இரண்டு
டபுள்யு. பி. யேட்ஸ், ஒரு தனித்துவம் வாய்ந்த ஆங்கிலக் கவிஞர். வில்லியம் பட்லர் யேட்ஸ் பிரித்தானிய இலக்கியத்தின் தூண் என வர்ணிக்கப்பட்டவர். கீதாஞ்சலியின் முன்னுரையில் நாம் எழுதி வியாபாரம் பார்ப்போம் ஆனால் தாகூர் தனது ஆன்மாவிலிருந்து எழுதியிருக்கிறரர் என்று குறிபிடுகிறார்.
லண்டன் இந்தியன் சொசைட்டி யேட்ஸ்சின் முன்னுரையோடு கீதாஞ்சலியை வெளியிட்டது. இது தாகூரையும் அவரது கவிதையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. முதலில் லண்டன் இலக்கிய உலகிலும் பின்னர் உலகின் அத்துணை மூலைகளுக்கும் சென்றது தாகூரின் புகழ்.
இந்தியாவின் கலாச்சாரமும், இறையனுபவமும் மேற்குலகுக்கு முதன்முதல் அறிமுகமானது. ஓராண்டிற்குள்ளாகவே 1913இல் தாகூர்க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இலக்கியத்திற்காக நோபலை வென்ற மேற்குலகை சேராத முதல் மனிதர் தாகூர் ஆவர்.
ஒரே இரவில் புகழின் உச்சிக்கு சென்ற தாகூர் தனது உலக சுற்றுபயணத்தை துவக்கினார். பல கலச்சாரங்கள் சகிப்புத்தன்மையோடும், புரிந்துணர்வோடும் இருக்கவேண்டிய அவசியம் குறித்து உலகெங்கும் உரையாற்றினார். 1915ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தாகூரை நைட் பட்டம் கொடுத்து சிறப்பித்தார்.
சுற்றுப்பயணம் இல்லாத காலங்களில் தாகூர் கல்கத்தாவின் வெளியே உள்ள தனது வீட்டில் விரைவான ஆழ்ந்த இலக்கிய பணிகளில் இருப்பார். 1919இல் அம்ரிஸ்டாரில் 400 பஞ்சாபியர்கள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தாகூர் தனது நைட் பட்டதை துறந்தார்.
யேட்ஸ் |

Comments
Post a Comment
வருக வருக