சி செட் 12
நாளும் கோளும்
நலிந்தோர்க்கு இல்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்களுக்கில்லை
நீங்கள் படம் பார்க்க இன்னும் ஒரு காரணம் கிடைச்சுடுத்தா?
---------------------------------------------------------------------------------------------------------
முத்து நிலவன் ஐயாவிற்கான சேர்க்கை
திருத்தம் செய்யப்பட்டதை கவனித்திருப்பீர்
ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
பேராசிரியர் பாலா நினைவிற்குவந்து படுத்துகிறார். வலைப்பூக்களில் கவிஞர் பாலா உலா வந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம்தான்.
பாவம் மனிதர் எந்த இலக்கிய விழாவில் பார்த்தாலும் நீங்க என்ன எழுதியிருக்கீங்க என்று சீரியசாக கேட்டு எழுத்தை நோக்கி என்னை உந்தித்தள்ள முயற்சித்தவர்.
என்றாவது எனது எழுத்து சிறிய அங்கீகாரத்தை பெருமானால் அது கவிஞர் பாலா அவர்களுக்கே சமர்ப்பணம்.
நாளும் கோளும்
நலிந்தோர்க்கு இல்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்களுக்கில்லை
என்ற ரகளையான கந்தர்வனின் கவிதையோடு துவங்கியது இன்று. எசகு பிசகான மின் தடையால் பேசாம தூங்குவோமா என்று நினைத்துக்கொண்டிருந்தபோது செல்வராஜ் அழைத்து தம்பி விட்டோபா கோவிலில் விசேசம் அர்ச்சனை மந்திரத்தில் உன்னுடைய பெயரைக் கேட்டமாத்திரத்தில் உனக்கு அடிச்சேன். வந்து சாமி கும்பிட்டு போவேன் என்றார்.
வீட்டில் ஒரு லிஸ்டை நீட்டவும் வீட்டு வேலையை முடித்துவிட்டு குளித்து நேராக போன இடம் வழக்கம்போல் அய்யா கோவில்தான். அப்புறம் தான் விட்டோபா பெருமாள் கோவிலா? என்று கேட்காதீர்கள் போனது சிசெட்12. மிகச்சரியாக 11 மணிக்கெல்லாம் போய் ஆரன் அடித்து கதவை திறந்து முதல் ஆளாக உள்ளே போனேன்.
1980களில் நான் தா.சு.லு.ச மேல்நிலைப்பள்ளியில் இருந்தேன். ஆமாங்க பாஸ் நான் படித்தேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஜவஹர் அலி, ஸ்டாலின், ஷெரிப், பன்னீர் என்று நண்பர் பட்டாளங்களுடன் சிலாகித்து பேசி ரசித்து வாழ்ந்த திரைப்படங்கள் ஜாக்கியின் திரைப்படங்கள் தான்.
ஜாக்கி எங்கள் தலைமுறையின் ஆதர்சம். ஜாக்கி, சாமோ ஹங் என்று சிலாகித்து பேசிக்கொண்டிருப்போம். அந்த நாட்களில் ஜாக்கி புதுக்கோட்டையின் ஒவ்வொரு மூலையிலும் அறிமுகமாகியிருந்தார். எங்கெங்கும் ஜாக்கி பேச்சுதான். ஸ்நேக் இன் தி ஈகிள்ஸ் சாடௌ, ஆர்மர் ஆப் காட் 1,2, தி ப்ரோடக்டர், தி யங் மாஸ்டர் என வரிசையாக ஜாக்கி வெற்றிமேல் வெற்றியாக குவித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது.
சொல்லப்போனால் சென்னையில் வெளியிடப்பட்ட திரைப்படங்களின் முதல் காட்சிகளின் போது ரசிகர்கள் சில்லறைக் காசுகளை திரைநோக்கி வீசுவது சகஜம். ஆஸ்கார் ரவியின் மூலம் இதன் வீடியோ பதிவை பார்த்து ஜாக்கீயே வியந்தத்துண்டு.
அப்படி ஜாக்கியை ரசிக்கும் நான் சி செட் 12 மிஸ்பண்ணுவேனா? பகலிலேயே கொசுகடிக்கும் தியேட்டர் என்றாலும் வேறு வாய்ப்பில்லாததால் சகித்துக்கொண்டு பார்த்தேன்.
டைட்டிலுக்கு முன்வரும் ஆக்சன் ப்ளாக் அறுபத்தெட்டு வயதில் ஜாக்கி எப்படி இப்படி? ஏ அப்பா! உடல் முழக்க சக்கரங்களுடன் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சறுக்கி அடிக்கும் சாகசம் ஒன்றே போதும் ஜாக்கி ரசிகர்களுக்கு.
அப்புறம் எல்லாம் அசல் ஜாக்கி ஆக்சன் தான். உலகில் வேறு யாரும் பண்ண முடியாத திரைசாகசங்கள். இந்த காட்சிகளை எப்படி கற்பனை செய்திருப்பார்கள்?
சி செட் 12 இல் சீனாவிற்கு சொந்தமான சோடியாக் தலைகளை கண்டுபிடித்து அவற்றை ஆட்டய போடும் ஹை டெக் திருடனாக வந்து அசத்துகிறார் . அவரது குழு அவருக்கு உதவுகிறது.
வெறும் கையுறைகளாலேயே சிலைகளை ஸ்கேன் செய்து அவற்றின் மாதிரியை உருவாக்குவது, அதற்கான தொழில்நுட்ப கருவிகள் எல்லாம் ஜோர். 3டி பிரிண்டிங் வந்துதான் ரொம்ப நாள் ஆச்சே.
ஒரு மரத்திலிருந்து விரைந்து தவழ்ந்து இறங்கும் ஜாக்கி நம்பவே முடியாத உடலியல் விற்பன்னர். எல்லா தொழில் நுட்பமும் நமக்கும் தெரியும் ஆனால் நம்ம ஆட்கள் இறங்கினால் கயித்த கட்டி இறங்குவது அப்பட்டமாய் தெரியும்.
திரைப்படம் பார்த்தபோது எவ்வளவு சந்தோசமாக இருந்ததோ அவ்வளவு தடவை எனது குழந்தைகளை அழைத்துவராதற்காக வருந்தினேன்.
எல்லா காட்சிகளும் அப்படியே ஊகிக்க முடிவதுதான் கொஞ்சம் உறுத்துது. அப்படியே இருந்தாலும் இந்த அளவிற்கு ஆக்சன் யார் செய்வா? என்ற கேள்விக்குமுன் அடிபட்டு போய்விடுகிறது.
அதெல்லாம் சரிப்பா அதென்னெ சி செட் 12 என்று கேட்பவருக்கு மட்டும் அது சைனீஸ் சோடியாக் 12.
சில காட்சிகள் ஆழமான பதிவை விடக்கூடிய சாத்தியம் அதிகம். குறிப்பாக விரைகின்ற சொகுசு போட்டில் பின்பக்க பிளாட்பார்மில் அலைகளின் பின்னணியில் ஜாக்கி நிற்பதும் அப்படியே காட்சி டிசால்வ் ஆவதும் ஒரு கிரேட் விசுவல் ட்ரீட்.
குறிப்பாக விண்ணில் பறக்கிற அந்த இறுதிக்கட்டம், வாவ். காட்சிகள் அனைத்தும் ஒரு செங்குத்தான காற்று துளையில் எடுக்கப் பட்டிருந்தாலும் பார்க்க அருமையாக இருக்கிறது. குறிப்பாக எரிமலையில் உருண்டு எழும் ஜாக்கி காட்டும் முகபாவங்கள் அழுகையை வரவைக்கும். கண்ணின் கருவிழிகளை கூட சுழற்றி பிரித்து பார்ப்பவர்களை பகீர் படுத்துகிறார்கள்.
இரண்டு கின்னஸ் சாதனைகளை படம் ஆக்சன்களுக்காக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்புறம் வசனங்கள், தமிழில் எழுதிய கரங்களுக்கு வைர மோதிரமே போடலாம். சமகால திரைப்பட வசனங்களை நடு நடுவே பயன்படுத்தியிருப்பது காமடி கலாட்டா.
ஒரே வரியில்
ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவரும் பார்க்க தகுதியுள்ள படம்.
குழந்தைகள் அவசியம் பார்க்கவேண்டிய காமடி ஆக்சன் படம்.
ரசிகர்களுக்காக
இன்னும் கொஞ்சம் ஜாக்கி
ஜாக்கி சிறிய வயதில் தர்மத்திற்கு கூழ் ஊற்றும் வேனில் வரிசையில் நின்று கூழ் வாங்கி குடித்தவர். ஆர்மர் ஆப் காட் பட விபத்தின்போது மரணத்தை தொட்டு திரும்பிய சில நாட்களில் ஒரு அறக்கட்டளையை நிறுவி நிறைய குழந்தைகள் நல சமூக நல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது சற்றே சிந்திக்க வைக்கும் விசயம்.
நீ ஏழையாக பிறப்பது தவறல்ல ஏழையாக சாவதுதான் உன் தவறு, என்கிற வாசகம் தான் நினைவிற்கு வருகிறது.
நீங்கள் படம் பார்க்க இன்னும் ஒரு காரணம் கிடைச்சுடுத்தா?
---------------------------------------------------------------------------------------------------------
முத்து நிலவன் ஐயாவிற்கான சேர்க்கை
திருத்தம் செய்யப்பட்டதை கவனித்திருப்பீர்
ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
பேராசிரியர் பாலா நினைவிற்குவந்து படுத்துகிறார். வலைப்பூக்களில் கவிஞர் பாலா உலா வந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம்தான்.
பாவம் மனிதர் எந்த இலக்கிய விழாவில் பார்த்தாலும் நீங்க என்ன எழுதியிருக்கீங்க என்று சீரியசாக கேட்டு எழுத்தை நோக்கி என்னை உந்தித்தள்ள முயற்சித்தவர்.
என்றாவது எனது எழுத்து சிறிய அங்கீகாரத்தை பெருமானால் அது கவிஞர் பாலா அவர்களுக்கே சமர்ப்பணம்.
ஐயா சாமி,
ReplyDelete“நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை
ஞாயிற்றுக் கிழமையும பெண்களுக் கில்லை” எனும் ரகளையான வரி பிரபஞ்சனுடையதில்லை, நம்ம ஊர் கவிஞர் கந்தர்வனுடையது. “கந்தர்வன் நினைவுக் கலை இரவு” விளம்பரங்களில் அதை விளம்பரப் படுத்தியதில் எனக்கும் சிறு பங்குண்டு.
உங்கள் “ஒருநாள் டைரி” சுவாரசியமாகத் தொடங்கிப் பழைய கதைகளில் முழுகி மறைந்தே போனது, டைவர்ட் ஆகாமல் எழுதினால் இன்னும் நல்லது.. எப்படியோ தினமும் எழுதுங்க.. நல்லாருங்க.