புத்தகத் திருவிழா பத்தாம் நாள் மாலை நிகழ்வுகள்

நிறைவுவிழா

நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் நிறைவாக மக்களின் நேசம் பெற்ற அரசியல் தலைவர் சு.திருநாவுக்கரசு அவர்களும் மண்ணின் மைந்தர் திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த கால் நூற்றாண்டாக  தமிழக அரசியலை வடிவமைத்த பல முன்னெடுப்புகளைச் செய்த மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் நீண்ட சொற்பொழிவு ஒன்றைத் தந்தார்.

தொடர்ந்த பாண்டிராஜ் உரையைவிட சிறார்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் என்றார். சிறார்கள் பல கேள்விகளை கேட்டு பதில்களைப் பெற்றனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் ஐடியா பிளஸ் நிறுவனம் அறிவித்திருந்த செல்பி போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆயிரம் ரூபாய்களுக்கு நூற்கள் பத்து பேருக்கும், பத்தாயிரம் ரூபாய்களுக்கு நூற்கள் ஒருவருக்கும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியி ஒத்திவைக்கப்பட்ட பொழுது ஐந்தாம் ஆண்டு திருவிழாவிற்கு ரூபாய் ஒரு லட்சத்தை முன்பணமாகக் கொடுத்தார் ஐடியா பிளஸ் நிறுவனர் திரு.கே.வரதராஜன்.



Comments