கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த

மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவனின் மனைவி, தன் கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த எண்ணினாள்.

ஒரு நடு இராத்திரிப் பொழுதில் பேய்போன்று உடைகளை அணிந்து முகமெல்லாம் பயங்கரமான தோற்றத்தை அளிப்பது போன்று தன்னை அலங்கரித்தாள்.

பேய் போன்று தன்னை உருவகப் படுத்திக் கொண்ட மனைவியானவள் தன் கணவன் வரும் வழியிலுள்ள ஒரு மரத்தின் பின்னே ஒழிந்திருந்தாள்.

கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் பாய்ந்து நின்றாள்.

எந்தவிதப் பயமும் இன்றிக் கணவன்: யார் நீ

மனைவி: நான் தான் பேய்!!

கணவன்: ஓ அப்படியா நல்லது என் கூட வீட்டுக்கு வா உங்க அக்கா ஒருத்தியை தான் நான் கல்யாணம் செஞ்சிருக்கேன் ..


source : https://www.facebook.com/Vidiyalainokkiyapayanam?ref=stream&hc_location=stream

Comments