இரண்டு இரண்டு இரண்டு...




அருமையாய் படிக்கும் மாணவர்கள் கூட வாழ்வின் சில தருணங்களில் தடுமாறி குழம்புவர். மனவெழுச்சிகளாலும், அழுத்தங்களாலும் பாதிக்கப்படும் இளம் குழந்தைகள்தான் எத்துனை எத்துனை பேர்.



இதை மனதில் கொண்டு உலக சுகாதார நிறுவனம் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சியை தருவதின் அவசியத்தை வலியுறுத்தி ஒரு நீண்ட திறன் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.

இந்த திறன்களை மாணவர்களிடம் வளர்ப்பதில் கல்வியாளர்களுக்கு ஒரு தனித்த பங்கும் அக்கறையும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தலைமை ஆசிரியர் திரு.நல்லமுகமது. அவர் தலைமையேற்று நடத்தும் திருப்புவனம் அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் கடந்த 12.10.2013 சனிக்கிழமை அன்று குழந்தைகளுக்கான வாழ்வியல் திறன் பயிற்சிகள் நிகில் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இது இந்த நிறுவனத்தின் 222வது பயிற்சி என்பது சிறப்பு. இதுவரை 86899 மாணவர்களின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த அமைப்பு. நிகில் குறித்து படிக்க கிளிக்கவும்


தலைமைப் பயிற்சியாளர் :ஜே.சி.ஐ. சென்.எஸ். நாகலிங்கம் அவர்களின் சீரிய தலைமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிறுவனத்தின் சேர்மன் திருமதி. மலர்க்கொடி நாகலிங்கம் தனது உடல்நலனை கருத்தில் கொள்ளாது கலந்து கொண்டார். இந்தமாதிரி பயிற்சிகள் வழங்குவது தனது மனதிற்கு தெம்பையும் இயங்கும் சக்தியையும் தருகிறதாக சொன்னார்.

நானும் ஒரு பயிற்சியாளராக கலந்துகொண்டது எனக்கு மனநிறைவை தரும் அனுபவமாக இருந்தது.

வழங்கப்பட்ட பயிற்சிகள் 

சுயபகுப்பாய்வு,  இலக்கமைதல், நினைவாற்றல், திறன் மிகு தொடர்பாற்றல்,
நேர மேலாண்மை, மனித விழுமியங்கள், முடிவெடுத்தல், மற்றும் தலைமைப்பண்பு


பயிற்சியாளர்கள்

 ஜே.சி.ஐ நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மண்டல மற்றும் தேசிய பயிற்சியாளர்கள் திரு.வைகை விஸ்வநாதன், திரு.முருகராஜ், , திரு.தீனதயாளான்,  திருமதி. ராதா அஸ்வத், திரு. சபாபதி , திரு. ஜீத்,, திரு.தணிகை வேல் பாண்டியன், திரு. அஸ்வத்,  பேரா. ராம்ப்ரசாத் , திரு.வி.ஆர். நடராஜன்,திரு. தயா, திரு.அன்பழகன், திரு.எஸ்.பி. குமரகுரு, திரு.ரவி , திரு.பாண்டியராஜன், திரு.ஆதித்தன், திரு. பாஸ்கரன்

தங்கள் ஒரு சனிக்கிழமையை மாணவர் நலனுக்காய் செலவிட்ட இப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்கு உரியர்வர்கள். உங்கள் பள்ளியிலும் இந்தப் பயிற்சி நடைபெற தொடர்பு கொள்ளவும்.

அஞ்சல் முகவரி: 
நிகில் பவுண்டேசன்
1/759, நக்கீரர் தெரு,
பாரத் நகர்,
திருப்பாலை,
மதுரை 14
தொலைபேசி: (0452)2680200
அலைபேசி : 9003659270
மின்னஞ்சல் : nikhilfoundation@yahoo.co.in
வலைத்தளம்  : www.nikhilfoundationmadurai.org
நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு. 80G சான்று பெற்ற நிறுவனம்.








நன்றி நண்பர்களே

அன்பன்
மது

Comments

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  2. நல்ல பணி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெற்றி..

      Delete
  3. thank you Kasthoori. What a great contribution from one of the family members of Nikhil Foundation.
    Nagalingam

    ReplyDelete
    Replies
    1. நிகில் குடும்ப உறுப்பிணன் என்ற பெருமை எப்போதும் எனக்கு உண்டு.. நிறுவனருக்கு மிக்க நன்றி

      Delete
  4. Thanks Kasthoori. The foundation is indebted to you.

    ReplyDelete
    Replies
    1. நான் எவ்வளவு கடமை பட்டிருக்கிறேன் என்பது ... வார்த்தையில் சொல்லிவிட முடியாது... நன்றி...

      Delete
  5. ஆகா! இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி சகோததரே.. அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.. 222 அசத்தல் சகோததர். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பள்ளிக்கு அழைக்க விருப்பமா சகோ...
      நாங்கள் வர ரெடி ஆனால் ஒரு சனிக்கிழமை விடுமுறை போய்விடும்..

      Delete
    2. தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்களோடு கலந்து பேசி நிச்சயம் சொல்கிறேன் சகோ. தங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

      Delete

Post a Comment

வருக வருக