ஈமிஸ் தேவையா?


பறந்து பறந்து அத்துணை மாணவர் விவரத்தையும் படபடப்பாய் பதிவேற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளுடன் துவங்குவோம்.

இது தேவையா?

ஆணையிட்டால் செய்துதானே ஆகவேண்டும்? ஆகவே இந்தக்கேள்வி தேவையற்றது.

டேட்டா பேஸ் பற்றி தெரிந்தால் இந்தப் பணியின் அவசியம் புரியும்.

ஒரு ஆய்வுக்காக உங்களுக்கு கீழ்க்கண்ட விவரங்கள் தேவைப்படுகிறது.


  1. தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பில் எத்துனை பெண்குழந்தைகள் படிக்கிறார்கள்?
  2. இவர்களில் அரசுப்பள்ளிகளில் படிப்பவர்கள் எத்தனைபேர்?
  3. இவர்களில் எத்துனை பேர் மாற்று திறனாளிகள்?


இப்படி ஒரு நூறு கேள்விகளுக்கு விடை வேண்டும் என தகவல் அறியும் சட்டத்தில் கேட்டாலே குறைந்த பட்சம் மூன்று முறையாவது வாய்தா கேட்ட பின்பே ஆறுமாதத்தில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதுவும் சந்தேகம்தான்.

ஆனால் இன்னும் ஒரு ஆயிரம் கேள்விகளுக்கு சில வினாடிகளில் பதில் தரலாம் என்றால் ஆச்சர்யமாக இல்லை, இதை சாத்தியப்படுத்துவது இந்த ஈமிஸ்.

இதன் மூலம் திட்டமிடல் நூறுசத துல்லியத்துடன் நடக்கும். செயல்படுத்துதலும் அவ்வாறே.

மேலும் ஒரு பயன் 

கல்விசார் ஆய்வுகள் இனி மேம்படுவதுடன், இந்த மாபெரும் தகவல் தொகுப்பு ஒரு தங்க சுரங்கம். டேட்டா இஸ் கிங். பல நிறுவனங்கள் இந்த தகவல்களுக்காக பலகோடி கொடுக்கவும் தயாராக இருப்பார்கள்.

யோசிங்க பாஸ். 

திடீரென ஒரு பெரு நிறுவனம் ஒரு குளியல் சோப்பை கிராமங்களில் சந்தைப் படுத்த விழைகிறது என்றால் அனந்த நிறுவனத்திற்கு சந்தை பொருளாதார ஆய்விற்கு கூட ஈமிஸ் பயன்படும்!

அப்போ இதற்கான கட்டணத்தை செலுத்த அந்த நிறுவனம் தயாராகவே இருக்கும்.

Comments