ஸ்டீவென்சனும் குதிரைவண்டிக்காரர்களும்


viswaroopam www.malartharu.com kasthuri rengan kamal pudukkottai
ஸ்டீவென்சன்  முதல் முதல் நீராவி என்ஜினை பயன்பாட்டிற்கு கொண்டுவந்த பொது அவரது தொழிற்சாலை தாக்கப்பட்டு முற்றாக சிதைந்தது. ஆனால் ஸ்டீவென்சன் மீண்டார் மனித குலத்தை வேகம் குறைந்த குதிரைவண்டிகளிடமிருந்து மீட்டு  இன்றளவும் நாம் விழிகள் விரியப் பார்க்கும் இரயில் வண்டியை தந்தார்.

இன்று  கிட்டத்தட்ட இதைபோன்ற ஒரு இக்கட்டில்தான் ராஜ் கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல்  நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. தொண்ணுற்று ஐந்து கோடி ரூபாய்களை கொட்டி எடுக்கப்பட்ட, தனது விஸ்வரூபம் திரைப்படத்தை டி டி ஹச் மூலம் வெளியிட முயற்சிகிறது. 

viswaroopam www.malartharu.com kasthuri rengan kamal pudukkottai
ஆனால் இது மரபுவழி சினிமா சந்தையை அசைப்பதால் பல தளங்களில் கடுமையாக எதிர்க்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலர் தங்கள் எதிர்ப்பை மிரட்டும் தொனியில் பதிவிட்டு வருகின்றனர். 

கமலோ தனக்கு வியாபாரம் செய்ய எல்லா உரிமைகளும் உள்ளது என்று வாதிடுகிறார். 

முதலில் கமல் யார்? தமிழ் திரையுலகின் விடிவெள்ளி. திரைஉலகின் நேற்று இன்று மட்டுமில்லாது நாளையும் நன்கறிந்தவர். 

viswaroopam www.malartharu.com kasthuri rengan kamal pudukkottai
எப்படி தமிழ் திரைப்படங்களில் பாடல்கள் வந்தது என்பதை விலாவரியாக ஒருமுறை விளக்கியபோது அவரது திரையுலக ஆர்வமும் அர்பணிப்பும் எனக்கு நன்கு புரிந்தது. 

(பேசும் படங்கள் அறிமுகமானபோது அதுவரை திரையரங்கங்களில் ஆடிக்கொண்டும் இசைத்துக் கொண்டும் இருந்த கலைஞர்கள்  போர்க்கொடி தூக்க சமாதானமாக தமிழ் ரசிகனுக்கு பாடல்கள் கிடைத்தது! - ஆதாரம் கமலின் ஒரு தொலைகாட்சி பேட்டி)

இப்படி தனது துறை குறித்து தீராத காதல் கொண்ட தீராத விளையாட்டுப்பிள்ளை, சகல கலா வல்லவன் கமல் என்பதை அவரைப்பிடிக்காத திரை ரசிகர்கள் கூட ஒத்துக்கொள்வர்.

 இப்படி வெளிவிட்டால் என்ன ஆகும்?

viswaroopam www.malartharu.com kasthuri rengan kamal pudukkottaidபூமி சுற்றுவது நின்றுவிடாது. படம் நல்லா இருந்தா மக்கள் தியேட்டரை மொய்ப்பார்கள். இல்லையா ஒரு வட போச்சே என்று வேலைய பார்க்க போய்விடுவார்கள். 
தியேட்டர் என்னாகும் ?
அதான் முன்னாலேயே சொன்னேனே படம் நல்ல இருந்தா  திரையரங்கங்கள் வருவாய் ஈட்டும். இல்லையேல் பணால். எனக்கென்னவோ படம் அதிரி புதிரி ஹிட்ஆக வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. அப்படி நடந்தால் அத்துணை எதிர்ப்பும் கார்பன் டை ஆக்ஸ்சைட் பட்ட நெருப்பு மாதிரி புஸ்.

யாருக்கு லாபம்?

நிச்சயமா கமலுக்கு லாபம் தான். அனேகமாக ஒருமுறை  வீட்டிலும் பலமுறை தியேட்டரிலும் பார்க்கிற படம்தான். எனவே கமலுக்கு படம் ஒன்று வருவாய் இரண்டு.

அப்போ வேறேயாருக்கும் லாபமில்லையா?

viswaroopam www.malartharu.com kasthuri rengan kamal pudukkottai
ஹலோவ். கடந்த ஐந்தாண்டுகளில் தியேட்டர் கிடைக்காமல் பெட்டிக்குள் போன சிறிய பட்ஜெட் படங்கள் சுமார் 100 இருக்கும். இந்தமாதிரி படைப்பாளிகளை சட்டையை பிய்த்துக்கொள்ளவைக்கும் நிகழ்வுகள் இனி ஒரு போதும் நிகழாது. கமலே செய்துட்டார் நமெக்கென்ன என்ற துணிச்சல் வரும் வளரும் கலைஞர்களுக்கு. இப்போது உறுமும் தியேட்டர்காரர்கள் கடந்த ஐந்துஆண்டுகளில் இந்த மாதிரி சின்ன படங்களை கண்டுகொள்ளவில்லை என்பதையும் நாம் நினைவுகூரவேண்டும்.

viswaroopam www.malartharu.com kasthuri rengan kamal pudukkottai
 அனேகமாக கமல் இந்த நிகழ்வினை பார்த்திருக்கவேண்டும், வளரும் கலைஞர்களுக்கு வழிகாட்டவே இப்படி செய்ய துணிந்திருக்கவும் வாய்ப்பு அதிகம். சினிமாவை சுவாசிக்கிற ஆள் இல்லயா?

இது சினிமாவை அதன் தளைகளிலிருந்து விடுவிக்கிற செயலாகவேபடுகிறது.  சின்ன படங்கள் இனி பிழைக்கும். அரசியல், பணமுதலைகள் என பலகட்ட தாக்குதல்களை சுலபமாக சமாளிப்பார் புதிய கலைஞர்கள்.

யோசித்து பாருங்கள் புதிய பாதைக்கு தியேட்டர் கிடைத்திருக்காவிட்டால் தமிழ் திரைக்கு  பார்த்திபன் என்கிற கலைஞன் கிடைதிருப்பானா?

நிறைய பார்த்திபன்களும், சேரன்களும் சசிக்குமார்களும் வருவதை கமலின் இந்த பெரிய முடிவு உறுதி செய்திருக்கிறது.


நன்றி கமல்.

இனி ஆரோக்கியமான தமிழ் சினிமா வளரும். குதிரைவண்டிக்காரர்களுக்கு பயந்திருந்தால் ரயில் கிடைத்திருக்குமா?
viswaroopam www.malartharu.com kasthuri rengan kamal pudukkottaiviswaroopam www.malartharu.com kasthuri rengan kamal pudukkottai
viswaroopam www.malartharu.com kasthuri rengan kamal pudukkottai
viswaroopam www.malartharu.com kasthuri rengan kamal pudukkottai

Comments

  1. தன்னைப் போல் இல்லாதவனை இவ்வுலகம் எப்போதும் தன்னைப் போல் ஆகும்படி வற்புறுத்தும். வழக்கம் போலவே இந்த முயற்சியிலும் கமலை அவர்களைப் போலவே ஆக்கிக் கொண்டார்கள். ஸ்டீவன்சன் என்று சொல்லியிருக்கீங்க இல்லையா, என்றைக்காவது ஒருநாள் ரயிலை ஓடவிட்டே தீருவார். அப்போது குதிரை வண்டிகள் சுற்றுலாத் துறைக்கு விற்கப்பட்டிருக்கும்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக