காலம் தோறும் பிராமணியம் பாகம் ஒன்று




எவ்வளவு நாளைக்குத்தான் ஒரு சாராரையே கடிவது என்று அயர்ச்சியுடன் தான் இந்தப் புத்தகத்தை எடுத்தேன். இடஒதுக்கீடு தகுதியின் அடிப்படையில் மட்டுமே அமையவேண்டும் என்று வாதிடும் மனிதப் புனிதர்கள் காலம் தோறும் பிராமணியம் பாகம் ஒன்றை படித்தால் அவர்களின் கருத்துக்கள் நிச்சயம் மாறிவிடும். 

பக்தி மாயையில் நாம் எப்படி உண்மைகளை காண மறுக்கிறோம் என்பதற்கு அருணன் அவர்களின் அரிச்சந்திர கதையின் மறுவாசிப்பு ஒரு பயிற்சிப்பட்டறை. 

எப்படி ஒரு மாற்று சாதி (மத?) ராஜா பிராமணிய சூழ்ச்சியினால் தனது ராஜ்ஜியத்தை, மனைவியை, மகனை பறிகொடுத்து தனது குடிகளோடு எரியூட்டப்பட்டான் என்பதை அருணன் விளக்குகிற போது கிடைப்பது உண்மையின் தரிசனம். 

இதேபோல் நாயன்மார்கள் கதையை மறுவாசிப்பு செய்கிறபோது எப்படி நாயன்மார்கள் பார்பனர்களால் பாடாய்ப்படுத்தப்பட்டனர் என்பதையும் நமக்குக் காட்டுகின்றார். 

பெரியாரின் பார்வை ஏன் இவ்வாறு தீவிர பார்பனிய எதிர்பாக இருக்கிறது என்பது இந்நூலை படித்தால் விளங்கும்.ஒரே கடவுளை வணங்கும் மக்களை நான்காக பிரித்து, நான்கை ஆயிரமாக்கிய பெருமை மனுவுக்கே உண்டு. இந்த நூலின் மூலம் இந்த தேசத்தை இன்றுவரை முடமாக்கியிருப்பது  பிராமணியமும் அதன் கருவியாகிய இந்து மதமும்தான் எனஆணித்தரமாக ஆதரங்களுடன் நிறுவியிருக்கிறார் ஆசிரியர் அருணன். 

வெகு காலமாய்என்னுள் இருந்த கேள்விகளுக்கு விடையளித்த நூல் இது. வினாக்கள் இதோ.

௧. எங்கிருந்தோ வந்த முகலாயரும் ஆங்கிலேயரும் எப்படி இவ்வளவு நீண்ட காலம் இந்தியாவை அடக்கியாள முடிந்தது?
௨. அசுரர்கள் ஏன் யாகங்களை சிதைத்தனர்?
௩. ஏன் இந்தியா நத்தை வேகத்தில் முன்னேறுகிறது?
௪. ஏன் நம்மவர்கள் நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு எதிராக ஓரணியில் திரள முடியவில்ல?
இன்னும் என்னை அரித்த நூறு கேள்விகளுக்கு நெற்றியிலடித்தமாதிரி பதில் சொன்னது இந்த புத்தகம். தேச முன்னேற்றத்தை மதமும் கலாச்சாராமும் எப்படி சீரழிக்கும் என்பதற்கான விரிவான விடை இந்த நூல்.

சமூக மேம்பாட்டிலும், சகோதரத்துவத்திலும் நம்பிக்கையுள்ள அத்துனைபேரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
நூல் காலம் தோறும் பிராமணியம் பாகம் ஒன்று

ஆசிரியர் : அருணன்
பதிப்பகம் : வசந்தம், மதுரை








~****************இந்தப் பதிவோடு தொடர்புடைய பதிவுகள் ****************~
http://www.malartharu.org/2013/01/1.html 
 ~********************************  ரிலாக்ஸ்  **********************************~

Comments

  1. பகிர்விற்கு நன்றி..வாங்கிப் படிக்கிறேன்

    ReplyDelete
  2. தமிழில் வரிசைப்படுத்தியிருப்பது அருமை..வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

வருக வருக