இந்த சீசனில் அனைவரும் கேட்டிருக்க வேண்டிய உரை இரா. நடராஜன் அவர்களின் உரை.
மனிதர் வாசிப்பின் உயர் எல்லைகளை அனாயசமாகத் தாண்டுபவர்.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தன் படைப்புகளின் மூலம் முன்னணியில் இருக்கும் ஆயிசா நடராஜன் அவர்களின் மிக ஆழமான உரை. தொடர்ந்து பேசப்படும் படைப்புகளை கட்டுரைத் தொகுப்புகளை தருவதில் ஆயிசா நடராஜன் அவர்களுக்கு நிகர் அவர்தான்.
இந்தியர்கள் எப்படி அறிவியல் துறையில், மருத்துவ ஆய்வில், நானோ தொழில் நுட்பத்தில் உலகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதை அவையோருக்கு சொன்னார்.
மோ.கணேசன் அவர்கள் சிறப்பான உரை ஒன்றைத் தந்தார். மிக நேர்த்தியான ஏற்ற இறக்கங்களோடு தயாரிக்கப்பட்டு, ஒத்திகை செய்யப்பட்ட உரை புதியதலைமுறை மோ.கணேசன் அவர்களின் உரை.
இந்த ஆண்டின் நிகழ்வின் நான் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரே பேச்சாளர் ஆயிஷா நடராஜன்தான்.
தொடர்வோம்
Comments
Post a Comment
வருக வருக