ஈழம் இன்று

தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது,( ஆமாம் அடிமையாய்  வாழ்வதை வாழ்வென்று சொல்வதா ?) பல ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் ஆப்ரிக்கர்கள் வாழ்ந்த்ததைப்போல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அப்போது அமெரிக்காவில் நான்கு அமெரிக்கர்கள் சேர்ந்துவிட்டால் கொஞ்சம் சரக்கைப்போட்டுவிட்டு துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு ஒரு காரில் கிளம்புவார்கள். கண்ணில் தெரிகிற கறுப்பின மக்களை சுட்டுவிட்டு உற்சாகமாய் திரும்புவார்கள். அவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவே. இப்படி துரத்தி துரத்தி அடித்தால் என்னே ஆகும் ரஸ்யா டுடே தொலை காட்சியில் மேட் இன் அமெரிக்கா  பாருங்கள். தெரியும்.

இதே நிலையில்தான் இன்று ஈழத்தில் வாழும் தமிழன் இருக்கிறான். சிங்களனின் பொழுதுபோக்கிற்கு என்னவேண்டாலும் செய்யலாம் தமிழ் மக்களை. புலித்தடம் தேடி தொடரை படித்தபோது இப்படித்தான் தோன்றியது.

ஆனால் மகிந்த அரசு  கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொறிவதை பார்க்கலாம். தற்போதய இலங்கையில் புதிய கட்டுமானப் பணிகளுக்கு சீனா முழுக்க முழுக்க சீனா கூலிகளையே பயன்படுத்திவருகிறது. அப்போ இலங்கையில் மூன்றாவது இனம் ஒன்று உருவாகி விட்டது. எதிர்காலத்தில் சிங்களுனுக்கே தீவு சொந்தமில்லாமல் போனால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ஈழமும் தமிழக தமிழனும்

சினிமாக்காரர்கள் சொல்லாதவரை ஈழப்போராட்டம் எழுசியுராது இங்கு. தமிழகத்தில் என் இனம் சுய அறிவையும் ஆற்றலையும் தொலைத்துவிட்டது . விடுதலை பெற்று ஆண்டுகள் 70தை நெருங்கினாலும் தங்கள் விடியலுக்கான நட்சத்திரத்தை வெள்ளித்திரைகளுக்குள் தேடும் ஒரு சமுகத்தில் அங்கத்தினராக இருப்பது எவ்வளவு வேதனை.

எந்த ஒரு தன் எழுச்சியான போராட்டமும் இங்கு சாத்தியமில்லை. எல்லாத்துக்கும் கொஞ்சம் துட்டு இருந்தால் போதும் மச்சி என்கிற தன்னைப்போனி கலாச்சாரம் தான் சமகால தமிழகத்தின் பொதுவான அடையாளம்.

ஒரு இனம் வேரறுக்கப் பட்டபோது தமிழன் என்ன செய்திருக்கவேண்டும்? என்னிடம் தொலைபேசியில் வாக்கு கேட்ட ஒரு ஆசிரியர் எவ்வளவு நாட்களுக்குத் தான் சுட்டுக்கிட்டு இருப்பது ஒரு முடிவு வரவேண்டாமா? என்று அசால்டாக கேட்டார். இதுதான் அவர் கழகம் கண்ட முடிவா?

இன்னொரு தங்கையோ அவனுக நாட்டில பொய் அவங்களை எதற்கு எதிர்க்கணும் ? வாய மூடிட்டு இருக்கவேண்டியது தானே ? என்றார். இவர்களுக்கு சிங்களனே மேல் என்கிற என்னத்தை விட இவர்களின் அறியாமையை என்ன சொல்வது?

இலங்கை இந்தியாவின் நீட்சிதான். சாதாரண பூகோளம் படிதவருக்கே இது புரியும். காலத்தின் ஒரு குறும்பு புன்னகையில் அவர்களுக்கும் நமக்கும் இடையே கடல். தமிழகத்தின் பூகோள பகுதிதான் இலங்கை. கடல் வந்து நம்மை பங்காளிகள் ஆக்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்தியா ஒரு தீவாக இருந்த காலமும் உண்டு. இப்படி எதுவுமே தெரியாமல் இலங்கை சிங்களனின் நாடு என்பது முட்டாள்தனம். இந்த முட்டாள்தனம்தான்  பெரும்பான்மை தமிழக தமிழரின் மனநிலை.

வாக்குரிமையை அதன் அருமை தெரியாதோருக்கு அளித்ததன் விளைவு தான் தற்போதைய சுயநல அரசியலுக்கு விதை. எந்த நாட்டிலும் அனைவருக்கும் வாக்கு என்பது ஒரு இரவில் கொடுக்கப்படவில்லை. இங்கே நம்மவர் அதை செய்தனர்.

இப்படி தமிழக அரசியல் சமுக சூழல் பல்வேறு தளங்களில் புனரமைக்கப்பட வேண்டியிருக்கிறது. வாக்களர் விழிப்புணர்வு அதில் முக்கியமான ஒன்று. நமது தலைவர்கள் உழல்வாதிகள் என்றால் அவர்களை தேர்ந்தடுக்கும் நாம்?
நமது தலைவர்கள் சாதிவெறியர்கள்  என்றால் அவர்களை தேர்ந்தடுக்கும் நாம்? நமது குறைபாடுகளின் மெகா சைஸ் சமுக உருவகங்கள் தான் நமது தலைவர்கள்.

தமிழர்கள் வித்தியாசமானவர்கள் தங்கள் முதுகை சொரிய அவர்கள் கொள்ளிக்கட்டையை தவிர வேறு எதையும் பயன்படுத்த மாட்டார்கள்.

பொதுவாகவே நாம் ஒரு பெரிய சமுக மாற்றத்தில் இருக்கிறோம். ஒருகாலம் இருந்ததது. அப்போது செயல்பாடுகள் நல்லதா கெட்டதா என்று ஆராயப்பட்டு செயல்படுத்தப்பட்டன. இப்போது லாபமா நட்டமா என்றுமட்டுமே கணக்குப்போட்டு வாழ்கிறோம்.

ஈழத்தில் எவள் வல்லுறவுக்கு ஆளானாலும் நமக்கென்ன  நட்டம்?


ஆறுதல்கள் 
இளய தலைமுறை மட்டும் சற்று ஆறுதல் தருகிறது. ஈழம் குறித்து செய்தித்தாட்கள் மறந்தாலும் முகநூலும், வலைப்பூக்களும்,  ட்வீட்களும் மறக்கவே இல்லை என்பதே என்னுடய ஒரே ஆறுதல். இதில் பெருவாரியான பேர் தமிழகத்திலும் இருப்பதே சற்று கூடுதல் ஆறுதல்.




Comments

  1. இதயம் தொட்ட தொடக்கம் முதல் இறுதியாய் கூறிய ஆறுதல்கள் வரை அனைத்தும் அருமையான வரிகள். தமிழன் தன் சுயத்தை அறிய ஒரு தூண்டுகோல் (சினிமாக்காரன்) தேவை எனும் நிலை சற்று சிந்திக்கவைக்கிறது. உண்மையை தாங்கிய வரிகள் இன்றைக்கு அவசியமான வரிகளும் கூட...

    ReplyDelete

Post a Comment

வருக வருக