விக்டோரியா சாடோ-ஆதர்ச ஆசிரியை

அமெரிக்காவில் வழக்கம்போல் இன்னொரு அதிர்ச்சி கனடிக்கட் பள்ளியில் துப்பாக்கிசூடுஆடம் லான்சா கொஞ்சம் மறைகழண்ட _____ (கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்துகொள்ளவும்) துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கனைடிக்கட் பள்ளியில் 26 பெயரை சுட்டு காலி பண்ணியிருக்கிறான்.சம்பவம் நடந்த அன்று (14/12/12, வெள்ளி ) காலை வீட்டில் தனது அம்மாவை முதலில் காலிசெய்துவிட்டு செமி ஆட்டோமாடிக் ரைபில் ஒன்றை எடுத்துக்கொண்டு சாண்டி ஹூக் துவக்கப் பள்ளிக்குள் நுழைந்து  வெறியாட்டம் போட்டு தன்னை தானே சுட்டுக்கொண்டு செத்து போயிருக்கிறான்.

மனம் ஆறா சோகம்


உயிராபத்தில் தலை தெறிக்க ஓடுவதுதான் வழக்கம். ஆனால் இப்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களை ஒரு அலமாரிக்குள் ஒளித்து வைத்து ஆடமை திசை திருப்பியிருக்கிறார். ஒளித்து வைக்கப்பட்ட 7 மாணவர்கள் திடீரென ஓட அவர்களை பலமுறை சுட்டு விக்டோரியா சாடோ என்கிற அந்த 27 வயது ஆசிரியையும் கொன்றிருக்கிறான். அலமாரியில் மிச்சம் இருந்த 6
மாணவர்கள் சொன்னது இது.


நிகழ்வின்  உளவியல் காரணங்கள்

1, நீண்ட நேர கொடூர கணிப்பொறி விளையாட்டு
சிறார்களின் மனதை சிதைத்து, அவர்களின் சுய சிந்தனையை வீணாக்கும் பல கொடூர கணிப்பொறி விளையாட்டுக்களின் விளைவுதான் இது. சம்பவத்தில் ஈடுபட்ட ஆடம் பலமணிநேரம் இந்த விளையாட்டுக்களை விளையாடுவது வழக்கம். அனேகமாக இது தொடர்பான பிரச்சனயில்தான் தன்னுடைய தாயை கொன்றிருக்கவேண்டும்.  வங்கியை கொள்ளை இடுவதில் இருந்து கொடூரமான  கொலைகளை செய்ய பயிற்சியளிக்கும் எராளமான அமரிக்க கணிப்பொறி விளையாட்டுக்கள் தான் இதற்க்கு காரணம். கார் ரேஸ் விளயாடும் உங்கள் மகனிடம் ஸ்டீரிங்கை கொடுங்கள் தெரியும்.

2. வைரஸ் நிகழ்வு
ஒரு நிகழ்வினை தொடர்ந்து அதே போல் நடக்கும் நிகழ்வுகள் வைரஸ் நிகழ்வுகள். மீடியாக்கள் தொடர்ந்து இந்த விஷயத்தை பேசி தங்களை அறியாமல் பல ஆடம்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. இந்த நிகழ்வினை பார்த்துக்கொண்டிருக்கும் பலகோடி இளம் சிறுவர்களின் மனங்களில் இது ஆழப் பதிகிறது. காலமும் சூழலும் சரியான விசையை இழுக்கும் பொது ஒரு கொடுரம் நிகழ்கிறது.

ஆசிரியை உமாவின் கொலைக்குப்பின் தென்மாவட்டத்தில் பாண்டியராஜ் என்கிற ஆசிரியர் மீது நடந்த தாக்குதல் தமிழகத்தில் இரண்டாவது சம்பவம். இச்சம்பவம் வைரஸ் நிகழ்வாக்கப் பட்டால் இங்கேயும் இச்சம்பவங்கள் தொடர வாய்ப்புண்டு. ஏற்கனெவே கணிப்பொறி விளையாட்டுக்கள் வந்தகிவிட்டதும் ரத்தம் தெறிக்கும் திரைப்படங்களும் மானசீகமாக இந்த கலாச்சாரத்தை வளர்த்துவைத்திருக்கின்றன.

ஆசிரியர்கள் பிரச்சனைக்குரிய மாணவர்களை சரியாக அடையாளம் கண்டு அவர்களை கனிவுடன் அணுகுவதே இப்போதைய தீர்வு. நீண்டகால தீர்வாக குறைந்தபட்சம் 5 பள்ளிகளுக்கு ஒரு முழுநேர அற்பணிப்புள்ள ஆலோசகர் நியமனம் செய்யப்படவேண்டும்.

பணத்தை துரத்தும் சமகால வாழ்வியல் முறைக்கு சிறிது விடுப்பு கொடுத்துவிட்டு குழந்தைகளுக்காக  சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும் பெற்றோர்கள். உணர்வுகளை அறிமுகப்படுத்தியும் அவற்றை கையாளவும் குழந்தைகளை பழக்குவதே நிரந்தர தீர்வு. 

சோகத்தின் சுவடுகள்
நினைவஞ்சலி

Emily Parker எமிலி  பார்கர் பலியான சிறுமிகளில் ஒருவர்

கதறி அழும் ஜூலி சாட்டோ -சகோதரி

விக்டோரியா சாடோ

பாதிப்பிற்கு காரணமான ஆடம் லான்சா 
ஆடமிற்கு தனக்கு ஏற்படும் வலியை உணரமுடியாத ஒரு பிரச்சனை இருந்திருக்கிறது . மேலும் அம்மா நான்சி லான்சா ஒரு துப்பாக்கி ஆர்வலர். நான்சி ஆடமை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு அடிக்கடி அழைத்து செல்வது உண்டாம். நான்சி வீட்டில் நிறைய துப்பாக்கிகளை சேகரித்து வைப்பதை ஒரு பொழுதுபோக்காக செய்தவர். இவரது ஒரு துப்பாக்கி தான் சம்பவத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
விக்டோரியா சாடோ


விக்டோரியா சாடோ

Comments