புத்தகத் திருவிழா நான்காம் நாள் நிகழ்வு 2020
நான்காம் நாள் நிகழ்வுகளில் புதுகையின் தி.மு.கவின் முன்னோடிகள் கலந்துகொண்டனர்.
முனைவர் நகுல் பராசர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு அறிவியல் செயல்பாடுகள், சிறப்புரைகளைத் தந்தனர்.
குறிப்பாக த.வி.வேங்கடேஸ்வரன் முன்வைத்த தரவுகள் நம்ப இயலா அதிர்சிகள். ஆயுர்வேதம் ஏதோ சம்ஸ்கிருத அறிவாளிகளின் கண்டுபிடிப்பு என்கிற பொதுப்புத்தியின் மீது சம்மட்டி அடி அவரது உரை.
ஆயுர்வேத நூற்களின் மூலத்தை எங்கிருந்து பெற்றோம் என்பதை
ஆயுர்வேத அறிஞர்களே எழுதிவைத்திருக்கிறார்கள்.
வெகு மக்களின் அன்றாட பட்டறிவை கேட்டறிந்து, கோபர்கள் எனும் ஆடு மேய்க்கும் சமூகத்தின் பட்டறிவு மருத்துவத்தைக் கேட்டு ஆவணப்படுத்தியதே ஆயுர்வேத நூற்கள் என்பதை அதே நூற்களில் இருக்கும் ஸ்லோகங்களை எடுத்துக் காட்டி பார்ப்பன வெற்றுப் பெருமையில் வெடிவைப்பதை தொடர்ந்து செய்தார்.
ஆர்யபட்டரின் கருதுகோள்கள் அவர் சூரியனை நினைத்த தவமிருந்து ஜூரிய தேவரே ஆரியபட்டரின் காதில் சொன்னதே ஆர்யபட்டியம் எனும் புளுகை உடைத்ததும் இவ்வாறே.
என்னுடைய சுயமதியால் நான் கண்டறிந்த வானியல் உண்மைகளே இவை என்று அவரே ஆர்யபட்டீயத்தில் சொல்லியிருப்பதை பகிர்ந்தார்.
மேலும் பண்டைய உழைக்கும் வர்க்கம், வானியல் அறிவோடு இருந்ததை, காலக் கணக்கை செய்ததை கல் வளையங்கள், கல் தூண்கள் இருப்பதை பகிர்ந்தார்.
ஆக கதை விட்டு, அதை நிறுவனப்படுத்தி, சமூகத்தை கிலியில் ஆழ்த்தி அந்த கிலியை தம் சமூக உயர்வுக்கு நரித்தனமாக பயன்படுத்தும் சமூகமாக அன்றுமுதல் இன்றுவரை அவா இருப்பதை உணர வைக்கும் உரை இவரது.
கூடுதல் தகவல்:
த.வி. வெங்கடேஸ்வரன் ஒரு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர். முதுநிலை விஞ்ஞானியாக இருப்பதால் அறிவியலை போற்றுகிறார்.
Comments
Post a Comment
வருக வருக