மார்வல் காமிக்ஸ் பல்வேறு சூப்பர் ஹீரோக்களை
உருவாக்கி உலவவிட்டிருக்கிறது. எக்ஸ் மென் படங்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே
உண்டு. எனக்கு உல்வரின் ஹேர்ஸ்டைல் முதல் அவனின் அதிரடிகள் செம மான்லீயான ஆக்சன்
ரொம்பவே பிடிக்கும்.
வில்லிங் சஸ்பென்சன் ஆப் டிஸ்பிலிப் (Willing suspension of disbelief) அவநம்பிக்கையை அழுத்திக்கொண்டு ஹை நல்லகீதே என்று
பார்பவர்களால் மட்டுமே பார்க்க முடியும். இப்படியெல்லாம் நடக்குமா என்பவர்கள் கொஞ்சம் கூட
ரசிக்க முடியாத வரிசை படங்கள் இவை. எக்ஸ் மென் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு
என்று வரிசை கட்டி வந்த படங்களின் வரிசையில் லேட்டஸ்ட் எக்ஸ் மென் பஸ்ட் கிளாஸ்.
ஒவ்வொரு யுகத்திலும் சில மனிதர்கள் தங்கள் உள்ளே
உறைந்துள்ள அதீத சக்தியை வெளியே எழுப்பி சில சாகசங்களை செய்வார்கள் என்று துவங்கிய
முதல் பாகத்திற்கு முந்திய பாகம்(ப்ரீக்குவல்). இந்தப் பாகத்தின் ஒரு ஆச்சர்யம்
டாக்டர் சேவியர் மிக இயல்பான மனிதனாக இரண்டு கால்களை உடையவனாக இருப்பதே! ராவன்(அண்டம்காக்கை)
என்கிற விரும்பிய மனிதர்களின் உருவத்தை அடையும் திறன் வாய்ந்த எக்ஸ் பெண் சார்ல்ஸ்
சேவியருடன் வளர்கிறாள்.
இதே சமயம் போலந்தில் ஒரு போர்க்கைதிகளின்
முகாமில் ஒரு தாயை அவள் மகனின் கண்முன்னே சாக்லேட் சாப்பிடுக்கொண்டே கொல்கிறான்
வில்லன் ஸெபாஸ்டின் ஷா (கெவின்
பேக்கன்) . வெறியாகும் மகன்(எரிக்) தனது காந்த சக்தியை முழுமையாக பயன்படுத்த
ஆரம்பிக்கிறான். ஆவென்று அலறி சிப்பாய்களின் தலைக் கவசத்தை காந்த சக்தியின் மூலம்
நசுக்குவது பக்கத்துக்கு அறையில் உள்ள இரும்பு பொருட்களை காற்றில் பறக்கும்
சீட்டுக்கட்டாய் சுழற்றுவது என சக்தியை வெளிப்படுத்துகிறான்.
உலகில் அணுபோர் வந்தால் மனித குலம் அதன் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு எக்ஸ் மனிதர்களாக மாறும் என்பதே வில்லனின் எதிர்பார்ப்பு. இதற்காக அவன் ஒரு மெகா திட்டத்தை செயல்படுத்துகிறான்.
ஏவுகணைகளை அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் தரும்
வகையில் நகர்த்தும் எதிரி நாடுகளை வேவு பார்க்கும் சிஐஏ ஏஜன்ட் ஒருத்தி அந்த தீவிரவாதக்கும்பலை பின்தொடரும் பொழுது மிக
வித்தியாசமான அனுபவங்களை எதிர்கொள்கிறாள். அந்தக் கும்பல் அதீத சக்தி பெற்ற அடுத்த
தலைமுறை மனிதர்கள் என்று கருதுகிறாள். இது குறித்து தகவல் தெரிந்த சார்லஸ் சேவியர்
தனக்கு உதவ முடியும் என்று நினைக்கிறாள். சார்லஸ் இவள் தன்னிடம் செய்தியை சொல்கிறபோழுதே
இவளது எண்ணங்களை படித்து உண்மையை அறிந்து கொள்கிறார். இவளுக்கு உதவ முன்வருகிறார்.
ஒரு போர்க்கப்பலில் பயணித்து சந்தேகத்திற்குரிய ஒரு படகை நெருங்கும் பொழுது ஒரு
ட்விஸ்ட்டாக அந்தப் படகு காந்த சக்தியுடைய எக்ஸ் மனிதனால் தாக்கப்படுகிறது. தாக்குதலில்
தப்பும் வில்லனை தொடர்ந்து அவனுடைய நீர்மூழ்கியை காந்த விசையினால் கட்டுப்படுத்த
முனைகிறான் காந்த மனிதன். ஆனால் இது அவனை கொன்றுவிடும் என்று அறிந்த சார்லஸ்
தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்றுகிறான்.
சிஐஏ எக்ஸ் மனிதர்களைக் கொண்டு ஒரு ஒரு புதிய பிரிவை ஆரம்பிகிறது. இதற்க்கு ஆட்களைப் பிடிப்பது சார்லசின் வேலை. இதெற்கென செரிப்ரம் என்கிற கருவியை வடிமைக்கிறார்கள். இதன் மூலம் சார்லஸ் உலகில் உள்ள அணைத்து எக்ஸ் மேன்களையும் கண்டிபிடித்து தனது படையணியில் சேர்க்கிறார். இதனிடையே காந்த மனிதனுக்கு மனதை அமைதிப் படுத்துவதன் மூலமும் சாந்தத்தின் மூலமும் சக்தியை பன்மடங்கு பெருக்கும் வித்தையை சொல்லித் தருகிறார் சார்லஸ். இந்தப் புதிய பிரிவால் தனக்கு ஆள் குறைவதால் வெறியாகும் வில்லன் இந்தப் பிரிவை தாக்கி அழிக்கிறார். மீதம் உள்ள எக்ஸ் மனிதர்கள் வில்லனையும் அவன் கூட்டத்தையும் எதிர்த்து போராடி வெல்லவது வழக்கம் போல ஒரு சினிமா கிளைமாக்ஸ்.
நம்ப முடியாத சக்தியுடைய மனிதர்களை கொண்ட ஒரு
படத்தில் நெகிழ்வான காட்சிகளை வைத்தது இயக்குனரின் திறமை. குறிப்பாக தன்னை
நினைத்து தாழ்வு மனப்பான்மையில் உள்ள ராவணை காந்த மனிதன் நீ இயல்பாக இரு அது தான்
உன் அழகு என்று சொல்வது. தங்களுக்கு கிடைத்த அதீத சக்தியை பெரும் சாபமாக எண்ணி
வருந்தும் விஞ்ஞானி எக்ஸ், அவனது நண்பி. இவர்களுக்கு பக்குவமாய் அறிவுரை சொல்லும்
காந்த மனிதன் என்று நெகிழ்வான தருணங்கள் படத்தின் பலம்.
கிளைமாக்ஸில் ஒரு நீர்மூழ்கியை அப்படியே
நீருக்குள் இருந்து கிளப்பி காற்றில் மிதக்க வைத்து தீவைநோக்கி செலுத்துவது ஜோர் இந்தக்
காட்சிக்கான இசை கொஞ்ச நாளைக்கு காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கும். இந்தக்
காட்சிக்காவே படத்தை பார்க்கலாம். எப்டி இப்டிலாம் என்பவர்கள் இரண்டாவது பாராவை
திரும்ப படிக்கவும்.
ஆளிலாத தீவில் இருக்கும் அத்துணை எக்ஸ்
மேன்களையும் அழிக்க அரசாங்கங்கள் முடிவு செய்து ஏவுகணைகளை அனுப்புவது அவற்றை ஏவியவர்களை நோக்கியே திருப்பி அனுப்பும் காந்த சக்தி மனிதன்.
இதன் தொடர்ச்சியாக சார்லஸ் அடிபட்டு தன் கால்களை இழப்பது படத்தின் மிக நெகிழ்வான
இடம். இந்தப் பகுதியின் இன்னொரு ஹீரோ இசை. அருமையான பின்னணி இசை.
எரிக் என்கிர காந்த மனிதன் தனது சக்தியை மேம்படுத்திக் கொள்ள ஸேவியர் உதவுகிற இடம்
ரொம்பவே டச்சிங். எல்லா எக்ஸ் மென் படங்களை காட்டிலும் கொஞ்சம் செண்டிமெண்ட் அதிகமாக உள்ள பாகம் இது.
அடுத்து வோல்வரின் என்ற பாகம் வருகிறது.
எப்டீலாம் காசு பண்றாங்கப்பா.
ஒருமுறை பார்க்கலாம்.
அன்பன்
மது
படக்குழு
இயக்கம்
|
:
|
மாத்யூ வான்
|
|
சார்லஸ் ஸேவியர்
|
:
|
ஜேம்ஸ்
மெக்அவி
|
|
மாக்னீட்டொ/
எரிக்
|
:
|
மைக்கல்
ஃபாஸ்பெண்டர்
|
|
ஸேபாஸ்டின் ஷா
|
:
|
(வில்லன்) கெவின் பேக்கன்
|
|
ராவன்
|
:
|
ஜெனிபர்
லாரன்ஸ்
|
|
இசை
|
:
|
ஹென்றி
ஜாக்மான்
|
|
எடிட்டிங்
|
:
|
எடி ஹாமில்டன்
/ லி ஸ்மித்
|
|
காமிரா
|
:
|
ஜான்
மாத்திஸன்
|
Comments
Post a Comment
வருக வருக