இன்று நாம் சுவாசிக்கும் காற்றிலும் இருக்கும் சில வீர ஆன்மாக்கள்
எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங்
நினைவில் வைப்போம் நாம் வந்த பாதைகளை
அந்தக் கடிதம் எழுதப் பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. தூக்குமேடையில் ஏறுவதற்கு இன்னும் 24 மணிநேரம் மட்டும் இருந்தபோது, மாவீரன் பகத்சிங், தன நண்பர்களுக்கு எழுதிய கடிதம் அது. சிறையிலிருந்து நீ தப்பிச் செல்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்யட்டுமா? என நண்பர்கள் கேட்ட கேள்வி,பகத்சிங்கை சிந்திக்க தூண்டியது. சிறையிலிருந்து தப்பிச் சென்று புரட்சிப் பணிகளில் ஈடுபடுவதா அல்லது தூக்குமேடையேறி வீர இளைஞர்களுக்கு முன்னோடியாவதா என்ற குழப்பம் பகத்சிங்கிற்கு ஏற்பட்டது. இறுதியில் தூக்கு மேடை ஏறுவதே விடுதலை போராட்டம் வீரியம் பெற உதவும் என முடிவெடுத்தார். அம்முடிவைத் தன் நண்பர்களுக்கு எழுதி, ரகசியமாகக் சிறைக்கு வெளியில் அனுப்பி வைத்தார்.
1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் எழுதப்பட்ட அக்கடிதம் - அதுதான் பகத்சிங்கின் கடைசிக் கடிதம் -லக்னோவிலுள்ள விடுதலைப் போராட்ட ஆய்வு மைய நூலகத்திலும் புதுதில்லியில் உள்ள தேசிய ஆவன காப்பகத்திலுமுள்ளது.
அந்தக் கடிதம், இப்படித் தொடங்குகிறது.
தோழர்களே,
உயிர் வாழும் விருப்பம் இயற்கையானது. எனக்குள்ளும் அது இருக்கிறது.
தன் எண்ணத்தை மறைத்துக்கொள்ள விரும்பாத நேர்மையோடு எழுத தொடங்கிய பகத்சிங், தான் ஏன் இந்த இயற்கையான விருப்பத்தையும் மீறி தூக்குமேடையேற விரும்புகிறார் என்பதைக் கடிதத்தின் பின்பகுதியில் விளக்குகிறார்.
புன்னகையோடு நான் தூக்குமேடையில் ஏறுவேனாகில், அந்நிலை, தங்கள் குழந்தைகளும் பகத்சிங்காக வேண்டுமென்ற எண்ணத்தை, இந்தியத் தாய்மார்களிடம் உருவாக்கும்.
இவ்வாறு நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்போரின் எண்ணிக்கை அளவிறந்து கூடும். அதற்கு பின்பு, புரட்சியின் வேகத்தை ஏகாதிபத்தியத்தால் எதிர்கொள்ள முடியாது. அவர்களின் வலிமையும் அரக்கத் தனமான முயற்சிகளும்கூட, முன்னெடுத்துச் செல்லும் புரட்சியைத் தடுத்துவிட முடியாது.
24 வயது இளைஞராக அன்றிருந்த பகத்சிங், இத்தனை தெளிவோடுதான், அடுத்த நாள் [23 - 3 - 1931] இரவு தூக்கு கயிற்றை முத்தமிட்ட வீர நிகழ்வு நடந்தேறியது. அன்று தூக்கிலிடப்பட்ட பகத்சிங் முதலான மாவீரர்கள் எவரையும் நாம் மீட்டெடுக்க முடியாது.
எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங்
நினைவில் வைப்போம் நாம் வந்த பாதைகளை
அந்தக் கடிதம் எழுதப் பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. தூக்குமேடையில் ஏறுவதற்கு இன்னும் 24 மணிநேரம் மட்டும் இருந்தபோது, மாவீரன் பகத்சிங், தன நண்பர்களுக்கு எழுதிய கடிதம் அது. சிறையிலிருந்து நீ தப்பிச் செல்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்யட்டுமா? என நண்பர்கள் கேட்ட கேள்வி,பகத்சிங்கை சிந்திக்க தூண்டியது. சிறையிலிருந்து தப்பிச் சென்று புரட்சிப் பணிகளில் ஈடுபடுவதா அல்லது தூக்குமேடையேறி வீர இளைஞர்களுக்கு முன்னோடியாவதா என்ற குழப்பம் பகத்சிங்கிற்கு ஏற்பட்டது. இறுதியில் தூக்கு மேடை ஏறுவதே விடுதலை போராட்டம் வீரியம் பெற உதவும் என முடிவெடுத்தார். அம்முடிவைத் தன் நண்பர்களுக்கு எழுதி, ரகசியமாகக் சிறைக்கு வெளியில் அனுப்பி வைத்தார்.
1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் எழுதப்பட்ட அக்கடிதம் - அதுதான் பகத்சிங்கின் கடைசிக் கடிதம் -லக்னோவிலுள்ள விடுதலைப் போராட்ட ஆய்வு மைய நூலகத்திலும் புதுதில்லியில் உள்ள தேசிய ஆவன காப்பகத்திலுமுள்ளது.
அந்தக் கடிதம், இப்படித் தொடங்குகிறது.
பகத் சிங், மாவீரன், இந்திய விடுதலைப் போர் |
தோழர்களே,
உயிர் வாழும் விருப்பம் இயற்கையானது. எனக்குள்ளும் அது இருக்கிறது.
தன் எண்ணத்தை மறைத்துக்கொள்ள விரும்பாத நேர்மையோடு எழுத தொடங்கிய பகத்சிங், தான் ஏன் இந்த இயற்கையான விருப்பத்தையும் மீறி தூக்குமேடையேற விரும்புகிறார் என்பதைக் கடிதத்தின் பின்பகுதியில் விளக்குகிறார்.
புன்னகையோடு நான் தூக்குமேடையில் ஏறுவேனாகில், அந்நிலை, தங்கள் குழந்தைகளும் பகத்சிங்காக வேண்டுமென்ற எண்ணத்தை, இந்தியத் தாய்மார்களிடம் உருவாக்கும்.
பகத் சிங், மாவீரன், இந்திய விடுதலைப் போர் |
24 வயது இளைஞராக அன்றிருந்த பகத்சிங், இத்தனை தெளிவோடுதான், அடுத்த நாள் [23 - 3 - 1931] இரவு தூக்கு கயிற்றை முத்தமிட்ட வீர நிகழ்வு நடந்தேறியது. அன்று தூக்கிலிடப்பட்ட பகத்சிங் முதலான மாவீரர்கள் எவரையும் நாம் மீட்டெடுக்க முடியாது.
Comments
Post a Comment
வருக வருக