ஒரு கேரள சாதனை

கேரளா சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளது.  இந்த ஆண்டு கூகுளில் அதிகம்பேர் தேடியது கேரளாவைத்தான். மேற்குதொடர்ச்சி மலைகளும் மூனாறு மலை வாசஸ்தலமும் கூகுளின் டாப் டென் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.

கேரள அரசின் சுற்றுலாத்துறை குறிப்பின்படி கேரளா முதல் இடத்திலும் தாஜ் மஹால் இரண்டாம் இடத்திலும் வாகா எல்லை மூன்றாம் இடத்திலும் அடுத்த இடத்தில வைஷ்ணவ தேவி கோவில் மற்றும் அமர்நாத் கோவிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

கூகிள் தேடல் ஆய்வு முடிவுகளின் படி மூனாறு சுற்றுலாப் பயணிகளின் தேடுதலில் ஒன்பதாம் இடத்தில இருப்பதாக கூறுகிறது.

கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் எ பி அணில் குமார் கேரளா இணய சந்தைபடுத்துதலில் முன்னணியில் இருப்பதாக கூறினார். சமுக வலைகளையும் இனைய விளம்பரங்களையும் பயன்படுத்தி இந்த நிலைக்கு வந்ததாக கூறுகிறார்.

கேரளாவின் சுற்றுலாத்துறை இணையத்தளம் ஒவ்வொரு மாதமும் இரண்டரை லெட்சம் பார்வையாளர்களை கவர்வதாக குறிபிடுகிறார்.

தமிழகம் செய்யவேண்டியது என்ன

1. இணய சேவைகளை சரியாக பயன்படுத்துவதன் மூலம் புதிய சுற்றுலா பயணிகளை கவர்தல்.

2. வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்தல்.

3. சுற்றுலா மையங்களை உலகத்தரத்தில் நிர்வகித்தல்

4. ஆன்மீக சுற்றுலா மையமான பழனியை ஒழுங்காக பராமரித்தாலே திருப்பதிக்கு நிகராக வருவாய் ஈட்ட முடியும்.

பலகோடி ரூபாய்களை கொட்டிதரும் சுற்றுலாத்துறையை சரிவர பயன்படுத்  துவத்தின் மூலம் நாட்டின் சாபக்கேடான டாஸ்மார்க்கை மூடலாம்.



Comments