தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே..



புதிய ஆய்வு ஒன்று தூக்கம் கற்றலை மேம்படுத்துவதை கண்டுபிடிதிருக்கிறது. தூங்கும்பொழுது அந்த நாளில் கற்றவை மூளையில் சேமிக்கப்படுவதை உறுதி செய்திருக்கிறது இந்த ஆய்வு. கொஞ்சம் நில்லுங்க பாஸ். ஓடிப்போய் படுக்கவேண்டம். பதினோரு வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கே இதனால் நன்மை. 

 டுபிங்கன் பல்கலைக்கழக மருத்துவ உளவியல் துறையின் டாக்டர் இன்ஸ் வில்ஹெல்ம் தனது சுவிஸ் மற்றும் ஜேர்மன் அறிஞர்களுடன் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கிறார். 

கற்றலுக்குப் பிறகு ஒரு நல்ல தூக்கம் கற்றலை நீண்ட கால நினைவில் வைத்திருக்க உதவுகிறது. தூங்குகிற பொழுது நினைவானது ஒரு வடிவத்தை அடைந்து அடுத்த கட்ட கற்றலுக்கு தயார் செய்கிறது. உள்ளார்ந்த அறிவு வெளிப்படும் அறிவாக மாற்றம் அடைந்து எளிதாக பல கட்ட மாறுதலுக்கு வழிகோலுகிறது. 

மறைமுகமாக பயிற்றுவிக்கப்பட்ட ஒரு உடல் செயல்பாடு எப்படி ஒரு வெளிப்படையான அறிவாக மாறுகிறது என்பதை சோதித்தது இந்த ஆய்வு. ஒரு வரிசையாக செய்யவேண்டிய தொடர் செயல்பாடுகள் தரப்பட்டு ஆய்வில் பங்கேடுத்தோர் ஒரு நாள் தூங்கவும் ஒரு நாள் விழித்திருக்கவும் பனிக்கப்பட்டனர். 

தூங்கிய அன்று இரண்டு குழுக்களுமே நிறைய செயல்பாடுகளை நினைவுகூர்ந்தனர். முழுவளற்சியடைந்த நபர்களை விட ஆழமாகும் அதிக நேரமும் தூங்கிய குழந்தைகள் சிறப்பாக செயல்பட்டனர். குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது அவர்களின் நினைவாற்றலுக்கு நல்லது.
பதினோரு வயதுவரை குழந்தைகளை நன்றாக தூங்க அனுமதிப்போம். 

அன்பன்
மது
~@@@@@@@@@ரிலாக்ஸ்@@@@@@@@~


இந்த வார யு டுயூப் காணொளி 

Comments