டாஸ்மாக்கில் பழஈ !


  பழஈ வாழ்க்கை முறையை ஆய்ந்த குழு ஒன்று விலங்குலகின் ஆச்சர்யங்களில் ஒன்றை கண்டறிந்திருக்கிறது. விலங்குகள் சமயத்தில் நச்சுப் பொருட்களையே தங்களின் இளம் வாரிசுகளின் மீது மருந்தாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

பழஈ தனது சூழலில் கொலைகார தட்டான்களை உணர்ந்தால் தனது முட்டைகளை ஆல்ககால் நிரந்த சூழலில் இடுகின்றன. இது லார்வாக்கள் நிறய ஆல்க்கஹால் குடிப்பதை உறுதி செய்து அவற்றை கொலைகார தட்டான்களின் தாக்குதலில் இருந்தும் நோய்களில் இருந்தும் காப்பது உறுதியாகிறது.

தாய் பழஈ தனது வாரிசுகளுக்கு நோய்தொற்று ஏற்படும் என்று கருதினால் அவற்றுக்கு சிகிச்சையாக முட்டைகளை ஆல்கஹாலில் இடுகிறது என்கிறார் டோட் ஸ்கேல்ன்ங்கி.

இதே ஆய்வில் குறைந்த பார்வைத்திறன் கொண்டவை என்று நம்பப் பட்ட பழஈக்கள் நல்ல பார்வைதிறனுடயவை என்பதும் உருதியாகியுள்ளது. இவை ஆண் தட்டான்களையும் பெண் தட்டான்களையும் இனம்பிரித்து பார்க்க கூடிய திறனுடன் உள்ளது என்பதும் தெரிய வந்திருகிறது.

நன்கு கனிந்த பழங்களில் உருவாகும் பழஈ  லார்வே  தட்டான்களால் பாதிக்கப் படுகின்றன. தட்டான்கள் தனது முட்டைகளை பழஈ முட்டைகளில் இட்டு அவற்றை கொன்று தனது தட்டான் இனத்தைபெருக்குகின்றன.  இந்த சந்தர்பத்தில் பழ ஈ தனது முட்டைகளை நேரடியாக ஆல்க்கஹால் நிரந்த இடத்தில இட ஆரம்பிக்கிறது. ஆல்க்கஹால் பாதிப்பு தட்டான்களுக்குதான்! பழஈயின் லார்வாக்கள் எதிர்ப்புதன்மையை பெறுகிறது தெரியவந்திருக்கிறது.

இந்தப் பழ ஈக்கள் இதற்கு முன் தட்டான்களை பார்த்ததே இல்லாவிட்டாலும் ஒரே கூண்டில் அடைக்கப் பட்டால் ஆபத்தை உணர்ந்து தனது இனப்பெருக்க செயல்பாடுகளை மாற்றிக்கொள்கின்றன.

இயற்கை மனிதனுக்கு தெரியாத எத்துனை வித்தைகளை இன்னும் வைத்திருக்கிறது? அடேங்கப்பா!


ஆச்சர்யங்களுடன்
மது

Comments

  1. வித்தியாசமான அறிவியல் தகவல்! நன்றி!

    ReplyDelete

Post a Comment

வருக வருக