தனது வகுப்பில் எல்லா மாணவர்களும் நன்றாக
படிக்கவேண்டும் என்பதே அனைத்து ஆசிரியர்களின் அவா. டல்லர்ட்ஸ் மேக்ஸ் எ கிளாஸ்
கம்ப்ளீட் என்கிற சொலவடை ஒன்று உண்டு. கற்றல் குறையுடைய மாணவர்கள் தான் ஒரு
வகுப்பை முழுமையடைய செய்கிறார்கள் என்பது இதன் அர்த்தம். படிக்காத மாணவர்களின்
பிரச்னை மிகப் பொறுமையாக அணுகவேண்டிய ஒரு விஷயம். ஆனால் இயந்திரமயமாகிப்போன இன்றைய
கல்விச் செயல்பாடுகளில் விரையும் வேலையில் காலில் சங்கிலியால் கட்டிய இரும்பு
குண்டாக இவர்கள் உணரப்படுகின்றனர்.
வீட்டின் சூழல், நண்பர்கள், பழக்க வழக்கங்கள்
உடல் நலம் என்று பல்வேறு காரணிகளால் ஆனது இவர்கள் பிரச்சனைகள். இந்த இடியாப்ப
சிக்கலில் இருந்து இவர்கள் விடுபட ஆசிரியரின் கருணைமிக்க அணுகுமுறையே முதல் படி.
கருணையோடு தங்களை அணுகும் ஆசிரியரின் பாடங்களில் இவர்கள் கற்றல் திறன்
அதிகரித்திருக்கும். மாறாக கடுமைகாட்டும் ஆசிரியர்களின் பாடம் இவர்களுக்கு
எட்டிக்காயாக இருக்கும்.
இவர்களில் சிலரால் ஆசிரியர் அணுகுமுறை எப்படி
இருந்தாலும் ஒரு அசட்டு சிரிப்புடன் அமுக்கமாகவே இருப்பார். சிலர் சூன்யத்தை வெறித்துப்
பார்த்தபடி இருப்பார்.
ரொம்ப சுலபமாக இவர்கள் பள்ளியை விட்டு வெளியே
செல்லவும் கூடும். இதன் முழு பாதிப்பும் அந்த மாணவர்க்கே என்றாலும் கர்நாடகத்தின்
சுயநலம் தஞ்சை விவசாயியின் உயிரை குடிப்பது போல் இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு.
ஒரு கிராமத்தில் நான் பணியாற்றிக்
கொண்டிருந்தபொழுது நன்றாக படிக்கும் ஒரு மாணவி பள்ளியை விட்டு நின்றுவிட்டாள்.
நான் அவளது தந்தையை அழைத்து கேட்டபோது அவர் ரொம்ப சாதரணமாக சொன்னார் நான் இவளை ஏன்
அக்கா பையனுக்குத்தான் தரப்போகிறேன். அவன் எட்டாம் வகுப்புத்தான் படித்திருக்கிறான்.
இவள் மேலே படித்தால் எப்படி?
ஆக ஒரு கற்றல் குறைபாடு உள்ள மாணவர் பள்ளியை
விட்டு காணமல் போனால் எங்கோ இன்னொரு கிராமத்தில் இன்னொரு பெண்குழந்தையின்
கல்வியும் பாதிக்கப்படுகிறது என்ற கசப்பான உண்மை என்னை சுட்ட நேரமது.
இன்னொரு முறை ஒரு கற்றல் குறைபாடு உள்ள மாணவர்
உங்கள் வகுப்பறையை விட்டு காணமல் போனால் மகிழ வேண்டாம்.
ஏன் டீச்சர் எங்களை பெயிலாக்னீங்க? என்ற
மாணவனின் கடிதத்தில் இருந்து ஒரு வரி
நோயாளிகளை வெளித்தள்ளிவிட்டு ஆரோக்கியமானவர்களுக்கு
வைத்தியம் பார்க்கும் வினோதமான மருத்துவமனைகள் போன்றவை நம்ம பள்ளிகள்.
ப்ளீஸ் கொஞ்சம் யோசிங்க
மது
$$$$$$$$$$ரிலாக்ஸ்$$$$$$$$$$$
காணொளி
நல்ல பதிவு .நீங்கள் குறிப்பிட்டது போல தனியார் பள்ளிகள் ஆரோக்கியமானவர்களுக்கு வைத்தியம் செய்து கொண்டிருக்கின்றன.
ReplyDeleteநன்றி அய்யா..
Delete