோம் ?
அடுதவார்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
நாம் அறிந்த நம் திறன்களை பிறரும் அறிந்திருக்கிறார்களா? பிறர் நம்மைப் பற்றி அறிந்த விசயங்களை, திறன்களை நாம் அறிந்திருக்கிறோமா?
முதல் சதுரத்தில் வந்துவிட்டோம் என்றால் பிரச்சனை இல்லை. ஏன், மூன்றாம் சதுரத்தில் வந்தால் கூட வருந்தத்தேவை இல்லை.
ஆனால் அபாய கட்டம் என்பது நான்காவது சதுரம்தான்..(அன்னோன்)
நமக்கும் நம்மைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை, பிறர்க்கும் நம்மப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்கிற கட்டம் அது.
சுருங்கச் சொன்னால் வாழ்ந்ததற்கான எந்தத் தடத்தையும் ஏற்படுத்தாத தனிநபர்கள் மட்டுமே இந்தச் சதுரத்தில் இருக்கிறார்கள்.
நாம் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் முதற் சதுரத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்கிற விழைவு வந்தாலே போதும்.
நகர்வுகள் நன்மையே.
ஜோகாரி சாளரம் தொடர்வோம்
அன்பன்
மது
நல்ல உளவியல் தோழர் தொடர்கிறேன்
ReplyDeleteத.ம.
நன்றி தோழர்
DeleteJohari Window பற்றி அழகாக விளக்கினீர்கள். எங்கள் வங்கியில் பணியில் சேருவோருக்கு இந்தக் கோட்பாட்டைத்தான் முதல் வகுப்பில் எடுத்துச் சொல்லுவோம். இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
நன்றி அய்யா
Deleteகட்டம்.. (!)(?)
ReplyDeleteசித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்...
நன்றி தோழர்
Deleteஜோகாரி சாளரத்தைப் பற்றி இந்த ஜோக்காளியும் அறியச் செய்தமைக்கு நன்றி :)
ReplyDeleteநன்றி தோழர்
Delete
ReplyDeleteஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
நல்ல விஷயம் அறியத் தந்தமைக்கு நன்றி மது. தொடரட்டும்.
ReplyDeleteதொடருங்கள் நண்பரே
ReplyDelete