உங்கள் கவலை அர்த்தமுள்ளது

#பாரம்பரியஅறிவு: இன்று ஒரு கிராமத்து நண்பர் என்னை பார்க்க வந்திருந்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சம்பவத்தை என்னோடு பகிர்ந்தார். ஆச்சர்யமாக இருந்தது . .. ஒரு நாள் அவர் தோட்டத்திற்கு மழை பெய்து முடித்த ஒரு மாலையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் பக்கத்து தோட்டத்தில் உழவு செய்து கொண்டிருந்த ஒரு டிராக்டர் இயந்திரம் குடைசாய்ந்துவிட்டதாம். ஓடிச்சென்ற இவரும் இவரது நண்பர்களும் உள்ளே அகப்பட்டிருந்த நண்பரை காப்பாற்ற டிராக்டரை நிமிர்த்தியிருக்கிறார்கள். அப்படி தூக்கும்போது இவரது கையால் தவறுதலாக ஒரு கம்பிக்கு பதில் மிகவும் சூடான புகைப்போக்கியை.. சைலன்சரை இறுகப்பிடித்துவிட்டாராம் . கை உடனே பூரி மாதிரி உப்பிவிட்டதாம். அவரும் எரிச்சல் தாங்க முடியாமல் வாய்விட்டு அலறியிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு பெரியவர் பதட்டப்படாமல் ஒரு அருவாளை வாங்கி அருகே இருந்த வாழைமரத்தை ஒரு வெட்டு வெட்டி அதன் தண்டுகளில் இருந்து வழிந்த பாலை அவரது கயில் ஊற்றி ஈரத்துணியால் கட்டியிருக்கிறார். ஒரு மணிநேரத்தில் அவரது கை எரிச்சல் தணிந்திருக்கிறது. அடுத்த நாள் காலை அவர் வைத்திருக்கும் ஊர் டீக்கடையை எப்படி திறப்பது.. இன்னும் ஒரு வாரகாலம் ஆகலாம் ஆஸ்பத்திரு சென்று சிகிச்சையெடுத்தால் என்று ஒரே யோசனையோடு அன்று இரவை கழித்திருக்கிறார். காலையில் ஈரத்துணியை கழற்றிப்பார்த்தால் அந்த புஸ் என்றிருந்த அவரது கை மிகவும் நார்மலாக எப்பொழுதும் போல இருந்திருக்கிறது. அவருக்கே ஆச்சர்யம். நிசந்தானா என்று கையை மடக்கி தேய்த்து பார்த்திருக்கிறார்.. ஒரு சிறிது கூட வலியோ வீக்கமோ இல்லையாம். நேராக கடைக்கு சென்றூ அன்றூ காலை 6 மணிக்கு அவரே பாய்லரின் மூலம் டீ போட்டதை பார்த்து ஊரே ஆச்சர்யப்பட்டதாம் ! இதையும் எந்த நாதாறியாவது பேட்டண்டு பண்ணிடப்போறாங்களோன்னு பயமாத்தான் இருக்கு ! 

ஓசை செல்வாவின் முகநூல் பக்கத்தில் இருந்து

Comments