கழிவு நீர் மறுசுழற்சி





கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தண்ணீர்ப் பற்றாக் குறையால் அவதிப்படும் நகர மக்க ளுக்கு ஒரு அருமையான தீர்வாக அமைய முடியும். கல்வாழைச் செடியின் (ஊயnயே யீடயவே) வேர்கள் நீரைச் சுத்தப்படுத்தித் தேக்கிவைக்கும் குணம் உடையவை. இதைப் பயன்படுத்தி சென்னை மாநகரக் குடியிருப்புவாசி கள் சிலர் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதில் வெற்றி கண்டு வருகின்றனர். உதாரணமாக, அடையார் காந்திநகரில் உள்ள எட்டு வீடுகள் கொண்ட ஒரு குடி யிருப்பு வற்றாத நிலத்தடிநீர் கிடைக்கும் சொர்க்க பூமியாக மாறியுள்ளது. இங்கு குளியலறை, வாஷ்பேசின் போன்ற வற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கல்வாழைச் செடிகளின் வேர்களுக்கு ஒரு பிவிசி குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. மண்ணில் இயற்கையாகவே இருக்கும் நுண்ணுயிரிகளும் கல்வாழை வேர் களும் சேர்ந்து கழிவு நீரைச் சுத்தப் படுத்தி நிலத்தடி நீராகச் சேமித்துவிடு கின்றன. இந்த முறை முற்றிலும் பாதுகாப்பானது; எளிமையானது. எங்களது நிலத்தடி நீர் வற்றுவதே இல்லை.
அதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவையும் எங்களுக்கு எழவில்லைஎன்கிறார் இந்தக் குடியிருப்பில் ஒரு வீட்டைக் கட்டி அதில் வசித்து வரும் வி.எஸ். சுகுமார்.இந்தக் குடியிருப்பின் ஒரு வீட்டில் சராசரியாக 920 லிட்டர் தண்ணீர் செல வழிகிறது. அதில் 50 - லிருந்து 60 சதம் வரை கழிவு நீராக வெளியேறு கிறது. ஆக, எட்டு வீடுகளும் சேர்ந்து ஒரு நாளைக்கு 4,000 லிட்டர் நீரை நிலத்தடி நீர்க்கணக்கில் சேர்த்து விடு கின்றன. டாக்டர் இந்துகாந்த் எஸ். ராகடே கழிவு நீர் மறுசுழற்சியில்  ஆர்வமாக இருக்கும் ஒரு வல்லுநர். இது குறித்து தண்ணீரில் சுயசார்பு என்ற நூலை எழுதியதோடு, சில குடியிருப்புகளில் ஜிடபிள்யுஆர் அமைப்பினை உருவாக்கியும் கொடுத் துள்ளார். போதிய மழையின்றி நிலத் தடி நீர் வற்றிப் போய் தண்ணீருக்காக மக்கள் ஆலாய்ப் பறக்கும் சூழலில் இத் தகைய தனிப்பட்ட சிலரின் முயற்சிகள் நம்பிக்கை தருவதாக உள்ளன. ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகள் கழிவு நீரை மறுசுழற்சி செய்து தண் ணீர்ப் பற்றாக்குறையை வெற்றிகர மாகச் சமாளித்துள்ளன. அமெரிக்கா வில் அரிசோனா, நியூ மெக்சிகோ போன்ற மாநிலங்கள் வரிவிலக்கு அளித்து ஜிடபிள்யுஆர் அமைப்பை ஏற்படுத்திக் கொள்வதை ஊக்கப்படுத்தி வருகின் றன. தமிழ்நாட்டில் இதைக் கட்டாயமாக் குவது பற்றி கூட பரிசீலிப்பது நல்லது. 2002 அக்டோபரில் மழைநீர் சேகரிப் பைக் கட்டாயமாக்கும்போது பிறப்பிக்கப் பட்ட சட்டம், கழிவு நீரை மறுசுழற்சி செய்து கழிப்பறைகளில் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டது. ஆனால் நடைமுறையில் ஜிடபிள்யுஆர் ஏற் படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வில்லை.
கல்வாழை, சுகந்தி  போன்ற தாவரங்கள் வேர்ப்பகுதியில் உள்ள மண்ணுக்கு ஆக்சிஜன் கிடைக்க உதவுகின்றன. இந்த ஆக்சிஜனைப் பயன்படுத்தி மண் ணில் உள்ள நுண்ணுயிரிகள் கழிவு நீரில் உள்ள கரிமப் பொருட்களை சிதைவடை யச் செய்து நீரைச் சுத்திகரித்து விடுகின் றனஎன்கிறார் ராகடே.செய்முறைசூரிய வெளிச்சம் ஓரளவுக்காவது கிடைக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு 2.5 சதுர அடி அளவுக்கு நிலப்பகுதி தேவைப்படும். ஓர் அடி இடைவெளி களில் கல்வாழைச் செடிகளை நட்டு, தண்ணீர் விடவேண்டும்.இரண்டு மாதங்களுக்கொரு முறை செடிகளைத் திருத்தி, செடிகளுக்கருகே மண்ணின் மேற்பரப்பில் சேர்ந்துவிடும் குப்பைகளை அகற்றிப் பராமரிக்க வேண்டும். மேலும் விவரங்கள் வேண்டுவோர் வி.எஸ். சுகுமார் (9840622611) அல்லது இந்துகாந்த் ராகடேயை  அணுகலாம்.(ஆதாரம் : ஜூலை 20 இந்து நாளிதழ் `ஹேபிடட்பகுதியில் ஹேமா விஜய் எழுதிய கட்டுரை)

நன்றி தீக்கதிர், மற்றும் திரு.குமரேசன் அசாக்

Comments