பெரிய ஜவுளி மாளிகை

kasthuri rengan mathu www.malartharu.com www.malartharu.org pudukkottai tmail nadu சமீபத்தில் எங்கள் குடும்ப திருமணம் ஒன்றிற்காக இந்தியாவின் பெரிய ஜவுளி மாளிகை ஒன்றிற்கு செல்ல நேரிட்டது. அநேக கணவர்களைப் போலவே நானும் செலக்சனை அம்மணியிடம் தள்ளிவிட்டு குழந்தைகளுடன் கொஞ்சம் எங்காவது அமரலாம் என்றால் பல்பு கிடைத்ததுதான் மிச்சம்.

இந்தியாவின் பெரிய ஜவுளி மாளிகை வாடிக்கையாளர் அமர்வதற்கு இரண்டு இடங்களை மட்டுமே கொண்டிருந்தது. ஒன்று இரண்டாவது வாசலின் வெளியே இன்னொன்று வடக்குப் படியின் மடிப்பில் எண்ணி பத்து நாற்காலிகள். ஆகா என்னே நமது நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை என்று நினைத்துக்கொண்டு அமர்திருந்த வேலையில் தோன்றியவை. பட்டுப் பிரிவின் உள்ளே அமரலாம் என்றாலும் அது சில சங்கடங்களை தரலாம். பட்டு எடுக்கும் வரை அமரலாம் அப்புறம்?

இந்த நிறுவனத்திற்கு இலவசமாய் சில வருவாய் வழிகள் ப்ளஸ் சேவை நிறைவு ஆலோசனைகள், உங்கள் நிறுவனத்திற்கும் பயன்படலாம்..

 1. மொட்டை மாடியில் ஒரு குழந்தைகள் தீம் பார்க்!

kasthuri rengan mathu www.malartharu.com www.malartharu.org pudukkottai tmail nadu
எடை குறைவான பிளாஸ்டிக் சருக்கல் மற்றும் எடை குறைவான விளையாட்டுகள் கட்டணத்துடன் தருவது.

2. வீடியோ கேம் ஆர்கேட்.

3. வை பீ சேவை
kasthuri rengan mathu www.malartharu.com www.malartharu.org pudukkottai tmail nadu
ஒரு குறிப்பிட்ட பகுதியில் வை பீ சேவை வழங்குவது வருவாய், சேவை மற்றும் புதிய தலைமுறை வாடிக்கையாளர் திருப்தி எல்லாம் கிடைக்கும். தொழில் நுட்ப ஆலோசனையுடன் பொறுப்பாக பண்ண வேண்டிய சேவை இது.


4. சின்ன ஸ்நாக் பார்.

5. ட்ரேட் மில் 

கொஞ்சம் மெனக்கெடல் அவசியம், பெயரை தக்கவைக்க.

இதன் தொடர்பாக அமரிக்க கார் நிறுவனங்களின் மனப்பான்மை நினைவிற்கு வருகிறது.

kasthuri rengan mathu www.malartharu.com www.malartharu.org pudukkottai tmail nadu

சுமார் முப்பது வருடங்களுக்கு முன் ஜே டி பவர் நிறுவனம் அமரிக்க கார்கள் குறித்து ஒரு வாடிக்கையாளர் சர்வே ஒன்றை எடுத்து. முடிவுகளை தானே அந்த நிறுவனங்களுக்கு அனுப்பியும் வைத்தது. அனால் உலகிற்கு காரை தந்த மமதையில் இருந்த அமரிக்க கார் தயாரிப்பாளர்கள் இந்த சர்வே முடிவகளை அலட்சியப் படுத்தினார்கள்.

kasthuri rengan mathu www.malartharu.com www.malartharu.org pudukkottai tmail nadu
மிகச் சரியாக அப்போது அமெரிக்க சந்தையில் நுழைந்த ஜப்பானிய கார் நிறுவனங்கள் இந்த முடிவுகளை தங்கள் கார் தயாரிப்பில் பயன்படுத்த அமரிக்காவில்  சுதேசி கார்களை விட ஜப்பானிய கார்கள் அதிகம் விற்க ஆரம்பித்தன .

நமது பெரிய ஜவுளி மாளிகை என்ன செய்கிறது என்று பார்ப்போம். அல்லது கோல் மார்ட் வரட்டும் என காத்திருப்போம்...

அன்பன்
 மது 

Comments