புத்தகத் திருவிழா இரண்டாம் நாள்

புதுக்கோட்டை அறிவியல் இயக்கத் தோழமைகள் முன்னெடுத்த புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2020 இவ்வாண்டு பல சவால்களை தாண்டியே நிகழ்ந்தது.

நான்கு மாதத் திட்டமிடலோடு நிகழும் விழா ஒரே மாதத்தில் நிகழ்த்த முடிவானது, இதைவிட பெரிய விசயம் கடந்த ஆண்டு புரவலர்களில் பெரும் புரவலர்கள் இம்முறை ஒரு வருடம் ப்ரேக் தாங்களேன் எண்டு சொல்ல புதிய யுக்க்திகளை அறிவியல் இயக்கம் முன்னெடுக்க வேண்டிப் போனது.

கள நிலவரம் களேபரம் என்ற யதார்த்தத்தை அறிவியல் இயக்கம் முன்னெடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் நிச்சயம் பதிவு செய்யப்பட்டே ஆகவேண்டும். 

லேய் இரண்டாம் நாள் திருவிழாவைப் பற்றி சொல்வாய் என்று பார்த்தால் முன்கதை சொல்கிறாயே என்று கேட்கலாம். 

இதோ இரண்டாம் நாள் நிகழ்வு 

நியூஸ் 18 குணசேகரன் மக்கள் சபை நிகழ்வை அரங்கிலேயே நிகழ்த்தி பின்னர் ஒளிபரப்ப முன்வந்தார்கள். 

அதிமுக வைகைச் செல்வன், பாஜக ஸ்ரீனிவாசன், நாம் தமிழர் கல்யாண சுந்தரம் மற்றும் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் இவர்களோடு அண்ணன் நிலவனும் விவாதித்த நிகழ்வு. 

நியூஸ் 18 குழு அரங்கை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். கிட்டத்தட்ட திரைப்பட படபிடிப்பை ஒத்த நிகழ்வுகள். அரங்கு நிறைந்துவிட்டது. 

யாரு பேசினா என்ன மேன் ஆப் தி மாட்ச் தோழர் மதுக்கூர்தான். 

கிடைத்த அத்துணை பந்துகளையும் சிக்ஸர் அடித்தார்.

லவ் யூ மதுக்கூர். 

இந்த நிகழ்வை குறித்த அச்சம் விழாவின் தன்னார்வலர் குழுவில் இருக்கும் எனக்கு எழுந்தது குறிப்பிட வேண்டும். 

தோழர்கள் அனைவரும் அமைதியாகவும் கண்ணியமாகவும் இருந்தார்கள். ஆனால் ப.ஜ.க ஒரு குழுவை அமர்வில் வைத்திருந்தது. அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள். 

திமுக என்றால் மூல பத்திரம் என்றும், நாம் தமிழர் என்றால் ஆமைக் கறி என்றும், கம்யூனிஸ்ட் என்றால் இருபத்தி ஐந்து கோடி என்றும் மாறி மாறி கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார்கள். 

வியாபம் என்றோ நீட் கொலையாளிகள் என்றோ யாருமே பதில் குரல் எழுப்பவில்லை. புதுக்கோட்டைக்காரர்கள்  கண்ணியம் மிக்கவர்கள். தோழர்கள் இவற்றை போன்ற பல விலங்குகளை தாண்டியே வந்தவர்கள்.

நாம் தமிழர் கல்யாண சுந்தரம் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மிக அருமையாக பேசினார். 

ஆனால் இவர்களை வாயில் ஒன்றை கவ்வக் கொடுத்து இன்னொன்றால் வெளுத்து விரட்டியவர் மதுக்கூர் மட்டுமே. காணொளியை பாருங்கள். 

இத்தகு நிகழ்வுகள் அதன் எதிர்வினைகள் புத்தகக் கண்காட்சிக்கு தேவையா என்கிற அச்சம் எனக்கு இயல்பாகவே எழுந்தது. 

பார்ப்போம் 

அன்பன் 

Comments