அசுரர்கள் யார்?
மீண்டும் ஒரு மறுவாசிப்பு
நடந்தது என்ன?
இன்று?
________________________________________________________________________________
அருணன் அவர்களின் காலம் தோறும் பிராமணியம் ஒரு ஆழ்ந்த சமுக ஆய்வு பெட்டகம் எட்டு பாகங்களில் அடியேன் இப்போதுதான் முதல் பாகத்தின் 178 பக்கத்தில் இருக்கிறேன்.
சில ஆய்வாளர்கள் அசுரர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்றும், சில ஆய்வாளர்கள் அசுரர்கள் அஸ்ஸிரியாவில் இருந்து ஆரியர்களுக்கு முன்பே குடிவந்தவர்கள் என்றும் கருதுகிறார்கள்.
இவர்கள் ஏன் யாகங்களை சிதைக்கவேண்டும்?
யாகங்கள் ஒரு குறியீடு. ஒரு வனத்தில் யாகங்கள் நடந்தால் அது ஆரியருக்கு சொந்தமாகிவிடும்! அப்போ வனத்தின் பூர்வ குடிகள் வாயில் வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்களா?
எனவே அவர்கள் யாகங்களை சிதைத்தனர். சரியான திட்டமிடலோ வழிகாட்டலோ இல்லாததால் ஆரிய சூழ்ச்சிக்கு பலியாயினர் என்றே கருத வேண்டியிருக்கிறது.
பொதுவாகவே இந்தியாவில் நாகர்கள், அசுரர்கள் என பூர்வகுடிகள் இருந்துவந்தனர். இவர்களின் தோல்வியை இவர்களின் கலாச்சார அழிவை தீபாவளியாக கொண்டாடுகிறோம்.
மீண்டும் ஒரு மறுவாசிப்பு
சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்தின் போது தேவர்கள் எல்லாம் திருக்கயிலையில் கூடியதால் வடஇந்தியா தாழ்த்தும் தெற்கு உயர்ந்தும் போனதால் அகத்தியரை அனுப்பி சரி செய்ததை நாம் திரைப்படங்களில் நாடகங்களில் பாட்டி சொல்லும் பக்தி கதைகளில் கேட்டு பரவசப்படிருப்போம்.
நடந்தது என்ன?
வேதகாலத்தின் எழுச்சியில் பிராமணீயம் வடக்கே எழுச்சியுற்று இருந்தது. தெற்கே அப்படி இல்லை. பல்வேறு வழிபாட்டு முறைகள் இருந்திருக்கவேண்டும். ஆசுவகம் போன்ற மத வழிபாடுகள், கொற்றவை, கொற்றவையின் மகன் முருகன் வழிபாடு என பலவித வழிபாடுகளுக்கு வாய்பிருகிறது.
இவற்றையெல்லாம் பிராமணியப்படுத்தவும் ஆதிக் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டவும் வந்த பெருமகனார் அகத்தியர் என்கிற உண்மை இன்று யாருக்கு தெரியும்?
இதனுடய குறியீடுதான் வடக்கு தாழ்ந்ததும், அகத்தியரின் கமண்டலம் தெற்கை சமன் செய்தததும்.
குறியீட்டின்படி பார்த்தாலும் தெற்கு உயர்ந்திருந்தது என்பதை பிராமணியம் ஒப்புக்கொள்வதை பார்க்க வேண்டும்.
ஹும் ஒருகாலத்தில் உயர்ந்த இனமா தமிழ் இனம்?
இன்று?
________________________________________________________________________________
அருணன் அவர்களின் காலம் தோறும் பிராமணியம் ஒரு ஆழ்ந்த சமுக ஆய்வு பெட்டகம் எட்டு பாகங்களில் அடியேன் இப்போதுதான் முதல் பாகத்தின் 178 பக்கத்தில் இருக்கிறேன்.
Comments
Post a Comment
வருக வருக