புத்தகத் திருவிழா ஏழாம் நாள் மாலை நிகழ்வுகள்

 பழ. கருப்பையா அவர்களின் உரையை கேட்க  அதிகமாக கூட்டம் வரும் என்று நினைத்தேன்.

சர்கார் பட வில்லன் என்கிற அறிமுகம்தானே இந்தத் தலைமுறைக்கு இருக்கிறது.

பல்வேறு காரணங்களால் கட்டுக்கடங்கிய கூட்டமே வந்திருந்தது. உள்ளூர் திருவிழா பலரை பிஸியாக்கிவிட்டதும் ஒரு காரணம்.

ஹென்றி டேவிட் தோரோ துவங்கி பல்வேறு விசயங்களை பேசினார் அவர் பேசியதில் அற்புதமான புத்தர் கதையும் ஒன்று.

அறிவு அரசாள அரசு அறிவுக்கு சேவை செய்ய வேண்டும், மாறாக அரசியலுக்கு அறிவு பலியாகக் கூடாது என்று மோசி கீரனின் வாழ்வை சொல்லலி புத்தனுக்கு போனார்.

பிம்பிசாரன் புத்தருக்கு காட்டுவதற்காக ஒரு அற்புதமான தோட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

மாமன்னன் பிம்பிசாரன் புத்தரை அந்த தோட்டத்துக்குள் அழைத்து சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்த பொழுது புத்தர் அந்த அழகிய மலர்ச் சோலையின் அருகே ஒரு மண்மேடு இருந்ததை பார்க்கிறார்.

அழகான தோட்டத்தின் நடுவே இது என்ன என்று நெருங்கிப் பார்க்கிறார். மண் மேட்டில் ஒரு கிழவி அமர்ந்திருக்கிறாள்.

பிரான் அவளை விசாரிக்கிற பொழுது அந்த மண் மேடு அவளும் அவள் கணவனும் வாழ்ந்த வீட்டின் இடிந்த மிச்சம் என்றும், கணவரின் நினைவு வருகிற பொழுதெல்லாம் அந்த மண் மேட்டில் அமர்ந்து அவர்களின் வாழ்வின் இனிய தருணங்களை நினைவில் மீட்டிப் பார்ப்பேன் என்றும் அவள் சொல்ல பிரான் புன்னகைக்கிறார்.

இதன் காரணமாகவே மாமன்னன் பிம்பிசாரன் எவ்வளவு வற்புறுத்திக் கேட்டும் அந்த இடத்தை அவனுக்கு விற்கவில்லை என்பதையும் சொல்கிறாள்.

திரும்புகிற புத்தர் சொல்கிறார் "பிம்பிசாரா உன்தொட்டதின் மிக அழகான பகுதி இதுதான்"

செமையான கதை இல்லையா

மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த மாமன்னன் போற்றியது புதரை ..ஒருவேளை கோசத்தை மாற்றியிருந்தால் அவனும் காவிக் குரங்குகளில் ஒருவனாகவே அறியப்பட்டிருப்பான் என்று எனக்குத் தோன்றியது.

தொடர்வோம்




















Comments