ரிவைண்ட் .... எப் பி... 2

மனிதன் ஒரு சமூக விலங்கு. எப்போதும் இவனுக்கு யாருடைய அண்மையோ, ஆதரவோ அல்லது இவையேதும் கிடைக்காத பட்சத்தில் வெறுப்போ தேவைப்படுகிறது. பிராணவாயு மட்டும் தேவை என்று இருப்பவர்கள் இரண்டு பேர் ஒருவர் ஞானி , இன்னொருவர் பைத்தியக்காரர்.


சமூக வலைதளங்களில்இதன் நீட்சியை பார்க்கமுடியும்.சிக்ஸ்டிகிரீஸ் டாட் காம் பூம் காலத்தில் வந்து டாட் காம் டூம் என்று முடிதுபோன கதை. இந்த திவாலான நிறுவனத்தையே நூற்று இருவது கோடி டாலர்களுக்கு வாங்கியிருக்கிறார்கள்! ஆனால் இன்று வரை செயல்படவில்லை.

ஒரு தோல்வியோடு ஓய்ந்து போவது தொழில்நுட்பம் கிடையாதே. சமூக வலைத்தளங்கள் வந்தவண்ணம் இருந்தன. மேக்அவுட்க்ளப் (2000), ஹப்கல்ச்சர், ப்ரன்ஸ்டர் (2002), மைஸ்பேஸ், லிங்க்ட்இன், பிபோ என்று ஏகப்பட்ட சமூக வலைதளங்கள். ஒரு கட்டத்தில் மைஸ்பேஸ் கூகுளை விட அதிகம் முறை பார்க்கப்படும் தளமாக இருந்தது.பேஸ்புக் உலகின் பிரமாண்டமான சமூக வலைத்தளம் 2009 இல் துவங்கப் பட்டு இன்று வரை அசைக்க முடியாமல் இருக்கும் தளம்.


இதற்கு முன்னால் துவக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான சமூக வலைத்தளம் ஆர்குட். இது 2004லில் கூகிள் நிறுவனத்தால் துவக்கப்பட்டு வெகு விரைவாக வெற்றிபெற்ற தளம். பேஸ்புக் வரவிற்கு முன்னால் இதுமட்டுமே தனிக்காட்டு ராஜாவாக இருந்தது.
ஆர்குட்டில் பாதுகாப்பு காரணிகள் என்ற பெயரில் மவுசை ஒருமுறை அசைத்தாலே ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டு ரத்தஅழுத்தத்தை ஏகத்துக்கும் உயர்த்தும். பங்காளி மார்க் இதனை கவனித்திருக்க வேண்டும்.

ஒரு நல்ல படம் உங்கள் நண்பரின் கணக்கில் இருக்கிறது அதை சாமான்யமாக நீங்கள் காபி செய்ய முடியாது. நிறய வேரிபிக்கேசன் நிலைகளுக்கு பின்னரே அது சாத்தியம்.


மார்க் இந்த குறைப்பாட்டை (?) தனது பேஸ்புக் தளத்தில் சரிசெய்தார்(?). யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமாலும் செல்ல, விரும்பும் படத்தை சுட வாய்ப்பினை கொடுத்தார். இன்ஸ்டன்ட் ஹிட்!


இன்று நமது நேரத்தை பெருமளவு சாப்பிடும் ஒரு தளமாக பேஸ்புக் மாறிவிட்டது, எகிப்தில் ஒரு சர்வாதிகாரியின் டவுசரை கழட்டி ஓடவிட்டிருகிறது. லண்டனில் மாணவர்களை ஒன்றிணைத்து காவல்துறையை மூச்சா போக வைக்கும் அளவிற்கு ஒரு பிரமாண்டமான பேரணியை நடத்த வைத்திருக்கிறது.


நாம என்ன செய்றோம் ?


அடுத்த பதிவில் ...


அன்பன்

மது


*****************

Thara Bharathi, Tamil Poet
Tharaa Bharathi

Comments

  1. தகவல்களை அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. பதிவை இட்ட பத்து நிமிடங்களில் இப்படி ஒரு ஊக்கமூட்டும் பின்னூட்டம் ஆகா அய்யா எப்படி நீங்கள் இனைய உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கீங்க என்பது புரிகிறது...

      Delete

Post a Comment

வருக வருக