பிரான்க் அபிக்னல் ஜூனியர் என்கிற பதினெட்டு வயது இளைஞனின் நம்பமுடியாத கருப்பு சாதனைகளே இந்தப் படம். பிராங்கின் தந்தையை அமெரிக்க வரித்துறை துரத்தி அவரின் பணத்தை பிடிங்கிகொண்டு ஓட்டாண்டியாக மாற்றுகிறது.
தனது பள்ளியில் இன்னொரு வகுப்பறைக்கு போகும் பிரான்க் அங்கெ பாடங்களை எடுத்து வீட்டுப் பாடங்களையும் கொடுக்கிறான். பாதியில் வரும் உண்மையான பதிலி ஆசிரியையை அசால்டாக திருப்பி அனுப்பி பாடத்தை தொடர்கிறான். சில நாட்கள் கழித்து உண்மை தெரிந்து அப்பா அம்மா வந்து ஜாமீன் போட்டு பிராங்கை பள்ளியில் தக்க வைகிறார்கள். பிராங்கின் சேட்டையை அப்பா ரசிக்க அம்மா கொஞ்சம் மூட் அவுட்டாக இருக்கிறார்கள். அப்பா அம்மாவை எப்படி காதலித்து மணந்தேன் என்பதை பெருமையுடன் சொல்கிறார்.
ஒரு நாள் பிரான்க் வீட்டில் நுழைய மெல்லிய இசை வீட்டில் வழிந்துகொண்டிருக்கிறது, திகீர் என்று அப்பாவின் நண்பர் படுக்கையறையில் இருந்து வருகிறார். அம்மா அப்பாவிடம் சொல்லாதே என்று பிராங்கிற்கு பணம் கொடுக்க அவன் வெளியில் ஓடுகிறான்.
செல்லாத செக்கை கொடுத்து ஒரு ஹோட்டலில் தங்கி, பத்திரிக்கை நிருபராக பான் ஆம் விமான மேலாளரை பேட்டி எடுக்கிறான். வாங்கும் தகவலை கொண்டு இவனே ஒரு பைலெட்டாக நடிக்க ஆரம்பிக்கிறான். போலி சம்பள காசோலைகளை தயாரித்து சுகபோக வாழ்வை அனுபவிக்கிறான்.
விமானப் பணிப் பெண்கள் ஒரு இலவச இணைப்பாக இவனுடன் டேட்டிங் வருகிறார்கள் . ஒரு கட்டத்தில் சாயம் வெளுக்கபோவது தெரிந்து டாக்டர் அவதாரம் எடுக்கிறான். இரவுப் பணியில் டாக்டராக இருக்கும் இவன் அங்கெ நர்ஸ் ஒருத்தியை காதலிக்க துவங்குகிறான். இவனுக்கு எப்படி காதல் என்று யோசித்தால், அவளுடய அப்பாவிடம் வக்கீல் என்று சொல்லி கோர்டில் வேலை பார்க்க ஆரம்பிக்கிறான்.
விடாமல் துரத்தும் ஹாண்ட்ராட்டி என்கிற துப்பறிவாளருடன் கிட்டத் தட்ட டாம் அண்ட் ஜெர்ரி விளையாடை விளயாடுகிறான். ஒரு கட்டத்தில் தனது ஓட்டல் அறைக்குள் துப்பாக்கியுடன் வரும் ஹாண்ட்ராட்டியை இவன் சமாளிக்கும் விதம் இவன் கதாபாத்திரத்தின் அறிவின் நுட்பத்தை சொல்லும். அருமையான காட்சி அது.
இவனின் லொள்ளுகளால் பலமுறை மூக்குடைபடும் ஹாண்ட்ராட்டி கடைசியில் இவனை ஒருவழியாக கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால் இவனின் அறிவு நுட்பத்தை பயன்படுத்த விரும்பும் இவர் எப் பி ஐயிடம் பேசி செக் மோசடி தடுப்பு பிரிவில் ஒரு பணியை வாங்கித் தருகிறார். குற்றவாளி எப் பி ஐ அதிகாரியாகிறான்! (பல ஆண்டுகள் இவன் எப் பி ஐக்காக வேலை பார்த்தது நிஜம்)
இவன் தான் எங்களின் ரோல் மாடல் என்று ஒரு பொறியியல் மாணவர் சொன்னதால் பார்த்த படம். நீங்களும் பார்க்கலாம். மூளைக்கு வேலை தரும் சவாலான நகைச்சுவையான ஒரு துப்பறியும் படம்.
ரசனை ரகளை காட்சிகள்
1. முழு படத்தையும் டைட்டிலில் அனிமேசனில் ஒட்டியிருப்பதும் அதற்கான இசையும்,
2. சரி நீ கேட்க வந்ததை கேள் என்று நர்சின் அப்பாசொன்னதும் (உங்கள் பெண்ணை மணந்துகொள்ள அனுமதியுங்கள் என்று கேட்பான் என்று நினைக்கும் போது) பிரான்க் நான் கோர்டில் வக்கீலாக பணிபுரிய வேண்டும் என்று சொல்வது,
3. முகத்துக்கு நேரே துப்பாக்கியை நீட்டும் டாம் ஹாங்க்சுக்கு அசால்டாக அல்வா கொடுப்பது.
4. அம்மாவை பார்க்க போய் அவளின் புதிய கணவருக்கு பிறந்த குழந்தையை பார்த்தவுடன் இடிந்து போய் போலீசில் சரணடைவது
5. என் பையன் பண மோசடியில் ஈடுபட்டிருந்தால் அந்தப் பணத்தை நான் தருகிறேன் என்று செக்கை எடுக்கும் அம்மா நாலரை மில்லியன் டாலர்கள் என்று சொன்னதும் அதிர்ந்து செக்கை வைப்பது.
உங்களுக்கு பிடித்த காட்சிகளை கீழே பதிவிடுங்களேன்.
அன்பன்
மது
குழு
இயக்கம்
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்
மது
குழு
இயக்கம்
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்
நட்சத்திரங்கள்
லியர்நாடோ டி காப்ரியோ(பிரான்க்), டாம் ஹாங்க்ஸ்(ஹாண்ட்ராட்டி) , கிரிஸ்டபர் வால்க்கன்(அப்பா), ஆமி ஆடம்ஸ் (நர்ஸ்) .......
இசை
ஜான் வில்லியம்ஸ்
ஒளிப்பதிவு
ஜான் னஸ் காம்நிஸ்க்கி
லியர்நாடோ டி காப்ரியோ(பிரான்க்), டாம் ஹாங்க்ஸ்(ஹாண்ட்ராட்டி) , கிரிஸ்டபர் வால்க்கன்(அப்பா), ஆமி ஆடம்ஸ் (நர்ஸ்) .......
இசை
ஜான் வில்லியம்ஸ்
ஒளிப்பதிவு
ஜான் னஸ் காம்நிஸ்க்கி
எடிட்டிங்
ரிச்சர்ட் பேயர்
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் அதிகம் பிரபலமடையாத ஆனால் நேர்த்தியான படம். டாம் ஹேங்க்ஸ்சை விட டி காப்ரியோ வெகு அனாசியமாக நடித்திருப்பார். பலருக்கு இது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படைப்பு என்பது தெரியாது.
ReplyDeleteவணக்கம் சகோ.
ReplyDeleteபடத்தின் தலைப்பே கதையைக் கேட்ச் பண்ண வைத்து விட்டது. ஒரு அற்புதமான கதையம்சம் கொண்ட படமாகவும் ரசித்து பொழுது போக்க சிறந்த படமாகவும் உங்கள் விமர்சனத்திலிருந்து தெரிகிறது. அவசியம் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
சகோ ஒரு பொறியியல் மாணவர் எனக்கு பார்க்க சொல்லி பரிந்துரைத்த படம்.
Deleteஅவனுடைய ரோல் மாடலே அபிக்நெல் என்றான்