ரௌத்திரம் பழகு... super Sureaka

திருச்சியிலிருந்து, சென்னைக்கு வரும் வழியில் இரவு 1 மணிக்கு, ஒரு உணவு விடுதியில் நின்றது வண்டி!
தூங்கிக்கொண்டிருந்தேன்.

“டம்” “டம்” “டம்” என்று பெரிய சப்தம்... கையில் ஒரு கம்புடன் ஒரு இளைஞன் பஸ்ஸைத் தட்டுகிறான். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த தம்பதியின் சிறு குழந்தை விழித்து...வீறென்று அழுதாள்..

இறங்கினேன்.
அந்த இளைஞன் அருகில் சென்றேன்.

அவன் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.

அடுத்த பஸ்ஸை அடிக்கச் சென்றுகொண்டிருந்தான்.

மெதுவாக நெருங்கினேன்.

முதுகில் ஒன்று பளீரென்று வைத்தேன்.

திரும்பினான்.

குச்சியைப் பிடுங்கினேன்.

சிரித்துக்கொண்டே சொன்னேன்..

“உனக்கு உதவலாம்னு...பஸ்ஸைத்தட்டுறதா நெனச்சு தட்டிட்டேண்டா தம்பி” ஸாரி!.. பேசிக்கொண்டே குச்சியை உடைத்தேன்.

இனிமே பஸ்ஸைத் தட்டுறதைப் பாத்தேன்...செத்த!

இப்போது கூட்டம் கூடியது. சிறு சலசலப்பு! ஒன்றும் எனக்கு எதிராக நடந்துவிடவில்லை...!!

அத்தனை புரட்சியாளர்களும் கத்தினார்கள்..
“அப்படித்தான் செய்யணும்.. நானே நினைச்சேன் . நீங்க செஞ்சுட்டீங்க!”

திரும்பும்போது..அதே நேரம்..அதே ஹோட்டல்.. இப்போது ..பஸ் வாசலில் நின்று கத்திக்கொண்டிருந்தான்...!!
 
from : https://www.facebook.com/micro.sundar?hc_location=stream

Comments

  1. கஸ்தூரி, நம்ம சுந்தர் புதுக்கோட்டைக்காரர் தெரியுமோ?
    அண்மையில் (செப்.1 அன்று) சென்னையில் நடந்த தமிழ்ப்பதிவர் திருவிழாவிற்கு எதிர்பாராத விதமாக நான் கலந்துகொள்ளச் சென்றபோது, அங்கு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த இளைஞர் குழுவில் நம் சுந்தர்! எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது... அந்த மகிழ்ச்சியை அவரும் ஒலிபெருக்கியிலேயே பகிர்ந்து கொண்டார் என்பது எனக்கும் மகிழ்வே.. அவரது முகநூல் பகிர்வை நீங்கள் பகிர்ந்து கொண்டது குறித்து எனது மகிழ்வை நான் பகிர்ந்து கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நான் ஜே சி இயக்கத்தில் இணைந்த அன்று அவரை பார்த்தேன்... அவர் ஒரு சீனியர் ஜே சி ... நல்ல பயிற்சியாளர் ....
      நல்ல நண்பர்... சுந்தரின் கவிதைகள் ஒருமுறை ஆனந்த விகடனில் வந்தது... உங்கள் தங்கைக்கு மிகவும் பிடித்த வரிகளுடன் ... குழந்தையின் சேட்டை குறித்த கவிதை...

      Delete

Post a Comment

வருக வருக