புத்தகத் திருவிழா ஆறாம் நாள் மாலை நிகழ்வுகள்

கடந்த ஆண்டே புத்தகத் திருவிழாவின் ஒரு நாளை மகளிர் தினமாக கொண்டாடும் பழக்கத்தை கவிஞர்.தங்கம்மூர்த்தி அறிமுகம் செய்திருந்தார்.

மேடை முழுவதும் பெண்கள், புதுக்கோட்டையின் முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு. த. விஜயலெட்சுமி அவர்கள் தொடங்கி தினத்தந்தியின் நிருபர் தோழர் உஷாநந்தினி வரை மேடை முழுதும் பெண்கள்.

வீதியின் உறுப்பினர்களின் சிறப்பு அமர்வு, வீதி உறுப்பினர்கள் ரூபாய் 45000/- யை நன்கொடையாகத் தந்திருந்தனர்.

சிறப்புரையாற்ற இ.சா.பர்வீன் சுல்தானா, இவரது காக்காய் தண்ணீர் குடித்த கதையின் சீன வெர்சன் கேட்டு இவரது ரசிகரானவன் நான்.

தமிழ்த்துறை பேராசிரியர் பேச்சு அபாரம், உண்மையச் சொல்லப் போனால் இந்த நான்காம் ஆண்டு புத்தகத்திருவிழாவில் அதிக காதுகளை ஈர்த்தவர் பேராசிரியர்தான்.

இவரது முகபாவங்களை ரசிக்கவேண்டும் என்பதற்காக மேடையில் இருந்த கவிஞர் இரா.ஜெயா, கீழே இறங்கி உட்கார்ந்து கொண்டார்கள்!

புதுக்கோட்டை கொண்டாடிய பேச்சாக இருந்தது இவரது பேச்சு.

தொடர்வோம்.

















































பட்டியலுக்குத் திரும்ப
மீளச் சேர 

Comments