பிளைட்.



குடிகார விமானியின் கதை.
ஆங்கில திரையின் ஆண்மையும் கம்பீரமும் ஆப்ரோ அமெரிக்கர்கள் இல்லை என்றால் நிறைவுறாது என்பது எவ்வளவு உண்மை என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிற படம் பிளைட். டான்சலின் நடிப்பு, தெறிக்கும் கம்பீரம், ஜோரான ஆங்கிலம் என நிறைய ரசனையான விஷயங்கள் படத்தில் உண்டு.

நம்ம ஹீரோ, டான்சல் வாஸிங்டன் ஒரு ஹோட்டல் அறையில் ஒருத்தியுடன் ஜல்சாவில் இருக்கிறார். நிறைய குடித்துவிட்டு கொஞ்சம் கொகெய்ன் இழுத்துவிட்டு விமானத்தில் ஏறுகிறார்.

அம்மாஞ்சி மாதிரி இருக்கும் கோபைலட்டிடம் குசலம் விசாரித்து கடும் மழையினூடே விமானத்தை எழுப்புகிறார். விமானத்தில் வைப்பர் அடிக்கும் முன் கண்ணாடி வழியே விலகும் மேகங்கள் அருமை. காட்டுத்தனமாய் விமானத்தை மேலெழுப்பும் டான்சலை பார்த்து கதறி கிட்டத்தட்ட மூச்சா போகிறார் கோபைலெட்! சரியான காமடி பீஸ். அவனிடம் அசால்ட்டாக எதிரே உள்ள ரேடார் திரையை காண்பிக்கிறார் டான்சல். மேகங்களூடே தெரியும் ஒரு இடைவெளியை சரியாக குறிவைத்து விமானத்தை செலுத்துகிறார் டான்சல். மழை மேகங்கள் மறைந்து பளீர் என்ற ஒளிவெள்ளத்துடன் அருமையாக விரியும் மேகங்கள் ஒரு விசுவல் ட்ரீட்.

எல்லோரும் நிம்மதி பெருமூச்சுவிட விமானத்தை ஆட்டோ பைலெட்டில் போட்டுவிட்டு காக்பிட்டை விட்டு வெளியில் வந்து அமர்த்தலாக ஒரு அறிவிப்பை தருகிறார் டான்சல். அறிவிப்பை தரும் அதே சமயம் யாருக்கும் தெரியாமல் ஆரஞ்சு ஜூஸில் மூன்று பாட்டில் சிமிரன்ஆப் சரக்கை கலக்கிறார். இரண்டு பாட்டில்களை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு காக்பிட்டுக்கு சென்று இரண்டு சிறிய பேப்பர்களை கண்களில் வைத்துகொண்டு அதன் மேல் ஒரு கூலிங் க்ளாசை மாட்டிக்கொண்டு தூங்குகிறார்.

கோ பைலட் விமானத்தை கீழே இறக்க முயல விமானம் ஒரேயடியாக கீழ்நோக்கி விழ ஆரம்பிகிறது. பதறி கத்தும் கோ பைலட்டின் சத்தம் டான்சலை எழுப்புகிறது.

முதல் வேலையாக அனைவரையும் சீட் பெல்டை இறுக்க சொல்கிறார் விமானத்தின் எந்த ஒரு கருவியும் வேலை செய்யவில்லை என்பதை உணர்கிறார். விமானம் கீழே கீழே விரைகிறது.

வேறு வழியில்லாமல் விமானத்தை தலைகீழாக செலுத்துகிறார். விமானம் பறக்க ஆரம்பிக்கிறது! இந்தக் காட்சி பார்த்து ரசிக்க அருமையாக இருக்கும் என்பதால் கட்டாயம் பாருங்க. ஆனால் ஒரு சிறுவன் இருக்கையில் இருந்து கூரையில் விழுகிறான். அவனை காப்பாற்ற விரைகிறாள் பணிப்பெண் காத்ரீனா, அவனை காப்பாற்றி இவள் தலையடிபட்டு மயங்கி விழுகிறாள்.

வெகுதூரம் வந்துவிட்டதால் பக்கத்தில் இருக்கும் ஒரு பரந்த வெளியை பார்த்து விமானத்தை இறக்க முடிவு செய்கிறார் டான்சல். மீண்டும் விமானத்தை நேராக செலுத்தி கீழே வருகிறார். ஒரு தேவாலய சிரசில் வெட்டும் வலப்புற இறக்கையை உயர்த்த இடப்புறம் தாழும் றெக்கை தரையை அடிக்கிறது. பெரும் மோதலுடன் தரையில் விழுகிறது விமானம்.

பல கிலோமீட்டருக்கு முன்பே விமானத்தின் எரிபொருளை வெளியில் ஊற்றிவிட்டதால் வெடி விபத்து தடுக்க பட்டு வெறும் ஆறு உயிர்களின் பலியோடு வெற்றிகரமாக தரையிறங்குகிறது விமானம்.
பத்து பைலெட்களிடம் இதேபோன்ற விமானத்தை தரையிறக்க சொல்லி சோதித்ததில் பத்து பேரும் விமானத்தை கிராஷ் செய்கிறார்கள்.
ஹீரோவாகிறார் டான்சல், ஆனால் மருத்துவமனை ரிப்போர்டின் படி கடும் போதையில் அவர் இருந்ததால் சட்டம் அவரை துரத்த ஆரம்பிகிறது. தப்புகிறார். கடைசியாக ஒரு கண்துடைப்பு விசாரணை அதில் நான் குடிக்கவில்லை என்றால் விடுதலை பழையபடி விமானியாகலாம். கேட்கிற சனியன் செத்துப்போன காத்ரீனாவின்  போட்டவை காட்டி நீங்க குடிக்கலை சரி அப்போ இவ குடிச்சிருப்பாளோ என்று கேட்க வெடித்து பதில் தரும் டான்சல் ஒரு கிளாஸ் ஆக்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறார். 

ஒரு வாவ் மூவி இது.

பத்திரிக்கையாளர்களின் காமிரா துரத்தும் போது தனது மகனை போய் கட்டிப்பிடித்து முத்தமிடும் டான்சல், விசாரணையில் இருக்கும் போது வேலையில் இல்லாத தருணத்தில் உயரப் பறக்கும் விமானத்தை ஒரு ஏக்கத்துடன் பார்க்கும் டான்சல், தனது புதிய நண்பியிடம் நான் குடிக்கனும்னு தான் குடிச்சேன் என்று தகராறு செய்யும் டான்சல் என்று படம் நிறய டான்சல் தனது முத்திரையை அழுந்த பதித்திருக்கும் படம்.

படத்தின் மெயின் கதை இது இதனோடு வரும் உபகதைகளும் உண்டு. 

கட்டாயம் பாருங்க பாஸ்!

அன்பன்
மது.

குழு 
நடிகர்கள் 
டான்சல் வாசிங்டன், பிரைன் ஜெரகாட்டி, டமரா டுனி ....

இயக்கம்
ராபர்ட் ஜெம்கிஸ்

ஒளிப்பதிவு
டான் பர்கஸ்

இசை
ஆலன் சில்வஸ்ற்றி 

Comments