திடீரென்று டாம் க்ரூஸ் ஜாக் ரீச்சர் அவதாரம் எடுத்திருக்கிறார். முதலில் ஜாக் ரீச்சர் யாரு?
லீ சைல்ட் என்கிற புனைபெயரில் எழுதி வரும் ஜிம் கிராண்டின் ஹிட் நாவலின் முதல் திரையாக்கம்தான் ஜாக் ரீச்சர்.
டொப், டொப் என்று ஐந்து நபர்களை போட்டுத்தள்ளி படம் ஆரம்பிக்கிறது. பல்வேறு ஸ்னைப்பர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் துப்பறிகிற தளத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஹலோ வெயிட் அது என்ன ஸ்னைப்பர் படம்? என்று கேட்பவர்களுக்கு ஸ்னைப்பர் என்பவன் ஒரு ராணுவ பயிற்சி பெற்ற துப்பாக்கி நிபுணன். இராணுவத்தில் எல்லாரும் தான் துப்பாக்கி பயிற்சி எடுக்கிறார்கள் அப்போ எல்லோருமே ஸ்னைப்பரா?
ஸ்னைப்பர் ஒரு துப்பாக்கி நிபுணன். மிக நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக அடிப்பதில் கில்லி. சும்மா டிரிக்கர் ஹாப்பி வீரன் அல்ல. இதற்கான நீண்ட பயிற்சியை எடுத்தவன். பயிற்சி புவியீர்ப்பு விசையின் தாக்கம், புவியின் கோள அமைப்பு, மூச்சு பயிற்சி மணிக்கணக்கில் ஒரே இடத்தில் சிந்தனையை சிதறவிடாமல் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்திருப்பது என பல தளங்களை கொண்டது. அப்புறம் மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இலக்கை அடிப்பது சாதாரண விஷயமா?
சரி சரி படத்தை பத்தி சொல்லுங்க என்பவர்களுக்கு, ஒரு மனநோய் பாதிப்பில் யாரோ ஒரு ஸ்னைப்பர் ஒரு ஐந்து பேரை போட்டுதள்ளிவிட்டான் என்பதுபோல செட்பண்ணி, அந்தக் கொலையையும் ஒரு ராணுவ ஸ்னைப்பர் மேல் விழுவது மாதிரி ஜோடிக்கிறது ஒரு கும்பல்.
பாதிக்கப்பட ராணுவ மேஜர் ஜேம்ஸ் பார், நான் குற்றவாளியல்ல, ஜாக் ரீச்சரை கூப்பிடுங்கள் என்கிறான். லூசுமாதிரி ரோட்டல போற ஐந்துபேரை கொன்றுவிட்டான் என நம்பும் சக கைதிகள் அவனை நையப் புடைக்கிரார்கள். யாரோ ஒரு அழகியோடு இருக்கும் ஜாக் ரீச்சர் இதனை தொலைக்கட்சியில் பார்த்தமாத்திரத்தில் நீண்ட தொலைவு பயணித்து காவல்துறை அதிகாரிகளை பார்க்கிறான்.
ஆனால் ஜாக் கொலைப்பழி சாட்டப்பட்ட ஜேம்ஸ் மீது கோபத்தில் இருக்கிறான். ஜேம்ஸ் இராணுவத்தில் சும்மா ஒரு ஐந்து பேரை போட்டுத்தள்ளிவிட்டு அரசியல் பண்ணி வெளியில் வந்துவிடுகிறான். ஜாக் இன்னொரு முறை இது நடந்தால் உன்னை கொன்றுவிடுவேன் என்று சொல்கிறான். ஜாக்கிற்கு சட்டம் சம்பிரதாயம் எல்லாம் ஒன்றுமில்லை. ஐயா அப்போ அப்போ பட்டு பட்டுன்னு தீர்ப்பு சொல்லி அதை அய்யாவே செயல்படுதிவிடுவார்.
குற்றம் நடத்த இடத்திலிருந்து ஒவ்வொரு இடமாக நூல்பிடித்து குற்றவாளியை நெருங்குவது அருமை, குறிப்பாக கடைசி காட்சியில் தன்னுடைய கூட்டாளி லாயரை கும்பல் பிடித்துவிட்டது தெரிந்தததும் டாம் க்ருஸ் நடத்தும் தொலைபேசி உரையாடல் அருமை. ஹலோ நம்ம கேப்டன் பாணியில் நாற்பது நிமிடத்திற்கு பேசல, மூன்று தொடர் கால்கள் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் தான் அனால் பார்க்க அருமை. ஆடியன்ச அப்டியே ஈர்த்துக்கொள்ளும் காட்சிகள் அவை. அவள எதாவது செஞ்சே உன்னை அடித்தே கொன்று உன்னுடைய இரத்தத்தை குடிப்பேன் என்பது ஒரு வசனம்.
காவல் துறை எப்படி மாபியாக்களால் சீர்கெட்டிருக்கிறது என்று காட்டும் போது, எல்லா ஊரிலும் மனிதர்கள் மனிதர்கள் தான் என்பதை உணர்த்துகிறது.. குறிப்பாக நீதிமன்றத்திலேயே, நீதிபதியின் மகளான கதாநாயகியை கடத்தும் போது எல்லா ஊரிலும் இப்படித்தான் என்ற ஆயாசம் ஏற்படும்.
எல்லாரும் ஜாக் ரீச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தின் திரை வடிகாலாகவும் இப்படம் இருக்கிறது. நீதி இருந்தா தண்டனை கொடு. ரொம்ப இழுக்காதே. ஒரு தபா பாக்லாம் நைனா.
பிற்சேர்க்கை :
படத்தின் வெளியீட்டை டாம் க்ருஸ் சாண்டி ஹூக் நிகழ்வினை தொடர்ந்து சற்று தள்ளி வைத்து வெளியிட்டார். ஆனால் படம் அதே போன்ற இன்னொரு நிகழ்வினை உருவாகும் வல்லமை வாய்ந்தது என்பதை மறுக்கமுடியாது.
சாண்டி ஹூக்னா என்ன என்பவர்களுக்கு சும்மா கிளிக் பண்ணுங்க.
படத்தின் குழு
நட்சத்திரங்கள்
டாம் க்ருஸ்
ரோஸ்மண்ட் பைக்
ரிச்சர்ட் ஜென்கின்ஸ்
டேவிட் ஓயாலோவ்
வெர்னர் கேர்சார்க்
ஜெய் கார்டனி
விளாடிமிர் சிசோ
ஜோசப் சிகொரோ
மைகேல் ரெமண்ட் ஜேம்ஸ்
அலக்சியா பாஸ்ட்

ஜாக் ரீச்சர் ஆறடி ஐந்துஅங்குலம், கடிகாரத்தை பார்க்காமலே தனது உடல் கடிகாரத்தை வைத்தே நேரத்தை சொல்லக்கூடிய திறன், அப்பர் கட், முழங்கை அடி, மண்டையால் மோதுவதில், தெருச்சண்டையில் எக்ஸ்பெர்ட். ஒரு ராணுவ விசாரணை அதிகாரி, என கொஞ்சம் ஆர்வத்தைக்கிளரும் மர்ம மனிதன். காரோ, லைசென்சோ கிடையாது. பஸ் மட்டுமே இவரது ஒரே வாகனம். எங்கேயாவது சுமாரான ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, சுமாரான லாட்ஜில் தங்குவது இவரது வழக்கம். ஒரு இடத்தில் நிலையாக இருப்பதும் கிடையாது.
இந்த திரைப்படம் ஒன் ஷாட் என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. ஆறடி கதாநாயகனுக்கு டாம் க்ருஸ் கொஞ்சம் எசகு பிசகாக செட் ஆகிறார். ஆனாலும் லீ சைல்ட் எனது கதாநாயகனின் 100 சதவிகிதத்தை டாம் க்ரூஸ் கொண்டுவந்துவிட்டார் என்று மகிழ்ந்திருக்கிறார். அப்பறம் பார்க்கிற நமக்கென்ன ?
படத்தின் ஆரம்பத்தில் துப்பாக்கியின் தொலைநோக்கி வழியே நாமும் பார்க்கும்போது என்ன நடக்கபோகிறது என்று பதறுகிறோம். ஆமா சும்மா ரோட்ல போற எல்லாரையும் குறிவைத்தால் எப்படி இருக்கும்?
டொப், டொப் என்று ஐந்து நபர்களை போட்டுத்தள்ளி படம் ஆரம்பிக்கிறது. பல்வேறு ஸ்னைப்பர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் துப்பறிகிற தளத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஹலோ வெயிட் அது என்ன ஸ்னைப்பர் படம்? என்று கேட்பவர்களுக்கு ஸ்னைப்பர் என்பவன் ஒரு ராணுவ பயிற்சி பெற்ற துப்பாக்கி நிபுணன். இராணுவத்தில் எல்லாரும் தான் துப்பாக்கி பயிற்சி எடுக்கிறார்கள் அப்போ எல்லோருமே ஸ்னைப்பரா?
ஸ்னைப்பர் ஒரு துப்பாக்கி நிபுணன். மிக நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக அடிப்பதில் கில்லி. சும்மா டிரிக்கர் ஹாப்பி வீரன் அல்ல. இதற்கான நீண்ட பயிற்சியை எடுத்தவன். பயிற்சி புவியீர்ப்பு விசையின் தாக்கம், புவியின் கோள அமைப்பு, மூச்சு பயிற்சி மணிக்கணக்கில் ஒரே இடத்தில் சிந்தனையை சிதறவிடாமல் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்திருப்பது என பல தளங்களை கொண்டது. அப்புறம் மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இலக்கை அடிப்பது சாதாரண விஷயமா?
சரி சரி படத்தை பத்தி சொல்லுங்க என்பவர்களுக்கு, ஒரு மனநோய் பாதிப்பில் யாரோ ஒரு ஸ்னைப்பர் ஒரு ஐந்து பேரை போட்டுதள்ளிவிட்டான் என்பதுபோல செட்பண்ணி, அந்தக் கொலையையும் ஒரு ராணுவ ஸ்னைப்பர் மேல் விழுவது மாதிரி ஜோடிக்கிறது ஒரு கும்பல்.
பாதிக்கப்பட ராணுவ மேஜர் ஜேம்ஸ் பார், நான் குற்றவாளியல்ல, ஜாக் ரீச்சரை கூப்பிடுங்கள் என்கிறான். லூசுமாதிரி ரோட்டல போற ஐந்துபேரை கொன்றுவிட்டான் என நம்பும் சக கைதிகள் அவனை நையப் புடைக்கிரார்கள். யாரோ ஒரு அழகியோடு இருக்கும் ஜாக் ரீச்சர் இதனை தொலைக்கட்சியில் பார்த்தமாத்திரத்தில் நீண்ட தொலைவு பயணித்து காவல்துறை அதிகாரிகளை பார்க்கிறான்.
ஆனால் ஜாக் கொலைப்பழி சாட்டப்பட்ட ஜேம்ஸ் மீது கோபத்தில் இருக்கிறான். ஜேம்ஸ் இராணுவத்தில் சும்மா ஒரு ஐந்து பேரை போட்டுத்தள்ளிவிட்டு அரசியல் பண்ணி வெளியில் வந்துவிடுகிறான். ஜாக் இன்னொரு முறை இது நடந்தால் உன்னை கொன்றுவிடுவேன் என்று சொல்கிறான். ஜாக்கிற்கு சட்டம் சம்பிரதாயம் எல்லாம் ஒன்றுமில்லை. ஐயா அப்போ அப்போ பட்டு பட்டுன்னு தீர்ப்பு சொல்லி அதை அய்யாவே செயல்படுதிவிடுவார்.
குற்றம் நடத்த இடத்திலிருந்து ஒவ்வொரு இடமாக நூல்பிடித்து குற்றவாளியை நெருங்குவது அருமை, குறிப்பாக கடைசி காட்சியில் தன்னுடைய கூட்டாளி லாயரை கும்பல் பிடித்துவிட்டது தெரிந்தததும் டாம் க்ருஸ் நடத்தும் தொலைபேசி உரையாடல் அருமை. ஹலோ நம்ம கேப்டன் பாணியில் நாற்பது நிமிடத்திற்கு பேசல, மூன்று தொடர் கால்கள் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் தான் அனால் பார்க்க அருமை. ஆடியன்ச அப்டியே ஈர்த்துக்கொள்ளும் காட்சிகள் அவை. அவள எதாவது செஞ்சே உன்னை அடித்தே கொன்று உன்னுடைய இரத்தத்தை குடிப்பேன் என்பது ஒரு வசனம்.
காவல் துறை எப்படி மாபியாக்களால் சீர்கெட்டிருக்கிறது என்று காட்டும் போது, எல்லா ஊரிலும் மனிதர்கள் மனிதர்கள் தான் என்பதை உணர்த்துகிறது.. குறிப்பாக நீதிமன்றத்திலேயே, நீதிபதியின் மகளான கதாநாயகியை கடத்தும் போது எல்லா ஊரிலும் இப்படித்தான் என்ற ஆயாசம் ஏற்படும்.
எல்லாரும் ஜாக் ரீச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தின் திரை வடிகாலாகவும் இப்படம் இருக்கிறது. நீதி இருந்தா தண்டனை கொடு. ரொம்ப இழுக்காதே. ஒரு தபா பாக்லாம் நைனா.
பிற்சேர்க்கை :
படத்தின் வெளியீட்டை டாம் க்ருஸ் சாண்டி ஹூக் நிகழ்வினை தொடர்ந்து சற்று தள்ளி வைத்து வெளியிட்டார். ஆனால் படம் அதே போன்ற இன்னொரு நிகழ்வினை உருவாகும் வல்லமை வாய்ந்தது என்பதை மறுக்கமுடியாது.
சாண்டி ஹூக்னா என்ன என்பவர்களுக்கு சும்மா கிளிக் பண்ணுங்க.
படத்தின் குழு
நட்சத்திரங்கள்
டாம் க்ருஸ்
ரோஸ்மண்ட் பைக்
ரிச்சர்ட் ஜென்கின்ஸ்
டேவிட் ஓயாலோவ்
வெர்னர் கேர்சார்க்
ஜெய் கார்டனி
விளாடிமிர் சிசோ
ஜோசப் சிகொரோ
மைகேல் ரெமண்ட் ஜேம்ஸ்
அலக்சியா பாஸ்ட்
Comments
Post a Comment
வருக வருக