நான்காம் நாள் மாலை நிகழ்வுகள் மரபுக் கவிதை மேதை இரா.சு.கவிதைப்பித்தன், கவிஞர். யுகபாரதி அவர்களின் சிறப்பு உரைகளோடு கலை கட்டியது.
பேச்சின் மூலமே ஆட்சியை பிடித்தவர்கள் தி.மு.க காரர்கள் என்கிற விசயம் பலருக்கு வியப்பாக இருக்கும். நிகழ்வு நடக்கும் நகர்மன்றத்தில் சில தசாப்பதங்களுக்கு முன்னர் தி.மு.க பேச்சாளர்களின் உரையை கேட்க கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டு வாங்கி கேட்ட விசயம் இந்த தலைமுறை நம்ப இயலாத விசயம்.
அப்படி என்னதான் பேசுவார்கள் என்று வியப்பு உங்களுக்கு இருந்தால் அடுத்த முறை கவிதைப்பித்தன் அவர்களின் பேச்சை கேளுங்கள். தமிழ் இன்னொரு பிறவியை எடுக்கும் இவரது பேச்சில்.
தமிழை உரிய உச்சரிப்போடு, ஏற்ற இறக்கங்களோடு பேசினால் எவ்வளு அழகாக இருக்கும் என்பதை இவரின் பேச்சினை கேட்கும் எவரும் உணர்வார்கள்.
இவரை தொடர்ந்து பேசிய யுகபாரதி நான் ஸ்டாப் ரகளை.
தமிழ் கவிஞர்கள் இருவர் இருந்ததாலோ என்னவோ கட்டுக்கடங்காத கூட்டம்.
விலா எலும்புகளை உடையாமல் பாதுகாத்து வீடு திரும்புவதே பெரும் பாடாகிவிட்டது. சிரிக்க வைப்பதில், சிந்திக்கவைப்பதில் கவிஞர்கள் தேர்ந்தவர்கள்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அய்யா ராஜவேலுவை சந்தித்து புதுகை தொல்லியல் கழகத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்தோம்.
தொடர்வோம்.
Comments
Post a Comment
வருக வருக