பேராசிரியர் அருணன் அவர்களின் மிக விரிவான சமுக
ஆய்வு நூலின் நான்காம் பாகம்.
மிக தெளிவாக முகலாயர் வரலாற்றை விவரிப்பதில்
ஆரம்பித்து எப்படி ஆங்கிலேயர் இந்த நாட்டை அடிமைப்படுத்தினார்கள் என்கிறவரை மிக
அற்புதமாக, ஒரு கால இயந்திர பயணம் மாதிரி விவரிக்கிறது இந்நூல்.
உலகின் மிகப் பிரமாண்டமான கோட்டைகளின் பல
டெல்லியில் இருக்கின்றன. அவற்றை நிர்மாணித்த அரசர்களின் ஆளுமை இன்னும் வியப்பை
தருகிறபோது, இந்த நூலின் ஒரு பக்கம் அந்த வியப்பை இடறுகிறது. இரண்டாம் ஆலம்கீர்
தனது மந்திரியுடன் கருத்து வேறுபாட்டுடன் இருந்ததையும். அந்த மந்திரி தந்திரமாய்
அரசனை யமுனை ஆற்றங்கரைக்கு அனுப்பி கொலை செய்திருப்பது, மேலும் கொலையுண்ட அரசனின்
உடல் பல மணிநேரத்திற்கு நிர்வாணமாக யமுனை ஆற்றம்கரையில் கிடந்ததை படிக்கிற பொழுது
எனக்கு ஏற்ப்பட்ட உணர்வு, என்ன வாழ்க்கைடா.
மராட்டியர் தங்களுக்குள்ளான வாரிசுரிமை
போட்டியில் ஈடுபட்ட பொழுது தங்கள் தந்திரத்தால் அவர்களை பொம்மைகளாக்கி, அரசு அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டது
பிராமணியம். இதன் ஒரு பக்க விளைவாக விதைக்கப்பட்டதுதான் இந்துத்துவத்தின்
அடித்தளம் என்பதையும் இந்நூல் பதிவிட்டிருக்கிறது.
முற்றிலும் புதிய தகவலாக ஆங்கிலேயர் டில்லி
அதிகாரத்தை முகலாயரிடமிருந்து கைப்பற்றவில்லை மராட்டியரிடம் இருந்தே அதனை
கைப்பற்றினார்கள் என்பதையும் இந்நூல் ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது.
ஹாலந்துக்காரனும் போர்ச்சுக்கல்காரனும் 1599 இல்
ஐரோப்பிய சந்தையில் மிளகின் விலையை மூன்று மடங்கு உயர்த்தியதால் பாரதம் 300
வருடங்களுக்கு அடிமையாக இருந்தது என்ற புரிதலை தருகின்ற புத்தகம்.
இந்தியாவை உருவாக்கியது யார்?
ராபர்ட் கிளைவினால் அடிக்கல் நாட்டப்பட்டு வாரன்
ஹேஸ்டிங்சால் தொடரப்பட்டு டல்ஹௌசியினால் கட்டி முடிக்கப் பட்டதே இன்றைய இந்தியா.
அதுவரை நாம் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்ததே இல்லை. என்பதும் எனக்கு ஒரு புது
தகவலே.
சமூக விடுதலையும் சமத்துவத்தையும்
சகோதரத்துவதையும், விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
ராஜா ராம் மோகன்ராய்
ராஜாராம் மோகன்ராய் சமுக சீர்திருத்ததிற்காக
போராடவும் உயிரோடு இருக்கவும் முடிந்தது என்றால் அதற்கு மெய்யான காரணம்
ஆங்கிலேயனும் அவனது அரசும் என்பது நம்மவா எவ்வளவு கேவலமனவா என்பதற்கு ஒரு சான்று.
சமூக சீர்திருத்தங்களுக்கு எதிரான நிலையில் இருந்த பிராமணியம் கடைசியில் ஒரு
வதந்தியின் மூலம் சிப்பாய்களை திரட்டி போரிட்டது. சீர்திருத்தங்கள் ஒரு
நூற்றாண்டு மட்டுப்பட்டன.
நேரு குறித்த எனது முந்தய பிம்பங்களை தகர்த்தது
இந்நூல். 1857 கலகத்தை பற்றி நேரு இப்படி குறிப்பிட்டிருப்பது எனக்கு வியப்பு,
மகிழ்ச்சி(ஒத்துக்கிறேன் நேரு நல்லவர்னு ஒத்துக்கிறேன்).
“ஆங்கிலேய ஆட்சி ஒரு சமுதாயப் புரட்சியை
நிச்சயம் உருவாக்கி விட்டிருக்கிறது. அவர்கள் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த சில
கொடுமைகளை நீக்கியிருக்கிரார்கள். சட்டத்திற்கு முன்னால் மாந்தர் யாவரும் சமம் என்று நிறுவ முயன்றனர்.
விவசாயி நிலக்கூலி ஆகியோரது நிலைமையைச் சீர்படுத்த ஆவன செய்துள்ளார்கள்.
கலகத்தலைவர்கள் காலத்தை பின்னோக்கி செல்ல வைத்திருப்பார்கள். அதாவது புதிய சீர்திருத்தங்களை புதிய அமைப்போடு
அவர்கள் அழித்துவிட்டிருப்பர்கள். பிரபுவோடு சம நீதியை கோரக்கூடிய நிலையில் ஒரு
சாதரணக் குடிமகன் இருக்க இயலாது. தாலுக்கதார்களின் தயவில் குத்தகைதாரர்கள் இருக்க
வேண்டி வரும். களவுக் குற்றத்திற்கு அங்கஹீனம் தண்டனையாக இருக்கும். அத்தகய
பழயகாலத்திற்கு அவர்கள் திரும்பி சென்றிருப்பார்கள். சுருங்க கூறின் அவர்கள் ஒரு
எதிர் புரட்சியை விழைந்தனர்”
இதுவா? புரட்சி? முதல் சுதந்திரப் போர்? எல யார
ஏமாத்திறீங்க?
இன்னும் நான்கு பாகங்கள் உள்ளன...
எத்துனை அதிர்ச்சிகள் காத்திருகின்றவோ?
அன்புடன்
மது
Comments
Post a Comment
வருக வருக