ப்ரூஸ் வில்லீஸ் படங்களில் ஆகச் சிறந்த ஆக்சன் படங்கள் டை ஹார்ட் வரிசை படங்களே என்பது எனது கருத்து. பெரிய மனசுபண்ணி பிரகதாம்பாள் தியட்டரில் 34 எம் எம்மில் ஓட்ட போகாமல் இருந்தால் சாமி கண்ண குத்திடும் என்பதால் ஒரு மாலை வேளையில் சென்று பார்த்தேன்.
டை ஹார்ட் முதல் பாகம் ஒரு இயல்பான ஆக்சன் படம் ரெண்டு மூணு கொஞ்சம் நம்பலாம். ஆனால் நான்காம் பாகத்தில் ஒரு காட்சியை அவர்கள் சேர்க்காம விட்டார்கள். அது இப்படி இருக்கலாம் என்று நினைக்கிறன்.
ஒரு நாள் ஜான் மெக்லீன் டூட்டி முடிஞ்சு வீட்டுக்கு போறபோது திடீரென்று வந்த செய்வாய் கிரக விண்கலமொன்று ஜான் மேக்லீனுக்கு ஒரு ஒளியை பாய்ச்சி சூப்பர் பவரை கொடுக்க நான்காம் பாகம் ஆரம்பம்.
இந்தக் காட்சியை நினைவு வைத்துக்கொண்டால் தான் நான்காம் பாகத்தையும் ஐந்தாம் பாகத்தையும் பார்க்கலாம். சும்மா இல்லீங்க ஒரு மஞ்ச டப்பா டாக்சியை பறக்க வைத்து ஹெலிகாப்டரை காலிபண்னுவார். நாலாம் பாகத்திலேயே இந்தப்பாடு என்றால் ஐந்து எப்படி இருக்கும்?
நியூயார்க்கில் காணமல் போன தனது மகன் ஜாக்கை தேடிக்கொண்டிருக்கிறார் ப்ரூஸ் விலீஸ் , அவனோ ரஸ்யாவில் ஒரு கொலைமுயற்சியின் பொது பிடிபட்டு சிறையில் இருக்கும் தகவல் வர நம்ம ஹீரோ ரஷ்யா கிளம்புறார்.
அரஸ்ட்டான ஜாக் நான் ஒரு அணுஆய்த வியாபாரியை காலிபண்ண ஒரு பெரிய அரசியல் தலைவரிடம் பணம் வாங்கியிருக்கேன் என்று சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்கிறான் .
சிறையில் உள்ள அணுஆய்த வியாபாரி கடும் பாதுகாப்புடன் குற்றவாளிக்கூண்டில் நிற்க வைக்கப்படுகிறான். பக்கத்துக்கு கூண்டில் ஜாக்.
கோர்டுக்கு வெளியே தனது மகனுக்காக காத்திருக்கும் ஜான் மக்லீன் ஒரு ராணுவ வண்டியை பார்கிறான். சத்தமில்லாமல் மூன்று பி எம் டபுள்யு கார்கள் அமைதியாக கோர்ட்டுக்கு அருகே வந்து நிற்கின்றன.
காத்திருக்கும் ராணுவ கவச வண்டியில் மிகச் சாதரணமாக ரிமோட்டை அமுக்கி மூன்று பி.எம்.டபுள்யு கார்களையும் அவற்றின் டிரைவர்களோடு வெடிக்கவைகிறான் ஒரு வில்லன். இதன் பின் அவன் கோர்டில் அதிரடியாக புகுந்து இருப்பவர்களை சுட்டு நம்ம அணுகுண்டு யாவரியை பார்த்தால் ஆளக்காணோம் .
அணுகுண்டு யாவரியை கூட்டிக்கொண்டு வெளியேற முயற்சிக்கும் ஜாக் தனது தந்தையை சந்திக்கிறான். தொடரும் சேசிங் காட்சியில் மகனை காத்து அவன் ஒரு சி ஐ ஏ ஏஜன்ட் என்பதை ஜான் மக்லீன் தெரிந்துகொள்கிறான்.
அப்புறம் என்ன அடி வெடி அப்புறம் வழக்கம்போல சுபம். முதல் சேசிங் காட்சி மிக நன்றாக வந்திருந்தாலும் சுழலும் ஒரு வேனில் அதுவும் அது மூன்று நான்கு முறை உருண்டபின் முழுசாக எழுந்து ஹீரோ அடுத்த வண்டியை நிறுத்தி தொடர்ந்து போவர் பாருங்க ஆகா ஆகா எப்படிப்பா இப்படி. இதிலும் நம்ம ஹீரோ 30 வருடம் சர்வீஸ் போட்டவர். ஒருதடவ சுத்தி விழுந்தாலே பதினைந்து நாள் பெட் ரெஸ்ட் எடுக்கவேண்டும். ஆனால் ஹீரோ உடனே அடுத்த பைட்டுக்கு ரெடியாவது ... ம்ம்ம்ம் முடியலே அழுதுருவேன் என்கிற வடிவேல் வசனம் எனது காதில் கேட்டது.
சரி ஹீரோதான் அப்படி என்றால் தலையில் கொஞ்சம் தக்காளி சட்டினியோட(ரத்தம் தான் பாஸ்) ஒரு ஐந்து செ மீ இரும்பு கட்டையை தனது குடலில் இருந்து உருவி போட்டு கிளைமாக்ஸ் பைட்டுக்கு ரெடியாவர் பாருங்க ஹீரோவின் பையன். ஆகா ஆகா ஓஹோ .
ரஷ்யாவின் சாலைகளை காசு கொடுத்தால் சினிமாக்காரர்கள் புட்பால் மேட்ச் கூட விளையலாம் போல. அவ்வளவு ஆக்சன் வெடி விபத்து கொண்ட சேசிங் காட்சி. ஆக்சனில் இவ்வளவு நம்ப முடியாத விஷயங்கள் இருந்தாலும் படமாக்கப் பட்ட விதம் அருமை.
குறிப்பாக கிளைமாக்சில் ஒரு சங்கிலியை பிடித்துக்கொண்டு தொங்கும் ப்ரூஸ் விலீஸ் ஸ்லோ மோசனில் பறந்து வைத்து கண்ணாடியை பொத்துக்கொண்டு லேண்ட் ஆகும் காட்சி அப்படியே சிஜி என்றாலும் அருமை. ஒரு அனிமேஷன் கம்ப்யூட்டர் கேமை பார்த்த உணர்வு.
படம் முழுக்க வரும் ப்ளூ டின்ட்டும் சற்று வெளிச்சம் வரும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட யெல்லோ டின்ட்டும் அருமை அருமை.
ஒரு தபா பாக்கலாம் நைனா.
வர்ட்டா
மது
படக்குழு
இயக்குனர் ஜான் மூர்
கதை ஸ்கிப் வூட்ஸ், ரொட்றிக் தார்க்
இசை மார்கோ பெல்ற்றாமி
ஒளிப்பதிவு ஜோனதன் செலா
கதாநாயகன் ப்ருஸ் வில்லீஸ்
வில்லன் செபஸ்டின் கோச்
Comments
Post a Comment
வருக வருக